பெண் வன்கொடுமை என் பது இந்தியா மட்டு மல்ல, சர்வதேச சமூகமே எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சனை. இன்னொருபுறம், போதையால் குடும் பங்கள் சீரழிவதும், அரசே அதை ஊக்குவிப்பதும் பெருங்கொடுமை.

இந்த இரண்டு பிரச்சனை களை மையமாகக் கொண்டு, "வன்முறையற்ற தமிழகம், போதை யில்லா தமிழகம்' என்ற முழக் கத்துடன், மாபெரும் நடைபயணத்தை மேற்கொண்டுள்ளனர் அனைத்திந்திய மாதர் சங்கத் தைச் சேர்ந்த சிங்கப்பெண்கள்.

ss

தேசிய வன்முறை எதிர்ப்பு நாளான நவம்பர் 25-ந்தேதி, வடலூர் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து இரண்டு குழுக்களாக நடைபயணம் தொடங்கியது. வடலூர் குழுவிற்கு சி.பி.எம். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாதர் சங்க மாநிலச் செயலாளர் சுகந்தி, திருவண்ணாமலை குழுவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் திண்டுக்கல் பாலபாரதி, மாதர் சங்க மாநிலத் தலைவர் வேலண்டினா தலைமைதாங்க, ஆடல் பாடலுடன் நூற்றுக்கணக் கான பெண்கள் நடக்கின்றனர்.

Advertisment

புதுச்சேரியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சகுந்தலா என்கிற மூதாட்டி, பெண்களைப் பார்த்து நடை பயணம் பற்றி விசாரித்தார். நோக்கத்தை அறிந்த அடுத்த நொடியே, குடியால் தன் குடும்பம் கெட்டு நடுத்தெருவுக்கு வந்ததை எண்ணி அழுதவர், தம்மால் வரமுடியாததை எண்ணி வருந்தி, பெண்களின் காலில் விழுந்து வணங்குவதாக வாழ்த்தி வழியனுப்பினார்.

இந்த நடைபயணத்திற்கான திட்டம் வகுத்தபோது, பெண்களுக்கான பாதுகாப்பு சிக்கல்களைக் குறிப்பிட்டு தயங்கியது சி.பி.எம். மாநிலக்குழு. ஆனாலும், மாதவிடாய், உடல் உபாதைகள் என எல்லாவற்றையும் கடந்து சி.பி.எம்.மின் செந்தொண்டர் பேரணிக்கு இணையாக, சிவப்பு நிற சீருடை அணிந்த பெண் தோழர்கள் தொடர் அடைமழையிலும் பயணத்தைத் தொடர்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்ட விவசாயிகளுக்காக, தன்னார்வலர் கள் உணவு வழங்கியதைப் போலவே, மாதர் சங்க பெண் களுக்கு பல இடங்களில் உணவு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி னார்கள் பொதுமக்கள்.

இரண்டு குழுக்களையும் சேர்த்து, மொத்தமாக 400 கி.மீ. தூரத்திற்கு மேற்கொள்ளப்படும் இந்த நடைபயணம், டிசம்பர் 04-ந்தேதி சென்னை கோட்டை யை முற்றுகையிடுவதோடு நிறைவடைகிறது. தமிழக காவல்துறை உயரதிகாரிகள், முற்றுகை நடத்தக்கூடாது. அந்த எண்ணத்தில் நுழைந் தால், சென்னைக்குள் அனு மதிக்க மாட்டோம் என அழுத் தம் கொடுப்பதாக தகவல் கசிகிறது.

Advertisment

இருப்பினும், தெலுங்கானா, காஞ்சிபுரம், கோவை என வரிசையாக பெண்கள் கொடூர மான முறையில் சித்தரவதை களை அனுபவித்துவரும் நிலையில், எங்கள் நடை பயணத்தின் நோக்கம் வெற்றி பெறாமல் ஓயமாட்டோம் என முன்னேறுகிறார்கள் பெண் தோழர்கள்.

-காளிதாஸ், மதி