Advertisment

சீமான் -பாலா அண்ணன், தம்பி உறவுகள்! -இயக்குநர் -நடிகர் அமீர் பளிச்!

cc

யக்குநர் மற்றும் நடிகரான அமீர் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடித்த "உயிர் தமிழுக்கு' படம், கடந்த 10ஆம் தேதி வெளியானது. இப்படம் தொடர்பாக அவரிடம் பிரத்யேகமாக நக்கீரன் பேட்டி கண்டது. இந்தப் பேட்டியில் அவர், திரைப்படத்தைத் தாண்டி நட்பு வட்டாரம், அரசியல் பார்வை எனப் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

உங்களை சுத்தி ஆயிரம் டென்ஷன் போயிட்டு இருக்கு. ஆனாலும் எனர்ஜி குறையாம இருக்கீங்களே...?

Advertisment

எந்த டென்ஷனையும் தலையில ஏத்திக்கிறதில்ல. ஒரு பிரச்சினையை நினைச்சுக்கிட்டு அதுக்குள்ளயே முடங்கிக் கிடந்தால், நம்முடைய எதிர்த்தரப்பு வெற்றிபெற்றதாக மாறி விடும். அதனால நம்மள எப்போதுமே வருத்தத்தில வச்சிக்கக்கூடாது. அதேசமயம், இங்க நடப்பது எதுவும் புதுசு இல்லை. வாழ்க்கையில் ஒவ்வொன்னும் அனுபவம்தான். தினமும் புதுசா புதுசா பாத்துட்டு இருக்கோ

யக்குநர் மற்றும் நடிகரான அமீர் முதன்மைக் கதா பாத்திரத்தில் நடித்த "உயிர் தமிழுக்கு' படம், கடந்த 10ஆம் தேதி வெளியானது. இப்படம் தொடர்பாக அவரிடம் பிரத்யேகமாக நக்கீரன் பேட்டி கண்டது. இந்தப் பேட்டியில் அவர், திரைப்படத்தைத் தாண்டி நட்பு வட்டாரம், அரசியல் பார்வை எனப் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

உங்களை சுத்தி ஆயிரம் டென்ஷன் போயிட்டு இருக்கு. ஆனாலும் எனர்ஜி குறையாம இருக்கீங்களே...?

Advertisment

எந்த டென்ஷனையும் தலையில ஏத்திக்கிறதில்ல. ஒரு பிரச்சினையை நினைச்சுக்கிட்டு அதுக்குள்ளயே முடங்கிக் கிடந்தால், நம்முடைய எதிர்த்தரப்பு வெற்றிபெற்றதாக மாறி விடும். அதனால நம்மள எப்போதுமே வருத்தத்தில வச்சிக்கக்கூடாது. அதேசமயம், இங்க நடப்பது எதுவும் புதுசு இல்லை. வாழ்க்கையில் ஒவ்வொன்னும் அனுபவம்தான். தினமும் புதுசா புதுசா பாத்துட்டு இருக்கோம். அதுல இதுவும் ஒண்ணு.

cc

உங்க பிரச்சினைகளை கடந்துபோக ஆன்மீகமும் அதன் தத்துவங்களும் உதவுகிறதா?

அதுதான் எனக்கு பெரிய கேடயமே. அது இல்லைன்னா நான் உடைஞ்சிடுவேன். பொதுவாகவே என்னுடைய குடும்பம், நண்பர்கள் என அனைவரும் எதையுமே ரொம்ப சீரியஸா எடுத்துக்கமாட்டாங்க. நிறைய மரணங்களை நான் பார்த்த வன். வாழ்க்கை என்பது நிலையற்றது. அதில் பிரச்சினைகள் மட்டும் எப்படி நிலையானதா இருக்க முடியும்? எல்லாத்துக்கும் தீர்வு இருக்கும் போது பிரச்சினைக்கும் கண்டிப்பா தீர்வு இருக்கும். அந்தத் தீர்வை தேர்ந்தெடுத்தோமா என்றுதான் பார்க்க வேண்டும். நான் அதை தேர்ந்தெடுத்திருக்கிறேன். முதலில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொண்டுவிட்டால், அதைக் கடந்துவிடலாம். பதறினால் கடக்க முடியாது.

சீமான் மற்றும் பாலாவுடன் ஏற்பட்ட இடைவெளி குறித்து...

பாலாவுடன் ஏற்பட்ட இடைவெளி, சினிமா எனும் மாயையால் உருவானது. ஒரு இயக்குநர் இப்படித்தான் இருப்பார், நடிகர் இப்படித்தான் இருப்பார் என பிம்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது எதுவுமே அவர்களுடைய ஒரிஜினல் கேரக்டர் கிடையாது. வீட்டில் என்னவாக இருக் கிறார்களோ அதுதான் அவர்களுடைய ஒரிஜினல். இங்கு அவர்களின் பிம்பம், பொதுவெளியில் அவர்கள் பெற்றிருக்கிற வெற்றியை வைத்தும், சம்பளத்தை வைத் தும், வியாபாரத்தை வைத்தும் கட் டமைக்கப்பட்டிருக்கிறது. அதை ஏற் காமல்தான் நானும் பாலாவும் பிரிந் தோம். பாலா இப்போதும், என்னுடைய அண்ணனுடன் பேசுவார். நானும் அவருடைய குடும்பதினருடன் பேசு வேன். சினிமாவில் மட்டும்தான் அவருடன் உறவில்லை.

ஆனால் சீமானுடன் ஏற்பட்ட இடைவெளி, அரசியல் ரீதியான கருத்து முரண்கள். ஒருவேளை நான் சொன்னது நாளைக்கு சரியாக இருக்கலாம். அவர் சொன்னதும்கூட நிஜமாக இருக்கலாம். இதைக் காலம்தான் முடிவு செய்யும். பிரிந்தோமே தவிர உறவே இல்லாமல் இல்லை. சீமானுடனும் இன்னமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அண்ணன், தம்பி உறவுகளிலிருந்து நான் விலகவில்லை. அரசியல் எங்களைப் பிரித்து வைத்துள்ளது. எது சரி, தப்பு என்று காலம்தான் முடிவு பண்ணும்.

தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், நாங்கள் தமிழர்கள்தான் என்ற உணர்வை வெளிப் படுத்தக்கூடிய கட்டாயம் உள்ளதா? அப்படி வெளிப்படுத்த முடியாத பட்சத்தில் பொது நீரோட்டத்தில் சேர்த்துக்கொள்ளாத ஆபத்து இருப்பதாக நினைக்கிறீங்களா?

இந்தப் பிரச்சினை தேசிய நீரோட்டத்திலும் இருக்கு. இங்கு ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்தி வச்சிருக்காங்க. அதாவது, இஸ்லாமியர் என்பதும், இஸ்லாமிய மார்க்கம் என்பதும் இந்த மண்ணுக்கான மார்க்கம் இல்லை. அவங்க இந்த மண்ணோடும் மொழியோடும் தொடர்பு உள்ளவங்க கிடையாதுன்னு சொல்றாங்க. இது ஒரு மனநோய். அந்த நோய்க்கு எப்படி நான் மருந்து கொடுக்க முடியும்? அந்த மனநோயை பள்ளியிலிருந்தே இங்கு வளர்க்கிறாங்க. அதிக ஒலி எழுப்பி மக்களுக்கு கேடு விளைவிக்கிற விஷயத்தில் பள்ளிவாசலில் எழுப்பும் பாங்கு சத்தமும் ஒன்னுன்னு சொல்லிக் கொடுத்தீங்கன்னா, அவன் எப்படி அந்த நோயிலிருந்து மீண்டு வருவான். நோய் இன்னும் கூடத்தான் செய்யும். அதக் கூட்டுகிற வேலையைத் தான் இங்க இருக்கிற அரசியலும், ஆட்சியாளர்களும் செஞ்சிட்டு வராங்க. அதனால் இது மாறவே மாறாது. கூடிக்கொண்டு தான் இருக்கும். சினிமா துறையிலும் இது கூடிக்கிட்டு இருக்கு. அதற்கு காரணம் அரசியல் அழுத்தம். எந்த ஒரு தத்துவமும் நாளுக்குநாள் தேயாது, கூடத்தான் செய்யும். அதாவது வளர்ந்து வீழ்ச்சியடையுமே தவிர வளரவே வளராது என சொல்லமுடியாது. வளர்ப்பது வேண்டுமானால் அரசியல்வாதியாக இருக்கலாம். வீழ்த்துவது மக்களாக இருப்பார்கள்.

-சந்திப்பு: வசந்த் பாலகிருஷ்ணன்

தொகுப்பு: -கவிதாசன் ஜெ.

nkn150524
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe