சாராயப் பெண்மணியால் ஆய்வாளருக்கு வந்த சோதனை!
கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி சோதனைச்சாவடியில், மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த பொலீரோ காரை ஓட்டிவந்தவர், போலீசாரைக் கண்டதும் காரை விட்டுவிட்டு தப்பியோடினார். காரில் 144 மதுபாட்டில்கள், 30 லிட்டர் சாராயத்தோடு ஒரு பெண் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது, "என் பெயர் சமுத்திரக்கனி. விழுப்புரம் சங்கராபுரத்தில் கணவருடன் கூலிவேலை செய்தபடியே, புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக வாங்கிவந்து அதிகவிலைக்கு விற்பனை செய்துவந்தோம். கணவர் இறந்துவிட்ட நிலையில், சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தில் வசித்துவருகிறேன்.
விழுப்புரத்தில் இருந்தபோது, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த சுந்தரேசனுடன் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம், சாராயம் கடத்துவதில் ஒத்தாசையாக இருந்தார். தற்போது அவர் கடலூருக்கு மாறுதலாகி சென்றுவிட்டதால், நேரில் சந்தித்து குடும்பச் சூழலை விவரித்தேன். புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றவர், சாராயம் வாங்கிவரும் வ
சாராயப் பெண்மணியால் ஆய்வாளருக்கு வந்த சோதனை!
கடலூர் உண்ணாமலை செட்டிச்சாவடி சோதனைச்சாவடியில், மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து வந்த பொலீரோ காரை ஓட்டிவந்தவர், போலீசாரைக் கண்டதும் காரை விட்டுவிட்டு தப்பியோடினார். காரில் 144 மதுபாட்டில்கள், 30 லிட்டர் சாராயத்தோடு ஒரு பெண் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையின்போது, "என் பெயர் சமுத்திரக்கனி. விழுப்புரம் சங்கராபுரத்தில் கணவருடன் கூலிவேலை செய்தபடியே, புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை திருட்டுத்தனமாக வாங்கிவந்து அதிகவிலைக்கு விற்பனை செய்துவந்தோம். கணவர் இறந்துவிட்ட நிலையில், சீர்காழி அடுத்த சட்டநாதபுரத்தில் வசித்துவருகிறேன்.
விழுப்புரத்தில் இருந்தபோது, குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளராக இருந்த சுந்தரேசனுடன் ஏற்பட்ட பழக்கத்தின் மூலம், சாராயம் கடத்துவதில் ஒத்தாசையாக இருந்தார். தற்போது அவர் கடலூருக்கு மாறுதலாகி சென்றுவிட்டதால், நேரில் சந்தித்து குடும்பச் சூழலை விவரித்தேன். புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றவர், சாராயம் வாங்கிவரும் வழியில், போலீசாரைக் கண்டதும் தப்பியோடிவிட்டார்''’என்று கூறியுள்ளார்.
கடலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஆய்வாளராக பணிபுரிந்துவந்த சுந்தரேசன், தனது ஆய்வாளர் பதவி பவரை வைத்து சமுத்திரக்கனியின் சாராய பிசினஸிற்கு பெரியளவில் உதவி வந்திருக்கிறார். இதுதவிர சுந்தரேசன் மீது ஏராளமான புகார்கள் குவிந்ததால், விழுப்புரத்தில் இருந்து கோவைக்கும் பிறகு கடலூருக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டார். கடலூருக்கு வந்தும் அடங்கவில்லை. உள்ளூர் போலீசாரிடம் சிக்கினால் அவமானம் என்று எண்ணி தப்பித்து, வசமாக சிக்கிக்கொண்டார்’என்கிறது போலீஸ் வட்டாரம்.
தற்போது உயரதிகாரிகளின் உத்தரவின்பேரில் சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுவே சாமான்யன் என்றால் கழிவறையில் வழுக்கிவிழுந்து எலும்புமுறிவு ஏற்பட்டிருக்கும்.
-சுந்தரபாண்டியன்
பொதுத்தேர்வுக்கு முன் ஆசிரியர் வருவாரா?
தமிழ்நாட்டில் இருக்கும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மொத்தம் 5,317. இந்தப் பள்ளிகளில் 2019, மே 31-ந் தேதிப்படி பணிஓய்வு மற்றும் பதவி உயர்வின் மூலம் காலியான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் 2,144. பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தும், இந்தப் பணியிடங்களை நிரப்பாமல் காலம் தாழ்த்துகிறது அரசு.
தரமான கல்வி கிடைத்திட மிகச்சிறப்பான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது என்று மார்தட்டிக் கொள்கிறது பள்ளிக்கல்வித்துறை. அதேவேளையில், பாடம் நடத்த போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் தத்தளிக்கின்றனர் மாணவர்கள்.
இயற்பியல், வேதியியல் என அந்தந்த பாடப்பிரிவுகளுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுவார்களா என்கிற அச்சம் வருகிறபோது, எங்கிருந்து பிள்ளைகளை நீட்தேர்வுக்கு தயார்படுத்துவது என்று கொந்தளிக்கிறார்கள் பெற்றோர்கள்.
இதுபற்றி தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் பேசுகையில், “""வருகிற செப். 15-ந் தேதி காலாண்டுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன. ஆனால் 2,144 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான தேர்வு செப்.27-ல் தொடங்கி செப்.29 வரை நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்குள் பொதுத்தேர்வே வந்துவிடும் என்று அச்சப்படுகிறார்கள் பெற்றோர்கள்.
மேலும், கடந்த மூன்று, நான்காண்டுகளாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்''’என்று வலியுறுத்துகிறார்.
மாணவர்களின் எதிர்காலத்தில் அரசு மெத்தனம் காட்டக்கூடாது.
-அ.அருண்பாண்டியன்
புவிசார் குறியீடால் தப்புமா பஞ்சாமிர்தம்!
பழனியாண்டவரைப் போலவே பழனி பஞ்சாமிர்தம் உலக பேமஸ். முருகப் பெருமானை தரிசிக்கும் பக்தர்கள், தவறாமல் பஞ்சாமிர்தம் வாங்கிச் செல்வது வழக்கம். இதற்காகவே மலைக்கோவில் அடிவாரம், வின்ச், ரோப்கார் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஸ்டால்களை அமைத்து பஞ்சாமிர்தம் விற்பனை செய்கிறது திருக்கோவில் நிர்வாகம்.
இந்நிலையில், பழனி முருகன் திருக்கோவிலின் சார்பில், உலகப்பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கக்கோரிய கோரிக்கையை ஏற்றது புவிசார் குறியீடு அமைப்பு. இதன்மூலம், பழனி பஞ்சாமிர்தம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது.
கோவில் நிர்வாகம் இயந்திரம் கொண்டு, தரமான பொருட்களின் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கிறது. அதேசமயம், சில தனியார் நிறுவனங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரிப்பதால், ஓரிரு நாட்களிலேயே வாடை அடித்து, பொங்கி கெட்டுவிடக்கூடிய நிலை இருக்கிறது. எனவே, புவிசார் குறியீடை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக வருந்துகிறார்கள் பழனிக்கு வரும் பக்தர்கள்.
"சபரிமலை அரவணை பாயசம், திருப்பதி லட்டுக்கு பில் கொடுப்பதுபோல பழனி பஞ்சாமிர்தத்திற்கும் பில்போட்டு கொடுத்தால் முறைகேடுகளை தடுக்கமுடியும்' என்கிறார் இந்து முன்னணி மாவட்ட செயலாளரான பழனியைச் சேர்ந்த ஜெகன்.
மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியான நடராஜிடம் கேட்டபோது, “""இந்த புவிசார் குறியீடு அந்தஸ்து தேவஸ்தான பஞ்சாமிர்தத்திற்கு மட்டுமே. தனியார் கடைகளுக்கு பொருந்தாது. குடிசைத்தொழில் என்ற பெயரிலும் பலர் தயாரிக்கின்றனர். அவர்கள் முறையாக தயாரிக்கிறார்களா என்பதை தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறோம். கெமிக்கல்கள் கலப்படம் செய்யப்படுகிறதா என்பதையும் ஆய்வுகள் மூலம் கண்காணிக்கிறோம்''’என்றார்.
-சக்தி