காஷ்மீரைப் பேசினால் எச்சரிக்கை நோட்டீஸ்!

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில், பல்வேறு தலைப்புகளின்கீழ் மாணவர்கள் விவாதம் செய்வது வழக்கம்.

ss

அந்தவகையில், சர்வதேச அளவில் விவாதப் பொருளாகியிருக்கும் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது தொடர்பாக, ஆகஸ்ட் 07-ந் தேதி நடைபெற்ற விவாதத்தில், "காஷ்மீரின் வரலாறு, சிறப்புப் பிரிவு 370 ரத்தால் ஏற்படும் விளைவுகள்' என்ற தலைப்பில் மாணவர்கள் விவாதித் துள்ளனர்.

Advertisment

இதையறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், ஏழு மாணவிகள் உட்பட, 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, "உங்களுக்குப் பின்னால் யார் செயல்படுகிறார்கள். காஷ்மீர் விவகாரம் குறித்து எதற்காகப் பேசினீர்கள்' என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

மாணவர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, ""மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்தோ, எதிர்த்தோ நாங்கள் விவாதிக்கவில்லை. வரலாறு, புவியியல், பொதுஅறிவு போன்ற தலைப்புகளில், அப்போதைய மைய பிரச்சனையாக இருந்த காஷ்மீர் விவகாரத்தை பொதுஅறிவு தலைப்பின்கீழ் விவாதித்தோம். பல்கலை நிர்வாகமோ எங்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்கு கிறது'' என்றனர்.

""திருவாரூரில் இருந்தாலும், மத்தியப் பல்கலைக்கழகம் என்பதால் வடமாநிலத்தவரின் ஆதிக்கம் அதிகம். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்தான தினமே, வடமாநில மாணவர்கள், பேராசிரியர்கள் துணையோடு பட்டாசு வெடித்தார்கள். அவர்களை விட்டுவிட்டு, விவாதம்செய்த மாணவர்களிடம் விளக்கம் கேட்கிறார்கள்'' என்கிறது பேராசிரியர்கள் வட்டம்

Advertisment

பல்கலைக்கழக பதிவாளர் புவனேஷ்வரியோ, ""காஷ்மீர் விவகாரம் குறித்தும், அதை எதிர்க்கிற வகையிலும் பல்கலை சுவர்களில் நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக தெரிகிறது. அதுகுறித்து மூன்று நாட்களில் விளக்கமளிக்க கேட்டுள்ளோம்'' என்கிறார். விளக்கமா, எச்சரிக்கையா என்பது இனி தெரியும்.

-செல்வகுமார்

குடிபோதை கலெக்டரை மீட்க களமிறங்கிய அதிகாரிகள்!

ssகேரள மாநிலத்தில், ஸ்ரீராம் வெங்கட்ராமன் ஐ.ஏ. எஸ்., மதுபோதையில் ஓட்டிய கார், சிராஜ் பத்திரிகையின் முதன்மை நிருபர் முகம்மது பஷீரின் டூவீலரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஷீர் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனார்.

விபத்துநடந்த இடத்திற்கு விரைந்துவந்த மியூசியம் ஜங்ஷன் எஸ்.ஐ.ஜெயப்பிரகாஷ், வெங்கட்ராமனை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார். அதற்குள் சுதாரித்துக்கொண்ட வெங்கட் ராமன், தன்னுடைய ஐ.ஏ.எஸ். கேரியரே பாழாகிவிடுமே என்ற அச்சத்தில் சக ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் முறையிட்டார். அங்கிருந்து தான், உயர்மட்ட அதிகாரி களின் கேம் ப்ளே ஆரம்ப மானது.

அவர்கள் கொடுத்த அழுத்தத்தால், வெங்கட்ராமன் மது அருந்தியிருக்கிறாரா என்பதை சோதனை செய் யாமல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுறுத்தியுள்ளனர் மருத்து வர்கள். கிடைத்த நேரத்தை வீணடிக்காமல் தனியார் செவன்ஸ்டார் கிம்ஸ் மருத் துவமனையில் அட்மிட்டாகி, ரத்தத்திலிருந்த ஆல்கஹாலை அகற்றும் ட்ரீட்மெண்டை மேற்கொண்டார். பத்துமணி நேரத்திற்குப் பின்னர் திருவனந்த புரம் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் சாவகாசமாக அட்மிட்டானார் வெங்கட்ராமன்.

இதனால், அவர் மது அருந்தினார் என்பதை, அவ ருடன் காரில் உடனிருந்த மாடல் அழகி வாஃபா ஃபெரோஸ் நீதிபதியிடம் வாக்குமூலமாகக் கூறியும், அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள்கூட செய் யாமல் விட்டதால் நிரூபிக்க முடியவில்லை.

இதைவைத்து, 14 நாட்கள் ரிமாண்ட் உத்தரவையும் மீறி ஜாமீன் வாங்கிவிட்டார் வெங்கட்ராமன். இனி டிஸ்சார்ஜ் ஆனால், கைதாகக்கூடும் என்பதால், அதிலிருந்து தடுத்து வெங்கட்ராமனை மருத் துவமனையிலேயே வைத்திருக் கும் படலத்தை தொடங்கி யிருக்கிறார்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள்.

விபத்தில் பலியானது ஐ.ஏ.எஸ். அதி காரியாக இருந் திருந்தால் சட் டமும் சக அதி காரிகளும் சும்மா இருந்திருப் பார்களா?

-பரமசிவன்

முறைகேடுகளின் கூடாரமான பெரியார் பல்கலை!

ssகிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க, தொடங்கப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழகம், முறைகேடுகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. ஆகஸ்ட். 02-ஆம் தேதி நடந்த செனட் கூட்டத்தில், பெரியார் பல்கலையின் 2016-2017ஆம் ஆண்டின் தணிக்கை அறிக்கை வெளியிடப் பட்டது. இதில் பல்கலை தொடங்கிய காலகட்டத்தில் இருந்து 2016- 17-ஆம் ஆண்டுவரை ஒட்டுமொத்தமாக ரூ.28.14 கோடிக் கான ஆவணங்கள் தணிக் கைக்கு உட்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள் ளது.

மேலும் கல்லூரி முதல் வர்கள், உதவிப் பேராசிரியர் நியமனங்களிலும், உதவியாளர், கண்காணிப்பாளர், ஸ்டெனோகிராஃபர், எழுத்தர் பணிநியமனத்திலும் சகட்டுமேனிக்கு முறைகேடுகள் நடந்துள்ளதையும் புட்டுப் புட்டு வைத்துள்ளது தணிக்கைத்துறை. ரூ.3 லட்சம் முதல் ரூ.40 லட்சம்வரை பணத்தை வாங்கிக்கொண்டே நியமனங்கள் நடந்திருப்பதாக கூறுகிறது பல்கலை வட்டாரம்.

இதற்கிடையே, 2015-16 அறிக்கையில் ரூ.47.44 கோடிக்கான உரிய ஆவணங்கள் இல்லை என்று பதிவு செய்திருந்த தணிக்கைத்துறை, 2016-17 அறிக்கையில் தடாலடியாக ரூ.28.14 கோடிக்கு மட்டுமே ஆவணங்கள் இல்லையென்று கூறியிருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து உள்ளாட்சி தணிக்கைத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “""ஒட்டுமொத்தமாக நிலுவையிலுள்ள தொகையை தணிக்கை அறிக்கையில் காட்டியது, சட்டமன்ற வரைவுக்குழுவரை சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, அந்தந்த ஆண்டில் ஆட்சேபணைகளை தெரிவித்தால் போதுமென்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தார்கள்'' என்று காரணம் சொன்னவர், “""நடந்துள்ள முறைகேடுகளை "ஊழல்' என்ற வார்த்தையால் நாங்கள் குறிப்பிடமுடியாது'' என்றார்.

தணிக்கை அறிக்கை குறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் குழந்தைவேலுவிடம் பேசுகையில், ""முந்தைய காலங்களில் நடந்த தவறுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அதற்காக அதை தட்டிக் கழிப்பதாக அர்த்தமில்லை'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.

-இளையராஜா