ஸ்டெர்லைட் தாமிராவில் தூத்துக்குடி போலீஸ்!

ss

பல உயிர்களைப் பலிகொடுத்தும், உயிராதாரத்தை சீரழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை விடாப்பிடியாக எதிர்க்கின்றனர் தூத்துக்குடி பொதுமக்கள். அவர்களுக்கு நேரெதிராக செயல்படுகிறது தூத்துக்குடி காவல்துறை.

சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் இன்ஸ்பெக்டர்கள் பலரை நிர்வாகரீதியாக மாற்றம் செய்தது காவல்துறை. இதில், தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த தில்லை நாகராசன், பாளையங் கோட்டைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பிரிவு உபச்சார விழாவினை ஏற்பாடு செய்தனர் பிற காவல்நிலைய இன்ஸ்பெக் டர்கள்.

Advertisment

இந்த விழா ஸ்டெர்லைட் ஆலைக்குச் சொந்தமான தாமிரா ஹாலில் நடந்ததாகவும், தெர்மல், தென்பாகம், மத்திய பாகம், வடபாகம் காவல்நிலையங்களின் இன்ஸ்பெக்டர்கள் அதில் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. அரசின் கொள்கை முடிவுக்கு எதிரான காவல்துறையினரின் இந்த செயலுக்கு சட்டரீதியில் தண்டனை வழங்கக்கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் புகார் மனு கொடுத்துள்ளார்கள்.

சமூகஆர்வலர் அக்ரி பரமசிவனோ, ""ஸ்டெர்லைட் ஆலையின் உள்வளாகமான தாமிரா 1 பிரிவு பகுதியில், ஆலைநிர்வாக அதிகாரிகளுடன், பிரிவு உபச்சார விருந்தில் கலந்துகொண்ட காவல் ஆய்வாளர்கள், ‘"இனி சிப்காட் காவல் ஆய்வாளருக்குப் பதிலாக, எங்களில் யாரேனும் ஒருவரிடம் மாதம் ரூ.3 லட்சத்தை தந்துவிடுங்கள். அதை முறையாக அனைத்து உயரதிகாரிகளுக்கும் அளித்துவிடுவோம். ஆலை தொடர்பாக பிரச்சனைகள் வராமலும் பார்த்துக் கொள்கிறோம்'’ என உறுதிமொழி அளித்துவிட்டு பணமுடிச்சுகளுடன் விடைபெற்றதாகத் தெரிகிறது'' என்கிறார்.

-நாகேந்திரன்

Advertisment

ஸ்டாலினுக்கு செக் வைக்கும் அமைச்சர்!

ssநாடுமுழுவதும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது நிலுவையில் இருக்கும் வழக்குகளை விசாரிக்க 12 இடங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டன. தமிழகம், புதுச்சேரியைப் பொறுத்தவரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த நீதிமன்றம் இயங்குகிறது. நீதிபதியாக ஜெ.சாந்தி பதவிவகித்து வந்தார். 321 வழக்குகள் தற்போதுவரை நிலுவையில் உள்ளன.

பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு பாலியல் வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனையும், விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் இந்த நீதிமன்றத்தில்தான் வழங்கப்பட்டது. இதனால், சிறப்பு நீதிமன்றம் என்றாலே அரசியல்வாதிகள் ஜெர்க் கொடுக்கிறார்கள்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அதிகப்படியான வழக்குகளை விசாரிக்க, இன்னொரு சிறப்பு நீதிபதியை நியமிக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள சி.பி.ஐ. வழக்குகள் அனைத்தையும் இங்கே விசாரிக்கும் விதமாக, 3 நீதிமன்றங்களாக பிரித்து நீதிபதி கருணாநிதி என்பவரை, எந்தக் குழுவின் பரிந்துரையும் இல்லாமல் நம்பர் 1 நீதிபதி யாக நியமித்திருக் கிறார்கள்.

வேலூர் இடைத் தேர்தலுக்குப் பிறகு, தி.மு.க. தலைவர் ஸ்டா லின் சம்பந்தப்பட்ட வழக்குகளை, நீதிபதி கருணாநிதி அமர்விலேயே இனி விசாரணைக்கு எடுத்து, அவரை ஒடுக்கு வதற்கு திட்டமிட்டி ருப்பதாக தகவல்கள் வருகின்றன. தினகரன் மீதான வழக்குகளையும் இவரே விசாரிப்பார் என்றும் சொல்லப்படு கிறது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தனிக்கவனம் செலுத்தி ஸ்டாலினுக்கு செக் வைக்கிறார் என்கிறார்கள்.

-ஜெ.டி.ஆர்.

பல்கலை விடுதியில் கட்டணக் கொள்ளை!

sssசென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் சேப்பாக்கம், கிண்டி, தர மணி உள் ளிட்ட பகுதி களில் ஆறு விடுதிகள் இயங்குகின்றன. அதில், முதன்மை வளாகமான சேப்பாக்கம் பெண்கள் விடுதியில் இந்தாண்டு மாணவிகளை சேர்க்க மறுக்கின்றனர்.

இந்த விடுதியில் உணவுவழங்க காண்ட்ராக்ட் எடுத்தவர், நஷ்டம் ஏற்பட்டதால் தப்பியோடிவிட்டார். இதன்மூலம், கேண்டீனுக்கு மூடுவிழா நடத்திவிட்டனர். தொடர்ச்சியான தண்ணீர்ப் பற்றாக்குறையைக் காரணம்காட்டி, தண்ணீர் வழங்கவும் விடுதி நிர்வாகம் மறுத்தது. மேலும், 120 மாணவிகள் இங்கு தங்கிவந்த நிலையில், முதற்கட்டமாக 60 மாணவிகளை மட்டும், 15 கி.மீ. தொலைவிலுள்ள தரமணிக்கு கடந்தாண்டே மாற்றிவிட்டனர். ரூ.58 லட்சம் நிதி ஒதுக்கியும், விடுதி சீரமைப்புப் பணிகள் நடக்கவில்லை.

தரமணி வளாகத்தில் கூடுதலாக அறைகள் இருந்தும், அந்த விடுதியின் வார்டன் சுமதி "இதற்குமேல் எங்களால் சேர்க்கமுடி யாது' என்று கூறிவிட்டாராம். அதை அப்படியே ஆமோதித்த யுனிவர்சிட்டி நிர்வாகம், விடுதிகளில் புதிதாக மாணவிகளைச் சேர்க்காமல், விடுதிகளை இயக்கும் மொத்தப் பொறுப்பையும் வார்டன்களுக்கு வழங்கியதோடு, விடுதிக் கட்டணங்களை காப்பாளர்களே வசூலிக்கும் வாய்ப்பையும் திறந்துவிட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் விடுதிக் கட்டணமாக ரூ.5 ஆயிரமும், மின்கட்டணமாக ரூ.800 ம் மாணவர்களிடம் வசூலித்தது விடுதி நிர்வாகம். இதில், எஸ்.சி/எஸ்.டி. மாணவர்கள் மின்கட்டணத்தை மட்டும் செலுத்தினாலே போதும். தற்போது வார்டன்களே கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று யுனிவர்சிட்டி தரப்பு அறிவித்திருப்பது, மாணவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி யுனிவர்சிட்டி வி.சி. துரைசாமியிடம் கேட்டபோது, பேச மறுத்துவிட்டார். மாணவர்கள் தரப்பில் விசாரித்தபோது, “""சென்னைக்கு வரும் புதிய மாணவர்களின் நிலையை கருத்தில் கொள்ளாததோடு, கட்டணக் கொள்ளைக்கு வழி வகுக்கும் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதைத் திரும்பப் பெறாவிட்டால், போராடவும் தயாராக இருக்கிறோம்'' என்றனர்.

-அருண்பாண்டியன்

படம் : அசோக்