Advertisment

சிக்னல் "தமிழைக் காப்பாற்றுங்கள்' நல்லகண்ணு உருக்கம்!

sign

சென்னை பண் ணைத் தமிழ்ச்சங்கத்தின் 36-ஆம் ஆண்டு தொடக்கவிழாவும், விருது வழங்கும் விழா வும் அண்மையில் சென்னை இக்ஷா அரங்கில் நடந்தது.

Advertisment

sகவிக்கோ துரை வசந்தராசன் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறந்த தமிழ்ச் சான்றோர்களுக்கும் கவிஞர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுவுடைமை இயக்க மூத்ததலைவர் நல்லகண்ணு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

கடல்கடந்தும் வள்ளலார் பெருமையை பரப்பிவரும் மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி வள்ளலார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மைத்துனரான டாக்டர் இராஜமூர்த்தி, ""“நல்லகண்ணு அவர்களுக்கு ஈடான அரசியல் தலைவர் என்று எவரும் இல்லை. அவரைப் போன்ற ஒருவரை நான் பார்க்கவில்லை. என்னைக்கூட பணஆசை விட்டதில்லை. ஆனால் பணம், பொருள் என்று எதன்மீதும் பற்றில்லாதவராய் நல்லகண்ணு வாழ்கிறார்'' என்று வியப்பு தெரிவித்தார்.

விருது வழங்கி சிறப்புரை நிகழ்த்திய நல்லகண்ணு “நாடு போகும்போக்கு வருத்தத்தைத் தருகிறது. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழ

சென்னை பண் ணைத் தமிழ்ச்சங்கத்தின் 36-ஆம் ஆண்டு தொடக்கவிழாவும், விருது வழங்கும் விழா வும் அண்மையில் சென்னை இக்ஷா அரங்கில் நடந்தது.

Advertisment

sகவிக்கோ துரை வசந்தராசன் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறந்த தமிழ்ச் சான்றோர்களுக்கும் கவிஞர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. பொதுவுடைமை இயக்க மூத்ததலைவர் நல்லகண்ணு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.

கடல்கடந்தும் வள்ளலார் பெருமையை பரப்பிவரும் மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி வள்ளலார் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மைத்துனரான டாக்டர் இராஜமூர்த்தி, ""“நல்லகண்ணு அவர்களுக்கு ஈடான அரசியல் தலைவர் என்று எவரும் இல்லை. அவரைப் போன்ற ஒருவரை நான் பார்க்கவில்லை. என்னைக்கூட பணஆசை விட்டதில்லை. ஆனால் பணம், பொருள் என்று எதன்மீதும் பற்றில்லாதவராய் நல்லகண்ணு வாழ்கிறார்'' என்று வியப்பு தெரிவித்தார்.

விருது வழங்கி சிறப்புரை நிகழ்த்திய நல்லகண்ணு “நாடு போகும்போக்கு வருத்தத்தைத் தருகிறது. கம்பராமாயணத்தை எழுதியவர் சேக்கிழார் என்று சொல்கிறவர்கள் எல்லாம் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வளத்தை எல்லாம் வாரிக் கொடுத்துவிட்டு, குடிக்கத் தண்ணீர் இல்லை என்கிறார்கள். இன்று நாம் பேசும் மொழிக்கும் இடை யூறுகளைத் தரு கிறார்கள். மிக வும் பெருமை மிக்க நம் தாய் மொழியாகிய தமிழை நாம் காப்பாற்றியாக வேண்டும்''’’என் றார் அழுத்தமாக.

Advertisment

-நாடன்

உயிர்ப்பை இழந்த உய்யக்கொண்டான் கால்வாய்!

திருச்சிக்கு அழகு சேர்த்தது மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம்வந்து வளம்சேர்க்கும் உய்யக்கொண்டான் கால் வாயும்தான். விவசாயிகளுக்கு மிகப்பெரிய கொடையாக இருந்த அந்தக் கால்வாய், குப்பைகளும், கழிவுநீரும் கலந்ததால், பலநூறு ஆண்டு கால உயிர்ப்பை இழந்திருக் கிறது.

ss

முப்போகம் விளையக் காரணமான உய்யக்கொண் டான் கால்வாயைக் கடக்கவே இன்று மூக்கை மூடவேண்டி இருக்கிறது. கரை முழுவதும் கருவேல மரங்களும், கால் வாயெங்கும் ஆகாயத்தாம ரைச் செடிகளுமாக மண்டிக் கிடக்கிறது.

""2014-ம் ஆண்டு அப் போதைய முதல்வர் ஜெ. இந்தக் கால்வாயைச் சீரமைக்க ரூ.11 கோடி நிதி ஒதுக்கினார்.

அதைக்கொண்டு இரு பக்கங்களிலும் சுவர்களைக் கட்டி, பெரிய சாக்கடைக் கிணறு போல ஆக்கி விட்டார்கள். பலனாக, உயிரிழப்புகள் நடக்கத் தொடங்கியது. அடுத்ததாக 2 கி.மீ. நீளத்திற்கு வாய்க்கால் கரையை சீரமைக்கும் பணி. இதற்காக, ரூ.17 கோடியே 56 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இப்படி கோடிகளில் நிதி ஒதுக்கி என்ன பயன்? "கால்வாயில் 34 இடங்களில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் என ஐந்தாண்டுகளாக வலியுறுத்தியும் கண்டுகொள்ளவில்லையே'' என்று ஆதங் கப்படுகிறார் சமூக ஆர்வலரான தண்ணீர் வினோத்.

காங்கிரஸைச் சேர்ந்த திருச்சி சார்லஸ், ""கழிவுநீர் கலப்பதைத் தடுக்கக்கோரி உண்ணா விரதம் இருந்தேன். இதைத் தடுக்கக்கோரிய வழக்கு நிலுவையில் இருக்கிறது.

இதை சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. கே.என்.நேரு எழுப்பியபிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியே கழிவுநீர் கலப்பது உண்மைதான் என்றதோடு, பாதாளச் சாக்கடைகள் மூலம் அதைத் தடுப்போம். இதற்காக ரூ.344 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறோம் என்கிறார். முன்பைப்போல ஊழல் நடக்காமல் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நல்லது''’ என்கிறார்.

- ஜெ.டி.ஆர்.

சிதிலமடைந்த உய்யக்கொண்டான் கால்வாய் மீண்டும் உளறிய திண்டுக்கல் சீனிவாசன்!

ss

கோடைகாலம் முடிந்து, மழை பெய்யும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் கோடைவிழா நடத்தியது எடப்பாடி அரசு. ஆண்டுதோறும் சம்பிரதாயமாக நடத்தப்படும் விழா, இந்த ஆண்டு 13, 14 தேதிகளில் கரியாலூரில் நடை பெற்றது.

விழாவில் அ.தி.மு.க. அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், திண்டுக் கல் சீனிவாசன், தி.மு.க. எம்.பி. கௌதம சிகாமணி, எம்.எல்.ஏ. உதயசூரியன் உள்ளிட்ட இருகட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கண்காட்சி, நாட்டுப் புறக்கலைகள் என விழா களைகட்டியது.

நிறைவுநாளன்று பேசிய தொகுதி எம்.எல்.ஏ. உதயசூரியன், “""மலைவாழ் பெண்கள் தங்கள் நிலங்களில் உழவுசெய்து விதைக்கும்போது, இது எங்கள் நிலம் என்று வனத்துறையினர் 1 லட்சரூபாய் வரை அபராதம் போடுகிறார்கள். மலைவாழ் மக்களுக்கான நிலம் சரியான முறையில் வரையறை செய்யப்படாததால், குழப்பம் ஏற்பட்டு அவர்களின் தகுதிக்கு மீறிய தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. எனவே, முதல் தடவை தவறு செய்பவர்களுக்கு எச்சரிக்கையும், மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்க வனத்துறை அமைச்சர் அறிவுறுத்தவேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

பேசும் மேடைகளிலெல்லாம் உளறிக்கொட்டி சர்ச்சை கிளப்பும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ, ""சகோதரர் உதயசூரியன் பேசுவதைப் பார்த்தால், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களைப் போலீஸ் பிடிக்கக்கூடாது என்று சொல்வதைப் போல் உள்ளது'' என்று சொல்ல, மேடையில் இருந்தவர்கள் மட்டுமின்றி, மலை வாழ் மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியது.

உடனே, தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ. இருவரும் மலைவாழ் மக்களை அவமானப்படுத்தும் விதமாகப் பேசிய அமைச்சரைக் கண்டிப்பதாக ஆட்சியர் சுப்பிர மணியனிடம் கூறிவிட்டு வெளி யேறினர். ""மக்களை அவமானப் படுத்த, மக்கள் பெயரில், மக்கள் பணத்தில் ஒரு அரசு விழா எதற்கு?'' என கூறிக்கொண்டே, மலைவாழ் மக்களும் விழாவைப் புறக்கணித்துச் சென்றனர்.

-எஸ்.பி.சேகர்

nkn260719
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe