மாணவியைக் கொன்றது மருந்தா? மருத்துவரா?
கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யப்ரியா. தீராத மாதவிடாய் பிரச்ச னையால் அவதிப்பட்ட இவரை, செல்வபுரத்தில் குருநாதன் என்பவர் நடத்திவரும் மனோன் மணியம் சித்த வைத் தியசாலைக்கு போகுமாறு உறவினர்கள் பரிந்துரைத்தனர்.
ஜனவரி 23-ந் தேதி குருநாதனிடம் சிகிச்சைக்காக சென்றபோது, 15 நாளுக்குத் தேவையான மருந்து கொடுத்திருக்கிறார். எதுவும் மாறவில்லை. மீண்டும் போய் கேட்டபோது, "சித்த மருத்துவம் மெதுவாகத்தான் வேலைசெய்யும்' எனச் சொல்லிவிட்டு, வேறொரு மருந்தைத் தந்திருக்கிறார். இந்தமுறை கை, கால்கள் வீங்கி, உடல் பருமன்கூடி படுத்த படுக்கையானார்.
பின்னர் ஏப். 19-ல் மீண்டும் ஒரு டானிக் கொடுத் திருக்கிறார் குருநாதன். அதைக் குடித்தபிறகு சத்யப்ரியாவின் நிலைமை மோசமானது. ஏப். 22-ல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த பிறகுதான், சிறுநீரகங்களும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர் குருநாதன் மீது மே. 01-ல் செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காததா
மாணவியைக் கொன்றது மருந்தா? மருத்துவரா?
கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவி சத்யப்ரியா. தீராத மாதவிடாய் பிரச்ச னையால் அவதிப்பட்ட இவரை, செல்வபுரத்தில் குருநாதன் என்பவர் நடத்திவரும் மனோன் மணியம் சித்த வைத் தியசாலைக்கு போகுமாறு உறவினர்கள் பரிந்துரைத்தனர்.
ஜனவரி 23-ந் தேதி குருநாதனிடம் சிகிச்சைக்காக சென்றபோது, 15 நாளுக்குத் தேவையான மருந்து கொடுத்திருக்கிறார். எதுவும் மாறவில்லை. மீண்டும் போய் கேட்டபோது, "சித்த மருத்துவம் மெதுவாகத்தான் வேலைசெய்யும்' எனச் சொல்லிவிட்டு, வேறொரு மருந்தைத் தந்திருக்கிறார். இந்தமுறை கை, கால்கள் வீங்கி, உடல் பருமன்கூடி படுத்த படுக்கையானார்.
பின்னர் ஏப். 19-ல் மீண்டும் ஒரு டானிக் கொடுத் திருக்கிறார் குருநாதன். அதைக் குடித்தபிறகு சத்யப்ரியாவின் நிலைமை மோசமானது. ஏப். 22-ல் அரசு மருத்துவமனையில் அனுமதித்த பிறகுதான், சிறுநீரகங்களும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர் குருநாதன் மீது மே. 01-ல் செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்காததால், ஆணையரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜூன் 17-ந் தேதி சத்யப்ரியா உடல்நலம் மோசமாகி இறந்துபோனார். ""அந்த கோர மரணத்துக்கு முன்னாடி சத்யப்ரியா பட்ட கஷ்டம்… இனி எந்தப் பொண்ணும் அனுபவிக்கக்கூடாது. குருநாதன் மேல சி.எஸ்.ஆர். போட்டிருக்காங்க. எஃப்.ஐ.ஆர். போடுறவரை விடமாட் டோம்''’என்கிறார் சத்யப்ரியாவின் உறவினரும், வி.சி.க. தெற்கு மாவட்ட செய்தித் தொடர்பாளருமான தமிழ்குமரன்.
"மருத்துவர் கொடுத்தது சரியான மருந்து வகைகள்தானா? என்பதைக் கண்டறிய டெஸ்ட்டுக்கு அனுப்பியிருக்கோம். ரிசல்ட் வந்ததும் நடவடிக்கை எடுப்போம்' என்கிறது போலீஸ் தரப்பு. சத்யப்ரியாவுக்கு கொடுத்த மருந்துகளை விசாரித்தால்தான் உண்மை தெரியும் என்கிறது சத்யப்ரியா தரப்பு.
-அருள்குமார்
எதிர்காலம் போச்சு! கொதிக்கும் மாணவர்கள்!
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூரில் 2006-லிருந்து இயங்கிவந்தது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி. இது தற்போது அரசு கல்லூரியாக மாற்றப்பட்டதைக் காரணமாக வைத்து, இந்தக் கல்வியாண்டு முதல் இளங்கலையில் 5 பாடப்பிரிவுகளும், முதுகலையில் 6 பாடப்பிரிவுகளும் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.
இதுவரை 24 பாடப்பிரிவுகள் இருந்துவந்த நிலையில், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் 3,000 பேர் பயன்பெற்றனர். அதில் கல்வித்துறை கைவைத்திருப்பதைக் கண்டித்து ஜூன்.17-ல் மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடப்பிரிவு களை நீக்கும் முடிவைத் திரும்பப் பெறக்கோரி உயர்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்படும் என கல்லூரியின் முதல்வர் ஜானகிராமன் உறுதியளித்த பின்பே மாணவர்கள் கலைந்துசென்றனர்.
இருப்பினும், இதனை மாணவர்கள் நம்புவதாகத் தெரியவில்லை. காரணம், பாரதிதாசன் பல்கலைக்கழக கட்டுப்பாட் டில் உள்ள 11 கல்லூரிகள் உட்பட, தமிழகம் முழுவதிலும் உள்ள அரசுக் கல்லூரிகளிலும் பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்தப் பாடங்களைக் கற்றுத்தரும் கௌரவப் பேராசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் பணியை இழக்க நேரிடும். நிதிச்சுமையைக் காரணம் காட்டி அரசு மேற்கொண்டி ருக்கும் இந்த நடவடிக்கை யால், அரசுக் கல்லூரியை நம்பியிருக்கும் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும். பலர் உயர்கல்விக் கனவை பறிகொடுக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் இதை எதிர்ப் பவர்கள்.
அரசுக் கல்லூரி களையே மூடுவதற்கான முன்னேற்பாடோ என்கிற அச்சம் எழுந்திருப்பதாக மாணவி பிரிதாவும், அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை 24 சதவீதம் உயர்த்தச் சொல்லிவிட்டு, அவர்கள் படிக்கும் விருப்பப் பாடங்களை நீக்கி வேடிக்கை காட்டுகிறது அரசு என்று மாணவர் மணிகண்டனும் கண்டனம் தெரிவிக்கின்ற னர்.
இந்திய மாணவர் சங்கமும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.
-எஸ்.பி.சேகர்
ஆடு பிசினஸ் - புதிய மோசடி!
ஈமு, இரிடியம், மண்ணுளிப் பாம்பு என எந்தெந்த ரூபங்களில் ஏமாற்றினாலும், தலையைக் கொடுக்க சிலர் தயாராகத்தான் இருக்கிறார்கள். இந்தமுறை ஆடு பெயரால் மோசடி நடந்திருக்கிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சிவக்குமார். இவர் காட்பாடியைச் சேர்ந்த பால கணேசன், ஊசூர் முனுசாமி என சிலரிடம், “""லஷ்மி அக்ரோ ஃபார்மில் ஆடு வாங்கி விடுங்க. அவங்க தயாரிக்கிற தீவனத்துல ஆடு நல்லா கொழுகொழுன்னு வளரும். கொள்ளை லாபம் பார்க்கலாம்''’என உசுப்பிவிட்டிருக்கிறார்.
இதைக் கேட்டதும் குஷியாகி, ஆட்டுக்கு தலா ரூ.7,000 வீதம், 15 ஆடுகளுக்கு ரூ.1,05,000 செலுத்தியிருக்கிறார் பாலகணேசன். அதுபோக மனைவி, மக்கள் பெயரில் கணக்குகளைத் தொடங்கியதோடு, ஆட்களையும் சேர்த்து விட்டிருக்கிறார் அவர். இந்த ஆடுகளை வாங்கி விடுவதால், லஷ்மி அக்ரோஃபார்ம் சார்பில் வாரம் ஒரு தொகை வீதம், கட்டிய தொகைக்கு ரெட்டிப்பு லாபம் கிடைக்கும் என்ற செய்தி பரப்பப்பட்டதால், வேலூரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் ஐக்கியமாகினர். விளைவு, ஒரு வாரத்திற்கு மட்டுமே பணம் தந்தவர்கள், அதோடு கடையைச் சாத்திவிட்டார்கள். இன்று தொலைத்த பணம் கிடைக்காமல், அல்லாடுகிறார்கள் பணம் செலுத்தியவர்கள்.
பணத்தை வாங்கிய கௌரிசங்கர், சிவக்குமார் ஆகிய இருவரும் தற்போதுவரை இழுத்தடிக்கிறார்களாம். அவர்கள் கொடுத்த செக்குகளும் பவுன்ஸ் ஆகிறதாம். அவர்களை நாம் தொடர்புகொண்டபோது, இணைப்பு கிடைக்கவே இல்லை. இவர்களைச் சேர்த்துவிட்ட வழக்கறிஞர் சிவக்குமாரோ, ""எனக்கும் இதற்கும் சம்மந்தமே கிடையாது. நான் ஆலோசனைதான் கொடுத்தேன்''’என்று நைசாக கழன்றுவிட்டார்.
-து.ராஜா