சங்கத் தேர்தலைவிட அப்படியென்ன வேலை?

விறுவிறுப்பான கட்டத்தில் நடிகர் சங்கத் தேர்தல் களைகட்ட, சென்றமுறை பவர்ஃபுல்லாக களமிறங்கி வெற்றிபெற்ற ssபாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்து துணைத்தலைவரான இயக்கு நரும், நடிகருமான பொன்வண்ணன், இந்தமுறை தேர்தலில் போட்டியிட வில்லை. நடிகர் சங்கத்தின் உள் அரசியல்தான் அதற்குக் காரணமென்று சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடு கிறது. ஆனால், உண்மை அதுவல்ல என் கிறது அவருக்கு நெருங்கிய வட்டாரம்.

ஓவியர், இயக்குநர், நடிகர் என பல பரிணாமங்களைக் கொண்ட பொன் வண்ணன், தற்போது மானுடவியல் ஆராய்ச்சியில் தன்னை ஈடுபடுத்தி இருக் கிறார். மனிதகுல வரலாறு என்றாலே அரைத்த மாவையே அரைக்கும் தக வல்கள் சொல்லப்படுகின்றன. அவற்றி லிருந்து மாறுபட்ட, மனிதகுலத்தின் பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்றை, அவர்களின் உறவுநிலை, கல்வி, மருத் துவம், தொழில், கடவுள் மறுப்புக் கொள்கை என பலவற்றையும் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெரியாருக்கு முன்பே -குறிப்பாக நான் காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் மறுப்பு கருத்துகள்-செயல்பாடுகள் இருந்தது உள்ளிட்ட இதுவரை யாரும் வாசித்திராத பல தகவல்களை புத்தகமாக்கி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட இருக்கிறார். இதற்காகவே படவாய்ப்புகளை மறுத்துவந்தவர், நடிகர்சங்கத் தேர்தலையும் புறக்கணித்துவிட்டார் என்கின்றனர்.

""உண்மைதான்...… இதுவொரு சவாலான பணி என்றாலும், எனக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது. ஒரு முழுமையான மனிதகுல ஆராய்ச்சியை வெளிக் கொணர, அதற்கான ஆராய்ச்சியில் என்னை தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறேன்''’என புன்னகை யுடன் கூறுகிறார் மானுவிடவியல் ஆய்வாளர் பொன்வண்ணன்.

Advertisment

-ஜீவாதங்கவேல்

சட்டவிரோத உறவை சட்டம் அனுமதிக்கிறதா?

ss

Advertisment

ஜூன் 15-18 தேதியிட்ட நக்கீரன் இதழில், "உடைந்து சிதறும் உறவுகள் -சட்டமும் சாதுர்ய மும்'’என்ற தலைப்பிட்ட செய்தி வெளியிட்டிருந் தோம். அதில் சட்டவிரோத உறவு தொடர்பான விசாரணையில், உச்சநீதிமன்ற தீர்ப்பைக் காரணம் காட்டி சிறுகனூர் போலீஸார் குற்றவாளிகளை விடு வித்துவிட்டதாகவும், இதனால் தவறு செய்யாதவர் கள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தோம்.

சிறுகனூர் போலீஸாரின் இந்த செயல்பாடு சட்டத்திற்கு புறம்பானது என விளக்கம் கொடுத்திருக்கிறார் நக்கீரனின் நீண்டநாள் வாசகரும் அனைத்திந்திய டாக்டர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், வழக்கறிஞருமான என்.ஜே.எஸ். ராஜ்குமார். "இ.பி.கோ. பிரிவு 497 மற்றும் 198(2) கிரிமினல் நடைமுறை விதி -இன்னமும் நடைமுறையில்தான் உள்ளது. சட்டவிரோத உறவான ஆக்ன்ப்ற்ங்ழ்ஹ்-யை இன்னமும் கிரிமினல் குற்றமாகவே கருதி நடவடிக்கை எடுக்க காவல்துறை கடமைப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 497 தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பை, ஒரு ஆதாரமாக சம்பந்தப் பட்ட குற்றவாளிகளின் வழக்கறிஞர் நீதிமன் றத்தில் வாதாட லாம். ஆனால், வழக்கு தொடர்பான இறுதிமுடிவு என்பது நீதி மன்றத்திடமே உள்ளது. இ.பி.கோ. 497-ஐ நடைமுறைப் படுத்தக் கூடாது என் பதை நாடாளுமன்ற மசோதாதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர, அதை எவரும் நீக்க முடியாது. உதா ரணத்திற்கு முத்தலாக் தடைச் சட்டம் இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பைச் சொல்லி நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிய சிறுகனூர் காவல் அதிகாரிகளின் செயல் தவறானது'’’ என அவர் கூறுகிறார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு சட்டப் புரிதல் அவசியம். காவல்நிலையங்களே நீதிமன்றங்கள் கிடையாது என்பதற்கு இந்த செய்தியே உதாரணம்.

-மதி

நல்ல சேதிக்கு காத்திருக்கும் அ.தி.மு.க. மாஜி!

ss

விளாத்திகுளம் சட்ட மன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராகிவிட, ஓ.பி.எஸ். மூலம் எவ்வளவோ முயற்சித் தார் அ.தி.மு.க. மாஜி எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன். ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டிய கெடுபிடியால் சின்னப்பனை வேட்பாளராக நிறுத்தியது கட்சித்தலைமை. இதனால், அப்செட்டான மார்க்கண்டேயன் சுயேட்சை யாக களமிறங்கி ஆளுந் தரப்புக்கு குடைச்சலைக் கொடுத்தார்.

அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. இந்த மூன்று கட்சிகளின் போட்டிக்கு நடுவே, டோக்கன் சிஸ்டம் மூலம் 27,456 வாக்குகள் பெற்று தன் செல்வாக்கைக் காப்பாற்றி னார் மார்க்கண்டேயன். தோற்றபிறகும், டோக்கனுக்கான 200 ரூபாய் விநியோகம் நடக்கிறதாம். இன்னொருபுறம் தன்னுடைய அரசியல் வாழ்வு அஸ்தமிக்கக்கூடாது என்பதற்காக, தனிமர நிலையிலிருந்து அ.தி.மு.க.வுக்குத் தாவ அமைச்சர்களின் பி.ஏ.க்களிடம் நூல் விட்டிருக்கிறார் மார்க்கண்டேயன். ஆனால், அவர் மீதான கோபமோ தலைமைக்கு இன்னமும் தீரவில்லையாம்.

இதனால், தனது அரசியல் எதிர்காலம் நிலைக்க, கரூர் செந்தில்பாலாஜியைப் போல, தி.மு.க.வில் இணையும் வேலை களில் இறங்கிவிட்டாராம். இதற்காகவே திருச்சி, விருதுநகர் தி.மு.க. புள்ளிகளைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறாராம். விளாத்திகுளத்தில் தி.மு.க.வுக்கு வலுவான புள்ளி தேவை என்ற யோசனைக்கு வந்துள்ள தாம் தலைமை. “எண்ணிப் பதினைந்தே நாட்களில் நல்லசேதி வரும்’’ என்று தன் ஆதரவாளர்களிடம் உறுதியாகச் சொல் கிறாராம் மார்க்கண்டேயன்.

-பரமசிவன்