அலைக்கழிக்கும் அரசு நிர்வாகம்;… ஓயாத பெண்கள்!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள பொன்பரப்பியில் பல ஆண்டுகளாக இயங்கிவந்த டாஸ்மாக் மதுக்கடை, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு பொன் குடிக்காடு கிராமத்திற்கு இடம் மாற்றப்பட்டது. விளைநிலத்தில் திறக்கப்பட்ட இந்த மதுக்கடைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, சிறுகளத்தூர் கிராமத்தில் இருக்கும் விளைநிலத்திற்கு மாற்றினார்கள்.

ssஇதைக்கண்டித்து மே.12-ல் பெண்கள் ஒன்றுகூடி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது கடையை ஆவேசத்துடன் பெண் கள் சூறையாட முயன்றதால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து, உடையார் பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், மூன்றுமாத அவகாசம் கோரப்பட்டது. இதற்கு உடன்படாத பெண்கள் "பத்து நாட்களில் கடையை அடைக்கவேண்டும்' என்று மீண்டும் முற்றுகைப் போராட் டத்தில் இறங்க, காவல்துறையினர் தலையிட்ட பிறகே சமரச சூழல் உருவானது.

இந்நிலையில், ஜூன் 5-ந்தேதி டாஸ்மாக் கடையை முற்றுகையிட பெண்கள் திரண்டு வந்தனர். அவர்களை நிறுத்திய காவல்துறையினர் ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு கூறி அனுப்பிவைத்தனர். பெண் களும் 6-ந்தேதி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் குறைதீர்க்கும் முகா மில், மதுவினால் அடுத்த தலைமுறை வரை சீரழிந்து வருவதாகக் கூறி மனு கொடுத்தனர். கலெக்டர் விஜயலட்சுமியும் துரிதமாக நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Advertisment

ஆனால், மனு கொடுத்து ஒரு வாரம் ஆகியும் கடை மூடப்படாத தால் ஆத்திரமடைந்த பெண்கள், மீண்டும் 09-ந்தேதி ஒன்று திரண்டு முற்றுகையிட்டனர். இந்தமுறை செந்துறை, குவாகம் இன்ஸ்பெக்டர் கள் மட்டுமின்றி ஏராளமான ஆயுதப் படை போலீசார் குவிக்கப்பட்டதால், அங்கு பதற்றம் தொற்றிக்கொண்டது. அப்போது நடந்த பேச்சுவார்த்தை யில் மீண்டுமொருமுறை ஆட்சிய ரிடம் மனு கொடுக்குமாறு போலீ சார் கேட்டுக்கொண்டதை அடுத்து, பெண்கள் கலைந்துசென்றனர்.

-எஸ்.பி.சேகர்

காசுக்கு ஆசைப்பட்டு கைதிகளான இளைஞர்கள்!

Advertisment

ssதீராத தண்ணீர் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்பதால், மணல் குவாரி களை நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இருந்தபோதிலும், டெல்டா பகுதிகளில் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, வேலையில்லாத இளைஞர்கள் இரவுநேரங்களில் டூவீலர்களில் மணல் கடத்தி, கட்டுமானப் பணி நடக்கும் இடங்களில் விற்றுவிடுகின்றனர்.

இந்நிலையில், குளித்தலை முன்னாள் எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் ஏரியாவில் உள்ள ஒருவர் வீட்டு கட்டுமானப் பணிக்காக டாட்டா ஏஸ் வாகனத்தில் மணல் கேட்டிருக்கிறார். இளைஞர்களும் அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில், அளவுக்கதிகமாக மணல் திருட் டில் ஈடுபட்டனர். இந்த இளைஞர் களைக் கைதுசெய்து, மணல் திருட் டைக் கட்டுப்படுத்துமாறு கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து, வி.ஏ.ஓ. விஜயேந்திரன் தலைமையில் கிராம உதவியாளர் புஷ்பலதா மற்றும் அதிகாரிகள் மருதூர் வடக்குப் பகுதியில் இரவு 11 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காவிரியாற்றில் டூவீலர் மூலம் மணல் கடத்திய ஏழு இளைஞர்களைத் தடுக்க முயன்றனர். இதில், புஷ்பலதாவைக் கடுமையாகத் தாக்கிவிட்டு ஏழுபேரும் தப்பியோடினர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வருவாய்த்துறையினர், காயமடைந்த புஷ்ப லதாவை குளித்தலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கையோடு, குளித்தலை இன்ஸ். பாஸ்கரனிடம் புகார்கொடுத்த உடனே, குற்றவாளிகள் ஏழுபேரும் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

-ஜெ.டி.ஆர்.

நெல் ஜெயராமனின் பெயரில் புதிய நெல்?

ss

திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிரியேட் மற்றும் "நமது நெல்லைக் காப் போம்' அமைப்புகள் இணைந்து "நெல் திருவிழா' நடத்துவது வழக்கம். இந்த விழாவில் கலந்துகொள் பவர்களுக்கு தன்னால் மீட்டெடுக்கப்பட்ட பாரம்பரிய நெல் விதைகளைக் கொடுத்தனுப்புவார் "நெல்' ஜெயராமன். அவர்களும், அடுத்த ஆண்டு இரட்டிப் பாக கொண்டுவந்து கொடுப்பார்கள்.

கடந்த ஆண்டு நெல் ஜெயராமன் புற்றுநோயால் மறைந்துவிட்ட நிலையில், இந்தாண்டு வழக்கம்போல் நெல் திருவிழா நடக்குமா என்கிற ஐயம் எல்லோர் மத்தியிலும் இருந்தது. அந்த ஐயத்தைப் பொய் யாக்கும் வகையில், ஜூன் 09, 10 தேதிகளில் நெல் திருவிழா மிகச்சிறப்பாக நடந்துமுடிந்தது. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெய ராமனின் படங்களையும், அவர்கள் மீட்டெடுத்த நெல் ரகங்களையும் அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாகக் கொண்டுவந்தனர்.

விழாவில் "நெல்' ஜெயராமன் மீட்டெடுத்த 174 பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த நூலை வெளியிட் டார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் என்.குமார், ""நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி, அவற்றை ஆவணப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதைகளை பல்கலைக்கழக மற்றும் ப்ரிசர்வேஷன் ஆகிய இருமுறைகளில் பாதுகாத்து, அடுத்த தலை முறைக்கு எடுத்துச் செல்வோம்''’என்று உறுதியளித் தார். விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரான "தாய்மண்' குழுமத்தைச் சேர்ந்த வரதராஜன், “"நெல்' ஜெய ராமனின் வாழ்க்கைக்குறிப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரிய விஷயம். அதே போல், அவரது பெயரை நெல்லுக்கு வைக்கவேண் டும்''’என்று வேண்டுகோள் விடுத்தார்.

-க.செல்வகுமார்