எடப்பாடி கேட்டிருக்கும் பிரமுகர்கள் லிஸ்ட்!

நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளில் வேலூர் மாவட்டத்தின் சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளும் அடக்கம். இங்கு முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் புடைசூழ களமிறங்கி னாலும், அ.தி.மு.க.வால் சோளிங்கரில் மட்டுமே ஜெயிக்கமுடிந்தது.

ss

ஓட்டுக்கு இரண்டாயிரம், பூத் ஏஜெண்டுக்கு ஐந்தாயிரம் என வேலூர் அ.தி.மு.க. எம்.பி. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வழியாகவே செட்டில் மெண்ட் சிறப்பாக நடந்தது. இவ்வளவு செலவுசெய்தும் ஆம்பூர், குடியாத்தத்தில் எப்படித் தோற்றோம் என்பதை அறிய பொறுப்பாளர்களான அமைச்சர் கள் நிலோபர்கபில், வீரமணியிடம் விசாரித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.

Advertisment

"பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததால் பகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லிம் ஓட்டுகள் கிடைக்கவில்லை' என விளக்கி இருக்கின்றனர் அமைச்சர்கள். எடப்பாடியோ, ""80 சதவீதம் பேருக்கு பணம் தந்தும், கட்சிக் காரங்க பாதிப்பேருக்குக் கூட போய்ச்சேரலை யாம். யாரெல்லாம் கட்சிக்கு துரோகம் பண்ணாங்கன்னு லிஸ்ட் எடுங்க'' என்று கடிந்திருக்கிறார். அமைச்சர்களும், தேர்தல் சமயத்தில் பர்னிச்சர்களை வாங்கிக் குவித்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயார் செய்கிறார்களாம்.

குடியாத்தம் தொகுதியில் பணியாற்றிய தி.மு.க. இளைஞரணி பிரமுகர் ஒருவர், ஓட்டுக்கு தர வைத்திருந்த பணத்தில் ரூ.10 லட்சத்தை சுருட்டிக்கொண்டார். அதேபோல், பணப்பட்டுவாடாவை கண்காணிக்கப்போன தி.மு.க. பிரமுகர் ஒருவர் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாராம். இதுபோன்றவர்களின் லிஸ்ட்டை தயார்செய்த ஆம்பூர் தி.மு.க. வேட்பாளர் வில்வநாதன், வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனதும் அந்த லிஸ்ட் தேவைப்படாது என்று கிழித்துப் போட்டுவிட்டாராம்.

-து.ராஜா

Advertisment

பாட்டியின் உதவியால் உத்வேகமடைந்த கிராமம்!

வெயில் புரட்டியெடுத்து மிச்சம்விட்ட டெல்டா பகுதிகளை, தண்ணீர்ப் பஞ்சம் வாட்டுகிறது. கஜாவால் மரங்களையும் ssஇழந்துவிட்டதால், இதிலிருந்து மீள தாங்களே நீர்நிலை களைச் சரிசெய்யும் வேலைகளில் இறங்கி விட்டனர் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராம இளைஞர்கள்.

அம்புலி ஆற்றிலிருந்து குளங்களுக்கு தண்ணீர்செல்லும் வழித்தடங்களை அவர்கள் சீரமைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அருகாமை கிராமமான கொத்தமங்கலம் இளைஞர்களும் ஊரிலுள்ள குளம், குட்டைகளை சீரமத்து, வரத்துவாய்க்கால்களை செம்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ராஜம்மாள் பாட்டி, ""ஏம்பா, இந்த வேலைக்கெல்லாம் ஆகுற செலவுக்கு என்ன பண்றீங்க?''’என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞர்கள், “""இருக்குறதை வைச்சு பணிகளைத் தொடங்கிட்டோம். யாராவது விருப்பப்பட்டு கொடுத்தா நல்லது''’என்றனர். உடனே, தன் கையில் வைத்திருந்த மஞ்சள் பையிலிருந்து ரூ.500 நோட்டுகளை எடுத்து, “""இந்தாங்கப்பா நூறுநாள் வேலை செய்து சேர்த்த காசு. உங்களைப் பார்த்ததும் பேங்குல இருந்து எடுத்துட்டு வந்துட்டேன்''’என்றிருக்கிறார்.

பணத்தை வாங்கி எண்ணிப்பார்த்த இளைஞர்கள் பத்தாயிரம் ரூபாய் இருப்பதைப் பார்த்து, நெகிழ்ந்தனர். இந்தச்செய்தி ஊர்முழுக்க பரவ கிராம சிறுவர்களான சக்திவேல், அனிஷ்கா, தமிழ்மகன் ஆகியோர் தங்களது உண்டியல் பணம் ரூ.5,181-ஐ சீரமைப்பு பணிகளுக்காக அப்படியே கொடுத்து விட்டனர். கிராம மக்களும் ஒன்று திரண்டு குளம் வெட்டும் பணியில் இறங்கிவிட்டனர்.

""கிணத்துத் தண்ணியை இறைச்சு விவசாயம் செய்த காலம்போய், இப்போ ஆயிரம் அடியில போர் போட்டும் தண்ணியில்லைங்கிற நிலைமை வந்திருக்கு. அதைச் சரிசெய்ய நினைக்கிற இந்தப் பிள்ளைங் களுக்கு, என் பேரப்பிள்ளைங்களுக்காக சேர்த்து வைச்ச பணத்தை உதவியா கொடுத்தேன் அவ்வளவுதான்பா''’என்கிறார் ராஜம்மாள் பாட்டி

-இரா.பகத்சிங்

ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பு!

s

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வும் கூட்டணியும் பெற்றுள்ள வெற்றி, ஈழத் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இலங்கை எம்.பியும் தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் துணைத் தலைவருமான மாவை.சேனாதி ராஜா ஜூன் 6-ந் தேதி அறிவாலயத்தில்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். பிரதமர் மோடியின் 10-ந் தேதி இலங்கைப் பயணத்திற்கு முன்பான இந்த சந்திப்பு டெல்லித் தரப்பிலும் கவனிக்கப்பட்டது. ஸ்டாலின்- சேனாதிராஜா சந்திப்புக்கு முக்கிய காரணமாக இருந்தவர் தி.மு.க. செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ் ணன்.

மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன சேனாதிராஜா, “"இலங்கையில் ஈஸ்டர் நாளில் நடந்த குண்டுவெடிப்பில் அதிகம் உயிரிழந்த வர்கள் தமிழர்கள்தான். அந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன. இதே கண்டனமும் கவனமும் இனஅழிப்பு நடவடிக்கையின் போது சர்வதேச சமூகத் திடமிருந்து வெளிப்படவில்லை என்பதையும் பதிவு செய்துள்ளார். ஈழப் பிரச்சினை குறித்து அவரிடம் ஸ்டாலின் விளக்கும்போது, ""கலைஞர் காலத்து அணுகு முறைதான் எங்களுடையது. இவர்தான் (கே.எஸ்.ராதாகிருஷ்ணன்) பக்கத்திலேயே இருக்கிறாரே! சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்க டெசோவில் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஐ.நா அவையில் ஒப்படைத்தோம். தொடர்ந்து அக்கறை செலுத்துவோம்''’என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலும் இலங்கைத்தமிழர் நலன் குறித்து தமிழக எம்.பிக்கள் பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

-கீரன்