மலைக்கோட்டை மந்திரிகளுக்கு கல்தாவா?
பத்தாண்டுகளாக தன்வசமிருந்த திருச்சி எம்.பி. தொகுதியை இழந்திருக்கிறது அ.தி.மு.க. குறிப்பாக அ.தி.மு.க.விற்கு எப்போதுமே சாதகமான, இரண்டு அமைச்சர்களைக் கொண்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு தொகுதிகள் சறுக்கலைத் தந்துள்ளன.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. கோட்டையாக திகழும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக இருக்கிறார் வளர்மதி. இங்கு தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனுக்கு 50,128 வாக்குகளே கிடைத்தன. இதே தொகுதியில் வளர்மதி 1,08,400 வாக்குகளுடன் பெற்றிருந்ததைக் கணக்கிட்டால், இது 58,272 வாக்குகள் குறைவு. அதேபோல், வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியில் 2016 தேர்தலில் 79,938 வாக்குகளுடன் வெற்றிபெற்று அமைச்சரானார். இந்தமுறை 25,283 வாக்குகள் மட்டுமே கிடைத்ததன் மூலம் 54,655 வாக்குகள் குறைந்திருக்கிறது.
திருநாவுக்கரசரின் திருச்சி வெற்றியை அ.தி.மு.க. தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு நன்றி அறிவிப்பின்போது, “"எனக்கு வாக்களித்த அ.தி.மு.க.வினருக்கு நன்றி' என்று திருநாவுக்கரசர
மலைக்கோட்டை மந்திரிகளுக்கு கல்தாவா?
பத்தாண்டுகளாக தன்வசமிருந்த திருச்சி எம்.பி. தொகுதியை இழந்திருக்கிறது அ.தி.மு.க. குறிப்பாக அ.தி.மு.க.விற்கு எப்போதுமே சாதகமான, இரண்டு அமைச்சர்களைக் கொண்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு தொகுதிகள் சறுக்கலைத் தந்துள்ளன.
20 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. கோட்டையாக திகழும் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக இருக்கிறார் வளர்மதி. இங்கு தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவனுக்கு 50,128 வாக்குகளே கிடைத்தன. இதே தொகுதியில் வளர்மதி 1,08,400 வாக்குகளுடன் பெற்றிருந்ததைக் கணக்கிட்டால், இது 58,272 வாக்குகள் குறைவு. அதேபோல், வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியில் 2016 தேர்தலில் 79,938 வாக்குகளுடன் வெற்றிபெற்று அமைச்சரானார். இந்தமுறை 25,283 வாக்குகள் மட்டுமே கிடைத்ததன் மூலம் 54,655 வாக்குகள் குறைந்திருக்கிறது.
திருநாவுக்கரசரின் திருச்சி வெற்றியை அ.தி.மு.க. தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு நன்றி அறிவிப்பின்போது, “"எனக்கு வாக்களித்த அ.தி.மு.க.வினருக்கு நன்றி' என்று திருநாவுக்கரசர் கொளுத்திப்போட்டது, அ.தி.மு.க. தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல், தன் தொகுதியில் லட்சத்துக்கும் நெருக்கமான வாக்கு லீடிங்குடன் அசத்தி இருக்கிறார் திருச்சி மேற்கு எம்.எல்.ஏ. கே.என்.நேரு.
இந்நிலையில், டெண்டர், கமிஷன் என போட்டிபோட்டு வாங்கிய இந்த இரண்டு அமைச்சர்களும் சேர்ந்தவாறு 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை இழந்திருப்பதன் மூலம் தங்கள் மீதான நம்பிக்கையை பறிகொடுத்துவிட்டனர். இதையெல்லாம் கவனித்துள்ள தலைமை, அமைச்சரவை மாற்றத்தின் போது திருச்சியையும் சீரியஸாக கவனத்தில் எடுக்கும் என ர.ர.க்கள் பேசிக்கொள்கிறார்கள்.
-ஜெ.டி.ஆர்.
தகர்ந்தது ரங்கசாமியின் முதல்வர் கனவு!
புதுச்சேரியிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. கிரண்பேடியின் செயல்பாடுகள், மோடி எதிர்ப்பலை, கூட்டணிக் கட்சிகளின் களப்பணி என இந்த வெற்றிக்குப் பல காரணங்கள் இருந்தன. அதேசமயம், என்.ஆர்.காங்கிரஸின் தோல்விக்கான காரணத்தை வண்டிவண்டியாக அடுக்குகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
பாரம்பரியமிக்க, அனுபவமுள்ள அரசியல்வாதியை காங்கிரஸ் களமிறக்கும்போது, அவரது அனுபவ வயதுகூட இல்லாதவரை பணம் இருக்கும் காரணத்திற்காக என்.ஆர்.காங்கிரஸ் நிறுத்தியது மக்களிடம் எடுபடவில்லை. இதனால், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார்.
என்.ஆர்.காங்கிரஸுக்கு ஏழு எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ரங்கசாமியின் கதிர்காமம் தொகுதியைத் தவிர வேறெந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. அதோடு, 28 ஆண்டுகளாக ரங்கசாமியின் கோட்டையாக கருதப்பட்ட தட்டாஞ்சாவடியை இடைத்தேர்தலின் மூலம் பறிகொடுத்துவிட்டார். கைவசம் இருந்த எம்.பி. தொகுதியையும் காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது.
எதிர்க்கட்சியாக இருந்தும் மூன்றாண்டுகளாக மக்கள் பிரச்சனைகளுக்காக என்.ஆர்.காங்கிரஸ் குரல்கொடுக்கவில்லை. மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகளை நியமிக்காமல் தன்போக்கில் விட்டுவிட்டார். கிரண்பேடிக்கும், நாராயணசாமிக்குமான அதிகாரப் போட்டியில்கூட தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தாமல், பா.ஜ.க.வும் கிரண்பேடியும் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தனக்கு லாபகரமாக இருக்கும். பா.ஜ.க. தயவில் முதல்வர் பதவி தானே வந்துசேரும் என பகல்கனவு கண்டுகொண்டிருந்தார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி.
2011-ல் கட்சி ஆரம்பித்த இரண்டே மாதங்களில் ஆட்சியைப் பிடித்த ரங்கசாமி, தன் அலட்சியப்போக்கால் இரண்டு தேர்தலில்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் திணறுகிறார். இதன்மூலம் ஆட்சிமாற்றம் மற்றும் அவரின் முதல்வர் கனவு தகர்ந்திருக்கிறது.
-சுந்தரபாண்டியன்
கொள்ளைக்கார காவலர்களுடன் சட்டத்துறையின் சவகாசம்!
நடிகர் பிரசாந்தின் முன்னாள் மனைவி ஜெயலட்சுமியின் தி.நகர் வீட்டில் 91 பவுன்நகை கொள்ளைபோனது. இதுதொடர்பாக ஆர்.1 போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை நடந்தது. அதில், குற்றவாளி மதுரையில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, ஆர்.1, ஆர்.2 போலீஸ் ஸ்டேஷன்களின் இன்ஸ்பெக்டர்கள் சம்பத், ஜோதிலட்சுமி, தலைமைக் காவலர்கள் சதீஷ், கார்த்திக், ஐயப்பன், பாபு அடங்கிய ஸ்பெஷல் டீம் மதுரை விரைந்தது.
அங்கு சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் நடத்திய விசாரணையில், மன்னார் (எ) மலர்மன்னன் என்பவரைக் கைதுசெய்தனர். மதுரையிலுள்ள பஜாரில் ஒரு கடையில் மன்னார் பதுக்கிவைத்திருந்த 201 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி மற்றும் 5 லட்சம் ரொக்கத்தைக் கைப்பற்றினர். ஆனால், சம்பத், ஜோதிலட்சுமி கணக்குக் காட்டியது வெறும் 61 பவுன் நகை மட்டும்தானாம். இதற்கு உடந்தையாக இருப்பதற்காக தலைமைக்காவலர் ஷீலா, பாபு ஆகியோரும் கவனிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களைக் கண்டு கொள்ளவில்லை.
இதையறிந்து, "மதுரை செல்ல நாங்கள் செலவு செய்த பணத்தையாவது கொடுங்கள்' எனக்கேட்டு கிடைக்காததால் சதீஷ், கார்த்திக், ஐயப்பன் ஆகியோர் ஜே.சி. மகேஸ்வரியிடம் புகார் கொடுத்தனர். அவரோ ஏ.சி. தொல்காப்பியன், டி.சி.அசோக் ஆகியோரிடம் விசாரணையை ஒப்படைக்க, அங்கும் வெயிட்டான விளையாட்டு நடந்துள்ளதாம். இதையடுத்து, புகார் கொடுத்த மூவரின் மீது துறை ரீதியான நடவடிக்கையாக பணியிடமாற்றம் கொடுத்துவிட்டனர்.
தற்போது இம்மூவரும் கமிஷனரை அணுகியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இருப்பினும், இந்த விவகாரத்தை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வரை கொண்டு சென்று நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளில் அதிகாரிகள் இறங்கியிருக்கிறார்களாம்.
-அ.அருண்பாண்டியன்