ஜெயலலிதா உருவாக்கிய குழப்பம்!
2004-ம் ஆண்டில் வீரப்பனைச் சுட்டுக்கொன்ற டீமில், 1997 பேட்ஜைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வாளர்களாக ஆக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவர்கள் சூப்பர் நியூமரியாக்கள் என அழைக்கப்பட்டனர். 1996 பேட்ஜைச் சேர்ந்த போலீசாரும் ஆய்வாளர்களாக ஆகிவிட்ட நிலையில், அடுத்தகட்ட பதவி உயர்வுக்கான நியமனங்கள் நடந்தன.
அதில், 1997 பேட்ஜ் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்ட நிலையில், அதை 1996 பேட்ஜ் போலீசார் எதிர்த்தனர். இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல, 1997 பேட்ஜிற்கு ஒருமுறைதான் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என தீர்ப்பளிக்கப்பட்டது. மேல்முறையீட்டுக்குச் சென்ற இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், 1997 பேட்ஜைச் சேர்ந்த மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹர், "பதவி உயர்வு வழங்காவிட்டால் ராஜினாமா செய்வேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போதைய முதல்வரிடம் இந்த விவகாரத்தை பல
ஜெயலலிதா உருவாக்கிய குழப்பம்!
2004-ம் ஆண்டில் வீரப்பனைச் சுட்டுக்கொன்ற டீமில், 1997 பேட்ஜைச் சேர்ந்த உதவி ஆய்வாளர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வாளர்களாக ஆக்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. அவர்கள் சூப்பர் நியூமரியாக்கள் என அழைக்கப்பட்டனர். 1996 பேட்ஜைச் சேர்ந்த போலீசாரும் ஆய்வாளர்களாக ஆகிவிட்ட நிலையில், அடுத்தகட்ட பதவி உயர்வுக்கான நியமனங்கள் நடந்தன.
அதில், 1997 பேட்ஜ் ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்ட நிலையில், அதை 1996 பேட்ஜ் போலீசார் எதிர்த்தனர். இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு செல்ல, 1997 பேட்ஜிற்கு ஒருமுறைதான் பதவி உயர்வு கொடுக்கப்பட்டது என தீர்ப்பளிக்கப்பட்டது. மேல்முறையீட்டுக்குச் சென்ற இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இந்நிலையில், 1997 பேட்ஜைச் சேர்ந்த மாதவரம் காவல் ஆய்வாளர் ஜவஹர், "பதவி உயர்வு வழங்காவிட்டால் ராஜினாமா செய்வேன்' என்று ட்விட்டரில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்போதைய முதல்வரிடம் இந்த விவகாரத்தை பலமுறை கொண்டுசென்றபோது, உள்துறை செயலாளர் குமரேசனுடன் ஏற்பட்ட உரசல்தான் ஜவஹருக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதற்கான காரணம் என்கிறார்கள். வீரப்பன் என்கவுண்டர் சம்பவத்தின்போது, பதவி உயர்வு வழங்கிய ஜெயலலிதா, அதிலிருந்த குளறுபடிகளைக் கண்டுகொள்ளாததே இத்தனை குழப்பங்களுக்கும் காரணம் என்கின்றனர் காவல்துறை வட்டாரத்தில்.
-அரவிந்த்
சாதி மோதலுக்கு அடிபோடும் ஆடியோக்கள்!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வெளியான ஆடியோவால், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பதற்றம் உருவாகி போராட்டம் வெடித்தது. இது சுமுகமாக முடிவதற்குள், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகிலுள்ள திருமங்கலக் கோட்டையைச் சேர்ந்த பெண்மணி, சிங்கப்பூரில் இருந்து ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டார். தன் சமுதாய பெண்களை இழிவாகப் பேசியதாக மற்றொரு சமுதாயத்தைப் பற்றி அதில் மோசமாகப் பேசியிருந்தது, அந்த சமுதாய இளைஞர்களை போராட்டத்திற்குத் தூண்டியது.
அதேபோல், முத்தரையர் சமுதாய பெண்களை இழிவாக பேசி வெளியான ஆடியோ விவகாரத்தில் துப்பு துலங்காமல் வாட்ஸ்அப் நிறுவனத்தின் உதவியை நாடியிருக்கிறது புதுக்கோட்டை காவல்துறை. அதற்குள் இந்த ஆடியோ தொடர்பாக அவதூறு வதந்திகள் பரவி போராட்டத்தை வலுப்படுத்தத் தொடங்கிவிட்டன. திருச்சிற்றம்பலம் கிராமத்தில் ஆடியோ தொடர்பாக அடுத்தடுத்து கிளம்பிய வதந்திகளை நம்பி, எம்.எல்.ஏ. கருணாஸ் போன்றவர்களும் உண்மை என்று செய்தியாளர்களிடம் பேசி வருகின்றனர். கண்ணந்தங்குடியிலும் அடுத்த அவதூறு ஆடியோ வெளியாகி பிரச்சனைக்கு வழிசெய்திருக்கிறது.
பொன்னமராவதியிலேயே தடுக்காமல் காவல்துறை மெத்தனம் காட்டியதன் விளைவு, தமிழகம் முழுவதும் சாதிய மோதல்களுக்கு அடிபோட்டுள்ளது.
-இரா.பகத்சிங்
ஓட்டப்பிடாரம் : அ.தி.மு.க. குஸ்தி!
நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான அறிப்பு வெளியான இரண்டே நாளில் வேட்பாளர்களை அறிவித்தது தி.மு.க. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அக்கட்சியின் ஒ.செ. சண்முகையா களமிறங்குகிறார். தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜை கொடுத்த வாக்குப்படி அ.ம.மு.க. வேட்பாளராக்கிவிட்டார் டி.டி.வி. இலைத்தரப்பு வேட்பாளர் தேர்வில்தான் முட்டல் மோதல்கள்.
வழக்கறிஞர் ஜெயலலிதா, ஆவின் சேர்மன் சின்னத்துரை, எக்ஸ் எம்.எல்.ஏ. மோகன், தளபதி பிச்சையா என வேட்பாளர் ரேசில் பயங்கர நெருக்கடி. கட்சி சம்பிரதாயப்படி தொகுதியின் மா.செ. கடம்பூர் ராஜுவின் சாய்ஸைக் கேட்க, தனது ஆதரவாளரான எக்ஸ் மோகனை சிபாரிசு செய்ததோடு அதில் உறுதியாகவும் இருந்திருக்கிறார். அவரது அழுத்தம் தேர்வுக்குழுவில் குறிப்பாக எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் ஆத்திரப்பட வைத்திருக்கிறது.
""மா.செ. என்கிற முறையில் விளாத்திகுளம் சட்டப்பேரவை வேட்பாளரா சின்னப்பனை அறிவிக்கணும்னு நெருக்கடி கொடுத்தீங்க. மறுக்காமல் அறிவிச்சோம். ஆனால், அங்கு நம்ம கட்சியின் மார்க்கண்டேயன், கட்சிக்கெதிரா சுயேட்சையாக களமிறங்கினாரு. ஏற்கனவே அ.ம.மு.க. வேட்பாளர் வாக்குப்பிரிக்கும் நிலையில், மார்க்கண்டேயனின் போட்டியால் கடுமையான நெருக்கடி. அவரை வாபஸ் வாங்குங்கன்னு கேட்டபோது, "எனக்கு வாய்ப்பு கொடுங்க. இல்ல, வேட்பாளரையாவது மாத்துங்க'’என்று சொல்லியும்கூட உங்க முடிவை நீங்க மாத்திக்கலை. இப்போ அ.ம.மு.க.வும், மார்க்கண்டேயனும் கடுமையா நெருக்கடி கொடுத்ததால சின்னப்பன் தேறுவாராங்கிற நெலம வந்திருச்சி. அப்படி ஒரு நெலம ஓட்டப்பிடாரத்திலும் வரணுமா?’’ என்று தேர்வுக்குழுவினர் பொங்கிவிட்டனர்.
இதனால் அடங்கிப்போன மா.செ. கடம்பூர் ராஜு, யாருக்கும் பிரஷர் கொடுக்காமல் ஆவின் சேர்மன் சின்னத்துரை, எக்ஸ் மோகன், தளபதி பிச்சையா ஆகிய மூன்றுபேரின் பெயர்களைக் கொடுத்துவிட்டு, "இவர்களில் யாரை அறிவித்தாலும் ஏற்கிறேன்'’என்று சொல்லியிருக்கிறார்.
இதனிடையே எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டுமென்று முட்டிக் கொண்டிருந்த சின்னத்துரையை வேட்பாளராக்க, அவரது நட்பு வட்டமான மனோஜ் பாண்டியனும், தளவாய் சுந்தரமும் தலைமைக்கு பிரஷர் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், சின்னத்துரை மீது ஊழல் குற்றச்சாட்டுகள், புகார்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி ஒதுக்கிவிட்டு, எம்.எல்.ஏ.வும், தெற்கு மா.செ.வுமான சண்முகநாதனின் சிபாரிசுப்படி எக்ஸ் எம்.எல்.ஏ. மோகனையே வேட்பாளராக அறிவித்திருக்கிறது கட்சித் தலைமை.
-பரமசிவன்
படம்: ப.இராம்குமார்