d

மகேந்திரனுக்கு எதிரான சதி!

sதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் சங்கத்தின் துணைத் தலைவரான டைரக்டர் "யார்' கண்ணன். கடந்த 15-ஆம் தேதி, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், வீ.சேகர், மனோஜ்குமார், ஆர்.வி.உதயகுமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ராதாரவி, நாசர், "மைக்' மோகன் உட்பட ஏராளமான திரைப்பிரபலங்களும் பத்திரிகை உலக பிரபலமான நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களும் கலந்துகொண்டனர்.

"காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுது'’’ என்ற பாடல் வரிகளை, மகேந்திரன் போட்டோவுடன் கூடிய ஃப்ளக்ஸ் பேனரில் எழுதியிருந்தது பொருத்தமாக இருந்தது. வந்திருந்த அனைவரும் மகேந்திரன் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபின், ஒவ்வொருவராக மகேந்திரனின் டைரக்ஷன் சாதனைகளையும் அவருடனான நட்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினர்.

நக்கீரன் ஆசிரியர் பேசும்போது, ""அண்ணன் மகேந்திரனின் "நெஞ்சத்த

மகேந்திரனுக்கு எதிரான சதி!

sதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பாக மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு நினைவஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் சங்கத்தின் துணைத் தலைவரான டைரக்டர் "யார்' கண்ணன். கடந்த 15-ஆம் தேதி, சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், வீ.சேகர், மனோஜ்குமார், ஆர்.வி.உதயகுமார், எடிட்டர் மோகன், நடிகர்கள் ராதாரவி, நாசர், "மைக்' மோகன் உட்பட ஏராளமான திரைப்பிரபலங்களும் பத்திரிகை உலக பிரபலமான நக்கீரன் ஆசிரியர் கோபால் அவர்களும் கலந்துகொண்டனர்.

"காற்றில் எந்தன் கீதம்... காணாத ஒன்றைத் தேடுது'’’ என்ற பாடல் வரிகளை, மகேந்திரன் போட்டோவுடன் கூடிய ஃப்ளக்ஸ் பேனரில் எழுதியிருந்தது பொருத்தமாக இருந்தது. வந்திருந்த அனைவரும் மகேந்திரன் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியபின், ஒவ்வொருவராக மகேந்திரனின் டைரக்ஷன் சாதனைகளையும் அவருடனான நட்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினர்.

நக்கீரன் ஆசிரியர் பேசும்போது, ""அண்ணன் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே'’ படமும் மணிரத்னத்தின் "மௌன ராகம்'’படமும் ரஷ்ய பட விழாவில் கலந்துகொள்ள போட்டி போட்டன. "நெஞ்சத்தைக் கிள்ளாதே' படம்தான் ரஷ்யாவுக்கு போயிருக்கணும். ஆனால் இங்கே நடந்த சதியால் "மௌன ராகம்'’போனது. அப்போது ரொம்பவும் மனசு உடைஞ்சு போனார் அண்ணன் மகேந்திரன். தமிழ் ஈழத்தில் தம்பி பிரபாகரனுடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்தவர் மகேந்திரன். "அதைப்பத்தி பதிவு பண்ணுங்கண்ணே'ன்னு அடிக்கடி சொல்வேன். "மத்தவங்க மாதிரி அதை வியாபாரம் ஆக்க விரும்பல கோபால்'னு சொல்லிட்டார். இப்ப என்னடான்னா பிரபாகரனுடன் இருப்பது மாதிரி மார்ஃபிங் போட்டோவை வச்சுக்கிட்டு எத்தனையோ பேர் அலப்பறை பண்ணிக்கிட்டிருக்கான்''’என டச்சிங்காகவும் டைமிங்காகவும் பேசினார்.

-பரமு

படம்: எஸ்.பி.சுந்தர்

தயாரிப்பாளர்-ஹீரோ நிஜ ஃபைட்!

""இது யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரின் ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால்போதும். உங்க மேடைப் பேச்சைக் கேட்ருக்கேன், ரசிச்சுருக்கேன். இரண்டு, மூன்று முறை உங்களிடம் போனில் பேசியிருக்கேன். நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துக்கிட்டிருந்தேன்... திடீர்னு நீங்க உங்க மேடையில என்னைப் பற்றியும் எனது சேவைகளைப் பற்றியும் தாறுமாறா பேச ஆரம்பிச்சீங்க. தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தினீர்கள்.

s

நீங்கள் பேச ஆரம்பித்ததும் உங்களுடைய ஒருசில தொண்டர்களும் என்னைப் பற்றியும் எனது படங்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் நாலாந்தர நடையில் பதிவு செய்கிறார்கள். எனக்கு ஏற்பட்டது போலவே பல அரசியல் தலைவர்களுக்கும் சினிமா நண்பர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. நான்பாட்ல சிவனேன்னு என்னோட பொழப்ப பார்த்துக்கிட்டிருக்கேன். இனிமேலும் என்னைச் சீண்ட நினைத்தால் களத்தில் இறங்க நானும் தயார்''’-இப்படி ஒரு காரசார அறிக்கையை கடந்தவாரம் வெளியிட்டார் "காஞ்சனா-3'’ படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமான ராகவா லாரன்ஸ்.

அந்த அறிக்கையில் ராகவா யார் பெயரையும் குறிப்பிடாமல் கண்ணியமும் ரகசியமும் காத்த நிலையில் வாண்ட்டடாக வந்து வண்டியில் ஏறினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

""எங்க அண்ணன் சீமானைத்தான் நீ குறி வச்சிருக்கேன்னு எங்களுக்குத் தெரியும். யாரைப் பார்த்து சவால் விடுற. சவால் விடணும், மோதிப் பார்க்கணும்னா, நடிகை ஸ்ரீரெட்டிகிட்டதான் நீ மோதணும். பயந்துபோன மாதிரி நடிக்கிற பேய்படத்துல கூட நடிகைகளின் இடுப்புல ஏறி உட்காரும் நீ, எங்க அண்ணனுக்கு சவால் விடுறயா? "காஞ்சனா-3' படத்தின் பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி சீஃப்பான வேலையெல்லாம் பார்க்காதே. தேன் கூட்டில் கை வைக்காதே''’’ என சீமானுக்காக வரிந்துகட்டி பொளந்து கட்டியுள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

"ஏன் இந்த நிஜ ஃபைட்' என கோலிவுட் ஏரியாவில் நாம் விசாரித்தபோது, “""அந்தத் தரப்பு, இந்தத்தரப்புகிட்ட பெரிய அளவுல எதிர்பார்த்துச்சு. அது நடக்காததால இப்படியெல்லாம் நடக்குது. ராகவேந்திரா லாரன்ஸ் விஷயத்தில் சீமானே சும்மா இருக்கும்போது சுரேஷ் காமாட்சி ஏன் ஆவேசப்பட்டார்னு தெரியல''’என்கிறார்கள்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

""எப்படியிருந்த நாங்க இப்படியாகிட்டோம்...''

s

ஈரோடு பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவன்று ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு தனது வாக்கை செலுத்த ஈரோடு கருங்கல்பாளையம் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். அப்போது அ.தி.மு.க.வினர் யாரும் அங்கு இல்லை. மேலும் எம்.எல்.ஏ. தென்னரசு தனது காரை விட்டு இறங்கி வாக்குச்சாவடி மையத்தை நோக்கிச் செல்லும்போது அங்கிருந்த ஏராளமான பொதுமக்களும் அவரை கண்டுகொள்ளவே இல்லை

வாக்குச்சாவடிக்குள் நுழைந்தபோது அங்கிருந்த அதிகாரிகளும் தென்னரசுவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தனது வாக்கை செலுத்திவிட்டு அங்கிருந்த நிருபர்களிடம் மைவிரலை உயர்த்திக் காட்டியபோது கண்களில் கண்ணீருடன் காட்சியளித்தார். அதற்குப் பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல் வெளியே வந்தார்.

""நம்ம கட்சி எப்படி எல்லாம் இருந்தது, இன்னைக்கு எந்த மரியாதையும் இல்லையே... ஓட்டுப்போட வந்தாலே நாம ஜெயிப்போமா தோற்போமானு மக்கள் மத்தியிலே இருக்கிற வரவேற்பை வைத்து புரிஞ்சுக்கலாம். இப்போ நல்லாவே தெரிஞ்சு போச்சு. என்னமோ இப்படி ஆகிப் போச்சு... இதுதான் நமக்கான ஒரு பாடம்'' என எதிரே வந்த தனது ஆதரவாளரிடம் ஆதங்கத்துடன் கூறிவிட்டு காரில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டார் தென்னரசு.

-ஜீவா தங்கவேல்

nkn260419
இதையும் படியுங்கள்
Subscribe