s

பட்டாசு, சால்வைக்கு ‘நோ’ சொன்ன தமிழச்சி!

sதென்சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் 31-ந்தேதி தமிழச்சி தங்கபாண்டியனின் பிரச்சாரத் திற்கு ஏற்பாடு செய்திருந்தார் தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினரான கே.கே.நகர் தனசேகரன். காலை 7 மணிக்கே கலைஞர் நகர்(வடக்கு) பகுதிச்செயலாளர் மு.ராசாவின் இல்லத்தின் முன்பு கூட்டம் குவியத் தொடங்கியது. தன சேகரன் காட்டிய தாராளத்தால், அங்கிருக்கும் டிபன் கடைகளும் டீக்கடைகளும் திக்குமுக்காடின.

தி.மு.க. தொண்டர்களை விடவும், தேர்தல் பறக்கும் படையினரும் வேட்பாளரின் பிரச்சாரத்தை வீடியோ எடுக்கும் படையினரும் சுறுசுறுப்பாக இருந்தனர். 8 மணிக்கு கட்சியின் பகுதி அலுவலகத்திற்கு வந்திறங்கிய தமிழச்சியை வரவேற்ற தனசேகரன், கட்சி நிர்வாகி களை அறிமுகம் செய்து வைத்தார். அறிமுக படலம் முடிந்ததும் மாடியில் இருக்கும் ப.செ. மு.ராசாவின் இல்லத்திற்குச் சென்றார் தமிழச்சி. அங்கு டீ, பிஸ்கட் கொடுத்து உபசரித்தார் ராசா.

சிறிதுநேர ஆலோசனைக்குப் பிறகு, தமிழச்சி கீழே வ

சிறிதுநேர ஆலோசனைக்குப் பிறகு, தமிழச்சி கீழே வந்ததும் சிலர் பட்டாசு வெடிக்கவும் சால்வை போர்த்தவும் முயற்சித்தபோது, "உங்க அன்புக்கு நன்றி. பட்டாசு வெடித்தாலோ, சால்வை போட்டாலோ என்னோட தேர்தல் செலவு கணக்குல சேர்த்துருவாங்க. அதனால அமைதியான முறையில ஓட்டுக் கேட்டுப் போவோம்'’என சிரித்தவாறு சொல்லிவிட்டு, பிரச்சார ஜீப்பில் ஏறினார். அப்போது சில பெண்கள் ஆரத்தி எடுத்தபோது அன்புடன் ஏற்றுக்கொண்டு தொண்டர்கள் பேரணியுடன் புறப்பட்டார்.

அங்கிருந்து கிளம்பி, காமராஜர் சாலையில் சென்றபோது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதும், "நம்மால மக்களுக்கு இடைஞ்சல் வரக்கூடாது, அதனால போக்குவரத்தை க்ளியர் பண்ணுங்க' என நிர்வாகிகளை கேட்டுக்கொண்டார் தமிழச்சி.

-ஈ.பா.பரமேஷ்வரன்

படம்: எஸ்.பி.சுந்தர்

சோடாபாட்டில் வீச்சு! விரைவில் மதக்கலவரம்?

s

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட் பாளர் நயினார் நாகேந்திரன், ஏப். 01-ந் தேதி திருப்புல்லாணி ஒன்றியமான ரெகுநாத புரத்திலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். அமைச்சர் மணிகண்டன் மற்றும் எம்.பி. அன்வர்ராஜா ஆகியோர் உடனிருந்தனர். பிரச்சாரம் தொடங்கிய கொஞ்ச நேரத் திலேயே இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான பெரியபட்டிணம் வந்தவர்கள், அங்குள்ள பேருந்துநிலையம் அருகே நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது காயிதே மில்லத் தெருமுனையில் இருந்து பறந்துவந்த சோடா பாட்டில் நயினார் நாகேந்திரன் அருகில் நின்றுகொண்டிருந்த சுப்பத்தா வலசையைச் சேர்ந்த உடையப்பனின் தலையைப் பதம் பார்த்தது. ரத்தம் கொட்ட சரிந் தவரைத் தாங்கிப் பிடித்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது “"யோவ் அந்தா இருக்கான்யா... அவனைப் பிடிய்யா'’என்று அமைச்சர் கூப்பாடு போட்டும், சாவகாச மாகவே சென்ற போலீஸ், பாட் டில் வீசியவனை தப்ப விட்டது.

அதேவேளையில், “இதன் பின்னணியில் "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா', "எஸ்.டி.பி.ஐ.' கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் இமாம் ஒருவர்’’என சிலரைக் குறிவைக்கிறது காவல்துறை. “"வேட்பாளருக்கு எதுவும் ஆகாமல் அருகிலிருந்தவரை யாராச்சும் அடிப்பாங்களா? இவனுகளே பண்ணிட்டு பழியை நம்மீது போடுவானுகளாம்'’என எதிர்ப்பும் கிளம்பியிருக்கிறது.

ஏற்கனவே, "இந்துக்களின் வாக்குகள் இந்துக்களுக்கே' என்பதையே தேர்தல் பரப்புரை யாக்கி பா.ஜ.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் ராமநாத புரத்தில் வாக்கு சேகரிக்கின்றன. மக்களவைத் தேர்தலையொட்டி ராமநாதபுரத்தில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக உளவுத் துறை மத்திய-மாநில அரசுகளை எச்சரித்து அறிக்கை கொடுத் திருக்கிறது. அதனை ஆமோதிப் பது போலவே ராமநாதபுரம் திருப்புல்லாணி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

-நாகேந்திரன்

அமைச்சருக்கு இஸ்லாமியர்கள் அதிர்ச்சி வைத்தியம்!

s

மதுரை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து மார்ச் 29-ந்தேதி அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். புதூர் பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்தவர்களிடம் வாக்கு சேகரிக்க முயன்றபோது, "மோடியைப் பிரதமராக்குவோம்னு சொல் லிட்டு எந்த மூஞ்சியை வச்சிக்கிட்டு இங்க வந்தீங்க? தயவுசெய்து வெளியே போயி டுங்க'’என்று எதிர்ப்பு தெரி வித்தனர் இஸ்லாமியர்கள்.

எதிர்ப்பை சமாளிப்பதற்காக பேசிய செல்லூர் ராஜு, “"என்ன தம்பி இப்படிப் பேசுறீங்க. நாங்க எப்போதும் உங்க கூடதானே இருக்கோம். அம்மா இசுலாமியர்களுக்காக'…என்று இழுக்க...“"மோடியா லேடியா' என்று கேட்ட அந்தம்மாவையே மறந்துட்டு, மதவாதக் கட்சியோடு கூட்டணி வச்சிருக்கீங்க'’என்று எடுத்த எடுப்பிலேயே மறுத்துவிட்டனர்.

"சரி நாங்க உள்ளே வரமாட்டோம். வெளியே நின்னு நோட்டீஸாவது கொடுக்கிறோம்' என்றதற்கும் மறுப்பே பதிலாக வந்தது. “"தேர்தலுக்காகத்தான் கூட்டணிப்பா. நான் உங்களில் ஒருத்தனாகத்தானே இருந்திருக்கேன். மறந்துட்டீங்களா?'’என்று பரிதாபமாக கேட்டார் செல்லூர் ராஜு. அதற்கு “"அதெல்லாம் மறக்கலை அண்ணா. ஆனால், மோடியைப் பிரதமராக்க நாங்க ஓட்டுப் போடமாட்டோம்'’என்று அழுத்தமாகவே சொல்லிவிட்டனர்.

ஏமாற்றத்துடன் வெளியே வந்த அமைச்சர் செல்லூர் ராஜு, “"ஏம்பா… பத்திரிகைக்காரங்க யாரும் இல்லையே. அப்படியே இருந்தாலும் இதை செய்தியா போட்டு றாதீங்க'’என்றவர், "எல்லாத்தையும் “கவனிங்கப்பா. செய்தி வெளியாச்சுனா நமக்குதான் அசிங்கம்'’என்று தன் உதவியாளரிடம் புலம்பிவிட்டு காரில் ஏறிப் பறந்தார்.

-அண்ணல்

nkn090419
இதையும் படியுங்கள்
Subscribe