signal

‘குடி’மகன்களின் அதிரடி கோரிக்கை!

signal

அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு, அடுத்தடுத்த அப்டேட்டுகள் என தேர்தல் வேலையாக பரபரப்பாக இருந்தபோது ஒரு மிஸ்டு கால் வந்தது. உடனே தொடர்பு கொண்டபோது, “""கன்னிவாடி குடிகாரர்கள் சங்கத்தில் இருந்து பேசுறோம் சார். தேர்தல் நெருங்கி வர்றதால, குடிகாரங்களான நாங்க எங்க தரப்பு கோரிக்கையை வைக்கணும் இல்லையா...…அதான் பழைய ஒயின்ஷாப் பின்னாடி இருக்குற தென்னந்தோப்பில் செயற்குழு கூட்டம் நடத்துறோம். நீங்க கண்டிப்பா வந்துடுங்க''’என கேப் விடாமல் பேசிவிட்டு கட் செய்தார் அந்தப் பக்கம் பேசியவர்.

நாமும் கன்னிவாடிக்குச் சென்று செயற்குழுவைக் கவனித்துவிட்டு நிர்வாகி ஒருவரிடம் பேச்சைத் தொடங்கினோம். படக்கென இடுப்பில் சொருகியிருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென இரண்டு பெக் அடித்தவர்,…""தேர்தல் வந்துட்டாலே 500, 1000-னு அள்ளி வீசுறாங்க அரசியல்வாதிங்க. ஆனால், எங்களைப் போன்ற குடிகாரங்களுக்கு வெறும் ரூ.120/-க்கு விற்கக்கூடிய எம்.சி., ஹனிபீ, கார்னிடால், மானிட்டர், மென்ஸ் கிளப், வி.

‘குடி’மகன்களின் அதிரடி கோரிக்கை!

signal

அரசியல் பிரமுகர்கள் சந்திப்பு, அடுத்தடுத்த அப்டேட்டுகள் என தேர்தல் வேலையாக பரபரப்பாக இருந்தபோது ஒரு மிஸ்டு கால் வந்தது. உடனே தொடர்பு கொண்டபோது, “""கன்னிவாடி குடிகாரர்கள் சங்கத்தில் இருந்து பேசுறோம் சார். தேர்தல் நெருங்கி வர்றதால, குடிகாரங்களான நாங்க எங்க தரப்பு கோரிக்கையை வைக்கணும் இல்லையா...…அதான் பழைய ஒயின்ஷாப் பின்னாடி இருக்குற தென்னந்தோப்பில் செயற்குழு கூட்டம் நடத்துறோம். நீங்க கண்டிப்பா வந்துடுங்க''’என கேப் விடாமல் பேசிவிட்டு கட் செய்தார் அந்தப் பக்கம் பேசியவர்.

நாமும் கன்னிவாடிக்குச் சென்று செயற்குழுவைக் கவனித்துவிட்டு நிர்வாகி ஒருவரிடம் பேச்சைத் தொடங்கினோம். படக்கென இடுப்பில் சொருகியிருந்த குவார்ட்டர் பாட்டிலை எடுத்து மடக் மடக்கென இரண்டு பெக் அடித்தவர்,…""தேர்தல் வந்துட்டாலே 500, 1000-னு அள்ளி வீசுறாங்க அரசியல்வாதிங்க. ஆனால், எங்களைப் போன்ற குடிகாரங்களுக்கு வெறும் ரூ.120/-க்கு விற்கக்கூடிய எம்.சி., ஹனிபீ, கார்னிடால், மானிட்டர், மென்ஸ் கிளப், வி.எஸ்.ஓ.பி., ராயல் பேலஸ், ராயல் அக்காடு போன்ற சரக்குகளைக் கொடுத்து ஏமாத்திடுறாங்க. அதனால இந்தமுறை பொதுமக்களுக்குக் கொடுக்குற ரூ.500க்கு சமமான விலையுள்ள எம்.சி.எம்.கோல்டு, 1848, போல்ஸ், கிங்லூயிஸ்னு வாங்கிக் கொடுத்தாத்தான் ஓட்டுப் போடுவோம்''’என்றார்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சங்க உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரக் கூச்சலிட, அவர்களைக் கட்டுப்படுத்திய நிர்வாகி, “""ஒட்டுமொத்த குடிகாரர்களோட கோரிக்கையும் இதுதான். அரசியல் கட்சிகள் நினைவுல வைச்சிக்கணும்''’என்றார்.

-சக்தி

சுயேட்சையாகும் அ.தி.மு.க. மாஜி!

signal

அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளரும், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மார்க்கண்டேயன், திடீரென தனது ஆதரவாளர்களைத் திரட்டினார்.

ஆர்வமாக வந்திருந்தவர்களின் மத்தியில், ""நான் முழுசா நம்பிய ஓ.பி.எஸ். எனக்கு உதவவில்லை. அமைச்சர் கடம்பூர் ராஜுவின் மிரட்டலால் என்னை விட்டுட்டு சின்னப்பனை எம்.எல்.ஏ. வேட் பாளரா அறிவிச்சிட்டாங்க. அம்மா இருக்கும்போது இப்படி யொரு அமைச்சர் செய்தால், விமானத்துல இருந்து இறங்கு றதுக்கு முன்னாடி அமைச்சர் பதவியைப் பறிச்சிருப்பாங்க. நான் செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்யு றேன். தலைமை என்னை கட்சியிலிருந்து நீக்கினாலும் பரவாயில்லை''’என்று கொட்டித் தீர்த்துவிட்டார்.

விளாத்திகுளம் எம். எல்.ஏ.வாக இருந்தபோது காண்ட்ராக்ட், மணல் குவாரி என அனைத்து பணபலன்களையும் அனுபவித்தவர் மார்க்கண்டேயன். சிட்டிங் எம்.எல்.ஏ.வான உமாமகேஸ்வரி டி.டி.வி. அணிக்குத் தாவியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்டு விட்டார். தற்போது அ.தி.மு.க. வில் மீண்டும் நமக்கே சீட் கொடுப்பார்கள் என்ற நம்பிக் கையில் ஒரு ‘சி’ வரைக்கும் செலவு செய்தார். தூத்துக்குடி மா.செ. சண்முகநாதன் ரெக்கமண்டேஷன் கூட மார்க்கண்டேயன்தான். ஆனால், தனக்குப் பதிலாக கடம்பூர் ராஜு ஆதரவாளரான சின்னப்பனுக்கு சீட் கொடுத்ததைக் கேட்டு ஆடிப் போய் விட்டார்.

தொகுதியில் செல்வாக்கையும், ஆதரவாளர் கூட்டத்தையும் வைத்திருக் கும் மார்க்கண்டேயனின் இந்த நிலையை அறிந்த அ.ம.மு.க. மாணிக்கராஜா நான்கு நாட்களாக விடாமல் கரைத்துவந்தார். தினகரனே நேரடியாக அழைப்பு விடுத்தும் மார்க்கண்டேயன் அதை ஏற்கவில்லை. மாறாக, விளாத்திகுளத்தில் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்துவிட்டார்.

இதற்காகவே பங்குனி உத்திரம் நாள் பார்த்து, தனது அம்பாள் நகர் மண்டபமே திணறும் அளவுக்கு கூட்டத்தைக் கூட்டி அறிவிப்பை வெளியிட்டார். தான் கட்டிய சிவன் கோவிலில் வழிபட்ட கையோடு புதூரில் இருந்து பிரச்சாரத்திற்குக் கிளம்பிவிட்டார் மார்க்கண்டேயன்.

-பரமசிவன்

ஓட்டுப் பிரிக்கும் முத்தரையர் சங்கங்கள்!

signal

திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களில் பெரும்பான்மையாக வசிக்கின்றனர் முத்தரையர் சமுதாய மக்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி உழவர் சந்தைத் திடலில் வீர முத்தரையர் முன்னேற்றச் சங்கம் நடத்திய தேர்தல் சமய மாநாட்டில், “நம் சமுதாய மக்களுக்கு அரசியல் பதவிகளில் முன்னுரிமை தரவில்லை எனில், திராவிட கட்சிகளுக்கு ஆதரவு கிடையாது’’ என்று பேசினார் சங்கத் தலைவர் செல்வகுமார்.

இந்நிலையில், மார்ச் 21ஆம் தேதி திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், திருச்சியில் தங்கியிருந்து மாலை பெரம்பலூர் எம்.பி. வேட் பாளர் ஐ.ஜே.கே. பாரிவேந்தருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கே.என்.நேருவின் அழைப்பை ஏற்று ஸ்டாலினைச் சந்தித்த வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தின் தலைவர் செல்வகுமார், தி.மு.க.வுக்கு வருகின்ற தேர் தல்களில் ஆதரவைத் தெரிவித்ததோடு, திருச்சியைச் சுற்றி யுள்ள ஏழு மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக வும் அறிவித்தார். இதற்கிடையே, திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட இருக்கும் வீர முத்தரையர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் சி.கருப்பையா, வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்க ளிடம் பேசியபோது, “""திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் முத்தரையர்கள் வசித்து வருகின்றனர். திருச்சியில் முத்தரையர்களின் பிரதிநிதியாக வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் சமுதாயத்தின் குரலை ஒலிப்பேன். பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு அளித்திருக்கிறோம்’’ என்று கூறியிருக்கிறார்.

-ஜெ.டி.ஆர்.

nkn260319
இதையும் படியுங்கள்
Subscribe