லேடியை மறந்த மோடி விசுவாசிகள்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் கடந்த மார்ச் 10-ஆம் தேதி நாகை அவுரித்திடலில் நடைபெற்றது. அதில் பேசிய சி.பி.எம். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், மோடியை ஒரு பிடி பிடித்தார்.
"இந்தத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். 2014 லோக்சபா தேர்தலின்போது "இங்கு வெற்றிபெறப் போவது மோடியா இந்த லேடியா என்று பார்த்துவிடலாம்' என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. பிரச்சாரம் செய்தார். சொன்னபடி வெற்றிபெற்றும் காட்டினார்.
ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிசெய்பவர்கள், அந்த லேடியின் சபதத்தை மறந்து மோடிதான் எங்கள் டாடி என்று சொல்வது வேடிக்கையாக உள்ளது. சென்னையைச் சூறையாடிய வர்தா புயல், கன்னியாகுமரி மாவட்டத்தை நாசமாக்கிய ஒக்கி புயல், டெல்டாவை அழித்த கஜா புயல் என எந்த இயற்கைப் பேரழிவின்போதும் தமிழக மக்களைப் பார்வையிட வராத மோடி, தேர்தலைக் கருத்தில்கொண்டு ஒரு மாதத்துக்குள் ஐந்துமுறை தமிழகத்துக்கு வந்துவிட்டார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றாதவர் மோடி. மத்தியி லிருப்பவர்களின் எடுபிடியாக இருக்கும் ஊழல் ஆட்சியை தமிழகத்தில் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்''’என நறுக்கென உரையாற்றினார்.
-க.செல்வகுமார்
மிரட்டும் மப்பு சங்க மா.செ.!
"நக்கீரன் சார்... இப்போ நீங்க பிஸினா, எலெக்ஷன் வந்ததும் நான் பிஸியாகிடுவேன். இப்போ ஃபுல் ஸ்டெடியா இருக்கேன்''’என உளறல் மொழியில் நம்மிடம் பேசியவர் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டம் பரப்பு கிராமத் தைச் சேர்ந்த செங்கோட்டையன்.
"எந்தக் கட்சி எலெக்ஷன் வேலையில பிஸியா இருப்பீங்க?' என்று நைசாக கேட்டோம். அதே ஃபார்மில் தொடர்ந்த செங்கோட் டையன், “""மது குடிப்போர் சங்கத் தோட ஈரோடு மா.செ. நான் தானுங்க. மற்ற கட்சி மா.செ.ன்னா நேர்ல போய் பேட்டி எடுப்பீங்க. எனக்காக அட்லீஸ்ட் பாருக்காச்சும் வந்தீங்களா? இப்போலாம் காலம் மாறிப்போச்சு. எங்களாலதான் அரசுக்கு வருவாய் கிடைச்சி, மாச வருமானம் கிடைக்கிதுன்னு அரசு அதிகாரிகளே மரியாதை கொடுக் கிறாங்க தெரியுமா? இன்னொரு முக்கியமான விஷயம்… எங்க கட்சி சார்புல 40 தொகுதியிலயும் போட்டி போடப்போறோம். ஈரோட்டுல நான்தான் வேட்பாளர்'' என்றார் அசால்ட்டாக.
அதிர்ச்சியில் "அப்படியா' என்று நாம் கேட்டு முடிப்ப தற்குள், ""ஒவ்வொரு தொகுதி யிலையும் நேரடி குடிகாரர் கள் 65% பேர், மறைமுக குடிகாரர்கள் 20%, குடிக்கும் பெண்மணிகள் 5%னு எங்க ளுக்கு பெரிய வாக்குவங்கி இருக்கு. நாங்க புறக்கணிச்சா ஒரு பய எம்.பி. ஆக முடியாது'' என்று சொன்னபடியே, தேர் தல் வாக்குறுதிகளையும் அடுக் கினார். ""பிராந்திக் கடையுடன் கள்ளுக்கடை, குடிகாரர்களுக்கு இலவச பஸ்பாஸ், விபத்தி லிருந்து பாதுகாக்க இலவச கால்டாக்ஸி வசதி, 10 லட்சம் வரை இன்சூரன்ஸ், தாலிக்குத் தங்கம் போல - தாலி அறுக் கும் குடும்பத்தில் ஒருவருக்கு கவர்ன்மெண்ட் வேலை, டாஸ் மாக் வருமானத்தின் சரிபாதி யில் இலவச கல்வி, மருத்துவம், டாஸ்மாக் கடைகளில் கடன் திட்டம்; முழுக்க முழுக்க பெண் பணியாளர்கள்'' என மூச்சு விடாமல் பேசிக் கொண்டே, “"நம்ம ஓட்டு நம்மளுக்கே… குடிகாரர்கள் கையில் குடியரசு அமைப் போம்' என கோஷம் போட்டார்.
"கிக்'கில் இருந்தது செங் கோட்டையன்தான் என்றா லும், கிறுகிறுத்துப் போனது என்னவோ நாம்தான்!
-ஜீவாதங்கவேல்
பிரஸ் கிளப்புக்கு சீல் வைத்த கலெக்டர்!
மார்ச் 11-ஆம் தேதி, தமிழக காங்கிரசின் மேலிடப் பொறுப்பாளரான சஞ்சய்தத், நெல்லை பிரஸ்கிளப் வந்தார். வந்த இடத்தில், ராகுல்காந்தி யின் கன்னியாகுமரி வருகை தொடர்பாக பத்திரிகையாளர் களைச் சந்தித்து பேட்டி யளித்துவிட்டுச் சென்றார்.
"கலெக்டர் அலுவலக வளாகத்திலிருக்கும் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது' என நெல்லை மாநகராட்சி கமிஷனர் புகார்கொடுக்க, கலெக்டர் ஷில்பா உத்தரவின் பேரில் தாசில்தார் கனகராஜ் பிரஸ் கிளப்பின் முதல் தளத்தைப் பூட்டி சீல்வைத்தார்.
கலெக்டரின் நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்கள் உள்ளிருப் புப் போராட்டம் நடத்தியும் பலனில்லை. இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரி களிடம் நாம் பேசியதில், ""அந்த பிரஸ் கிளப் அரசுக்குச் சொந்த மான கட்டடத்தில் உள்ளது. அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு வைத்தது தேர்தல் நடத்தை விதி முறையை மீறுவ தாகும். அதனால் தான் சீல்''’என்றனர். செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலெக்டரிடம் கேட்டபோதும், முடிவில் மாற்றம் வரவில்லை. இதனால் ஆத்திரமான பத்திரி கையாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்திற்கு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றி அனுப் பினர். ""இதற்கு முந்தைய தேர்தல்களில் இதேபோன்று அனைத்துக் கட்சியினரும் பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தியுள்ளனர். அன்றைக்கெல்லாம் கலெக்டர் கள் இதுபோல் நடந்து கொண்டதில்லை''’என்கிறது பத்திரிகையாளர்கள் தரப்பு.
கலெக்டர் ஷில்பாவோ சொன்ன விளக்கத்தையே திரும் பச் சொல்வதோடு, "பத்திரிகை யாளர்கள் தரப்பில் விளக்கம் கேட்டிருக்கிறோம்' என்கிறார். எந்தவொரு மாநிலத்திலும் இதுபோன்று பத்திரிகையாளர் கள் மன்றம் சீல்வைக்கப்பட்ட தில்லை.
பாவம், அவருக்கு யார், எங்கி ருந்து உத்தரவு தந்தார்களோ?
-பரமசிவன்
படம்: இராம்குமார்