மேடையிலேயே ‘மாஜி’ ஆக்கப்பட்ட மா.செ.!

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி தாளமுத்து நகரில் நடந்து கொண்டிருந்தது. மேடையில் அமைச்சர் வேலுமணி, ஸ்ரீவைகுண்டம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சண்முகநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் signalபோன்றோர் அமர்ந்திருக்க, களைகட்டிய கூட்டத்தில் தூத்துக்குடி அ.தி.மு.க. மா.செ. சி.த.செல்லப்பாண்டியன் புளகாங்கிதமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

""அந்தா பேசிட்டிருக்காரே மா.செ. சி.த., அவருக்கு இதுதான் கடைசிக் கூட்டம். அவரை மா.செ. பொறுப்பிலிருந்து கழட்டிவிடப் போறாங்க''’என்று சிரித்தபடி அருகில் இருந்தவரின் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருந்தார் அமைச்சர் வேலுமணி. அடுத்த ஒருசில நிமிடங்களில் பேசிக்கொண்டிருந்த செல்லப்பாண்டியனின் செல்போன் சிணுங்கியது.

ஆர்வமாக காதில் எடுத்து வைத்தவருக்கு, ""உங்களை மா.செ. பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு எம்.எல்.ஏ. சண்முகநாதனை அந்தப் பொறுப்புக்கு நியமித்திருக் கிறோம்''’என்று ஷாக் கொடுத்தது தலைமைக்கழக எதிர்க்குரல்.

Advertisment

அதிர்ச்சியில் வியர்த்துப்போன சி.த. பேச்சைப் பாதியில் நிறுத்திவிட்டு, மேடையிலிருந்த அமைச்சர், மற்றவர்களிடம் எதுவும் சொல்லாமல், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு விறுவிறுவென்று கிளம்பி விட்டார். எதுவும் புரியாத கூட்டத்திலிருந்த ர.ர.க்கள் என்னமோ ஏதோவென்று பதறிப்போனார்கள். பிறகுதான் அவரது பதவி போனது தெரிந்திருக்கிறது.

பதவி பறிபோன மறுநாள் காலையிலேயே மீராஷா உள்ளிட்ட நான்கு காண்ட்ராக்டர்களைக் கூட்டிக்கொண்டு இலங்கைக்கு பறந்து விட்டா ராம் சி.த.

"பதவியைப் பிடுங்கிட்ட கவலையை இலங்கைக்குப் போனாதான் மறக்க முடியுமாம். அதான் அண் ணாச்சி பறந்திட்டாரு'’என்று அர்த்தமாகச் சிரித்தபடி கமெண்ட் அடிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

Advertisment

-பரமசிவன்

ஃபைனான்ஸ் கொடுமையால் பலியான விவசாயி!

signal

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூருக்கு அருகிலுள்ளது டி.மடிவா ராயனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் பாலாஜி, வயது 30. விவசாயி யான இவர் விழுப்புரத்தில் உள்ள மகேந்திரா டிராக்டர் கம்பெனியில் 9 மாதங்களுக்கு முன்னர் ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள டிராக்டரை ஃபைனான்ஸ் மூலம் தவணைக்கு வாங்கியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் தவறாமல் தவணை செலுத்தி வந்துள்ளார் பாலாஜி. இந்த மாதம் பொருளாதார நெருக்கடியால் தவணை செலுத்த முடிய வில்லை. இதனை அறிந்த பைனான்ஸ் கம்பெனி மேலாளர் மற்றும் ஊழியர்கள் பாலாஜி யின் வீட்டிற்கு படையெடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது பாலாஜியும் அவரது குடும் பத்தினரும் அவர்களின் காலில் விழுந்து, அவகாசம் கேட்டு கதறியழுதும் கண்டுகொள்ள வில்லை. ஊரே இதை வேடிக்கை பார்த்தது.

இதைப் பார்த்த பாலாஜியின் சித்தப்பா பாபு, தவணைத் தொகையை உடனடியாக செலுத்தி நிலைமையைச் சரிசெய்தார். இருப்பினும், பைனான்ஸ் கம்பெனி ஊழியர்களின் இரக்கமற்ற தன்மையை நினைத்து மனமுடைந்தும், அவமானத்தால் குறுகியும் போயிருந்த பாலாஜி, அன்று மாலையே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக மீட்டு மருத் துவமனையில் சேர்த்தும் பாலாஜியைக் காப்பாற்ற முடியவில்லை.

ஆத்திரமடைந்த கிராம மக்கள் பாலாஜிக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர். ஏழை விவ சாயிகளின் உயிரைக் குடிக்கும் ஃபைனான்ஸ் கம்பெனி களுக்கு எப்போது கடிவாளம் போடப்போகிறது அரசு?

-எஸ்.பி.சேகர்

கப்பலில் வருதா தென்னங்கன்று?

signal

கஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டது. அதிலும் தென்னை விவசாயம் முற்றிலும் அழிந்து, வாழ்வாதாரம் இல்லாமல் விவசாயிகள் தவித்துவருகிறார்கள். இந்த நிலையில் "அரசு கொடுக்கும் தென்னங்கன்றுகள் 5 வருசம் இல்ல 10 வருசம் ஆனாலும் காய்க்காது. தென்னை விவசாயிகளை அழிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது' என்று பட்டுக்கோட்டை பகுதி தென்னை விவசாயிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோலியத்துறை அதிகாரிகளுடன், புயல் பாதித்த பகுதிகளைப் பார்க்க நெடுவாசல் வந்தபோது... ""விவசாயிகளுக்கு பா.ஜ.க அரசு துணைநிற்கும். ஆந்திரா, கர்நாடகா, ஒரிசா மாநிலங்களில் இருந்து தென்னங் கன்றுகள் வாங்கித் தர ஏற்பாடுகள் செய்வோம்'' என்றவர், ""அந்தமானில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ராணுவ கப்பலில் தென்னங்கன்றுகளை கொண்டுவந்து இறக்கி விவசாயிகளுக்கு வழங்குவோம்'' என்று அதிரடியாகச் சொல்லிவிட்டுச் சென்றார். மாதங்கள் 3 ஓடிவிட்டன. இதுவரை ஒரு தென்னங்கன்றுகூட வரவில்லை.

போராட்டக் களம் கண்டுள்ள நெடுவாசல், பேராவூரணி பகுதி தென்னை விவசாயிகள், ""ராணுவ கப்பல்ல தென்னங்கன்று கொண்டு வந்து கொடுப்போம்னு சொன்னீங்களே... அந்தக் கப்பல் வந்திருச் சாம்மா? எவ்வளவு விவசாயிகளுக்கு கொடுத்தீங்க? எத்தனை வருசத்துல காய்க்கும்? இப்படித்தான் நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் பொன்னார் "ஹைட்ரோ கார்பன் வராது'ன்னு சொல்லிட்டுப் போனார். அடுத்தவாரமே நட்சத்திர விடுதியில ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த தென்னங்கன்று எப்ப வரும்னு தெரியலம்மா. நீங்களே ஒரு அறிக்கையில சொல்லிருங்கம்மா'' என்று நிர்மலா சீதாராமனை வறுத்து எடுக்கின்றனர்.

-இரா.பகத்சிங்