பிடிவாத அரசால் முதல் பலியான ஆசிரியர்!
ஜாக்டோ-ஜியோ போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் காதில் வாங்காத தமிழக அரசு, போராடியவர்கள் மீது கைது, சிறை என அடக்கு முறையை கட்டவிழ்த்தது. அதி லும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான நடவடிக்கைகளைப் பார்க்க முடிந்தது.
இந்தப் போராட்டத்தில் இரண்டாம்கட்டமாக 77 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் மணமேல்குடி ஒன்றியம் கூம்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சிவாவும் ஒருவர். நீதிமன்றத்தில் ஆஜரானபோது, "உங்களில் வீட்டுக்குப்போக சரியான காரணம் சொல்லும் ஒருவரை விடுவிப்பதாக' நீதிபதி கேட்க, "எனக்கு கல்யாணமாகி ஆறுமாசம்தான் ஆகுது' என்றார் சிவா. ஆனாலும் அவரை விடுவிக்கவில்லை.
“"உங்களுக்கெல்லாம் எப்படியோ… ஆனா, பத்துநாள் சம்பளம் பிடிச்சாகூட எனக்குக் கஷ்டம்தான். மனைவி சங்கரன்கோவில் அழகுநாச்சியார்புரத்தில் படிக்கிறா. ரொம்ப வறுமையான குடும்பம்'’என சிறையில் சிவா விரக்தியுடன் பேசியதைக்கேட்டு சக ஆசிரியர்கள் சிரித்திருக்கின்றனர். "உண்மையைச் சொன்னா தப்பா?' என மனம்நொந்து கேட்டிருக்கிறார் சிவா. சில நாட்கள
பிடிவாத அரசால் முதல் பலியான ஆசிரியர்!
ஜாக்டோ-ஜியோ போராட்டக்காரர்களின் கோரிக்கைகளைக் காதில் வாங்காத தமிழக அரசு, போராடியவர்கள் மீது கைது, சிறை என அடக்கு முறையை கட்டவிழ்த்தது. அதி லும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமான நடவடிக்கைகளைப் பார்க்க முடிந்தது.
இந்தப் போராட்டத்தில் இரண்டாம்கட்டமாக 77 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் மணமேல்குடி ஒன்றியம் கூம்பள்ளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சிவாவும் ஒருவர். நீதிமன்றத்தில் ஆஜரானபோது, "உங்களில் வீட்டுக்குப்போக சரியான காரணம் சொல்லும் ஒருவரை விடுவிப்பதாக' நீதிபதி கேட்க, "எனக்கு கல்யாணமாகி ஆறுமாசம்தான் ஆகுது' என்றார் சிவா. ஆனாலும் அவரை விடுவிக்கவில்லை.
“"உங்களுக்கெல்லாம் எப்படியோ… ஆனா, பத்துநாள் சம்பளம் பிடிச்சாகூட எனக்குக் கஷ்டம்தான். மனைவி சங்கரன்கோவில் அழகுநாச்சியார்புரத்தில் படிக்கிறா. ரொம்ப வறுமையான குடும்பம்'’என சிறையில் சிவா விரக்தியுடன் பேசியதைக்கேட்டு சக ஆசிரியர்கள் சிரித்திருக்கின்றனர். "உண்மையைச் சொன்னா தப்பா?' என மனம்நொந்து கேட்டிருக்கிறார் சிவா. சில நாட்களில் இடைநீக்கம் விலக்கப்பட்டு நிபந்தனைகளுடன் அனைவரும் பணிக்குத் திரும்பினர். நாகுடியில் நண்பர்களுடன் தங்கியிருந்து சிறை அனுபவத்தால் ஏற்பட்ட மன உளைச்சலுடனே பணிக்கு சென்றுவந்த சிவா, பிப். 23-ஆம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலியால் துடித்திருக்கிறார். உடனடியாக அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்துவிட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்துவிட்டது.
"அரசாங்கத்தின் பிடிவாதத்தால் ஏற்பட்ட மனஉளைச்சலே சிவாவின் உயிரைப் பறித்துவிட்டது. பலரின் நிலையும் இதுதான். ஏதாவது விபரீதம் நடக்கும் முன்னே அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்கிறனர் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள்.
-செம்பருத்தி
சொந்த செலவில் வேட்டுவைத்த பா.ஜ.க!
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு நிர்வாக ரீதியில் குடைச்சல்களைத் தருகிறார் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி. என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமியும் ஆட்சியைப் பிடிப் பதிலேயே கண்ணாக இருக்கிறார். அதை பா.ஜ.க. தரப்பிடம் வெளிப்படுத்தியும் வருகிறாராம்.
சென்ற ஆண்டு பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா புதுச்சேரிக்கு வந்த போதே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுப்பதற்கு, கோடிக்கணக்கில் பேரம் பேசிய தாக கூறப்பட்டது. ஆனால், பா.ஜ.க. தூண்டிலில் அப்போது யாரும் சிக்கவில்லை.
தற்போது நாடாளுமன்றத் தேர் தல் நெருங்கும் வேளையில், சட்டமன்றத் தேர்தலை நடத்துவது அல்லது ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்துவது என்ற முடிவில் மீண்டும் தூண் டில் வேலைகள் பலமாகி விட்டன. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம், "ஆதரவை வாபஸ் வாங்குங்கள் அல்லது ராஜி னாமா செய் யுங்கள்'’என ரூ.20 கோடி வரை பேரம் பேசப் படுகிறதாம். இதற் கான ஆடியோ ஆதாரங் களோடு காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள். விஜயவேணி, தீப்பாய்ந்தான் ஆகியோர் பிப். 20ஆம் தேதி சபா நாயகர் வைத்திலிங்கத்திடம் புகார் கொடுத்துள்ளனர்.
"எதிர்க்கட்சி வரிசையிலுள்ள எம்.எல்.ஏ.க் களும், எம்.எல்.ஏ. அல்லாத சிலரும் தங்கள் பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பதாக புகார் வந்துள்ளது. இதுதொடர்பான மேலதிக நடவடிக்கை கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்களது கட்சித் தலைமையிடமும் புகார் கொடுத்திருப்பார்கள். எனவே, இந்தப் புகார்மீதான நடவடிக்கை சட்டவிதிகளின்படியா? அல்லது காவல்துறையிடம் புகாரளிப்பதா? என்பது முடிவு செய்யப்பட்டு கூடியவிரையில் நடவடிக்கை எடுக்கப்படும்' என வைத்திலிங்கம் தெரிவித்திருக்கிறார்.
எப்பாடு பட்டாவது ஆட்சியைக் கவிழ்க்கவேண்டும் என்கிற என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணியின் நோக்கம், அவர்களுக்கு எதிராகவே இப்போது திரும்பியிருக்கிறது.
-சுந்தரபாண்டியன்
தலைமையின் தேர்தல்வழி! தொண்டனுக்கு தலைவலி!
"பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., போன்றவற்றால் பாதிக்கப்பட்ட ஏழை-எளிய நடுத்தர மக்களில் நானும் ஒருவன். சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை இந்துசமய மக்களின் நலனுக்காக, எந்தவகையான நல்ல திட்டங்களையும் தந்திடாத பா.ஜ.க.வுடன் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பணியாற்ற என்னால் முடியாது என்ற ஒரே காரணத்தால், நான் மிகவும் விரும்பும் அ.தி.மு.க.வில் இருந்து விடுபடுகிறேன்.
பா.ஜ.க. உடனான கூட்டணியை, நான் மட்டுமின்றி ஈவு, இரக்கம், அன்பு, கனிவு, மனிதநேயம் மனம்படைத்த யாரும் தமிழகத்தில் ஆதரிக்கமாட் டார்கள்'’என அ.தி.மு.க. சிறுபான்மையினர் பிரிவிலுள்ள சையது சுல்தான் இப்ராஹிம் சமூக வலைத்தளத்தில் குமுறியிருந்தார்.
அவரது இந்தப் பதிவை எதிரணியினர் வாட்ஸப்பில் பரப்பிவிட, விருதுநகர் தொகுதி தகித்தது. நாம் அவரைத் தொடர்புகொண்டபோது, "இது கொள்கை சார்ந்த கூட்டணி இல்லை; வெறும் தேர்தல் கூட்டணிதான். கட்சிப் பணி யாற்றுங்கள் என்று கட்சியின் மூத்தநிர்வாகிகள் கேட்டுக்கொண்டார் கள். அதனால், பா.ஜ.க.வுக்கு எதிரான பதிவுகள் அனைத் தையும் அழித்துவிட்டேன்'’என்றார். இருப்பினும் சையது சுல்தானின் பா.ஜ.க. எதிர்ப்பு பதிவுகள் ஸ்க்ரீன்ஷாட்களாக இன்னமும் உலவிக்கொண்டே இருக்கின்றன.
சையதுசுல்தான் இப்ராஹிமிடம் லோக்கல் செய்தியாளர் ஒருவர், "கட்சியில் திரும்பவும் சேர்ந்துட்டீங்க. விருதுநகர் தொகுதியில் ஒருவேளை பா.ஜ.க. போட்டியிட்டால், தாமரைக்கு வாக்களிப்பீர்களா?'’என்று கேட்ட தற்கு, "என்னுடைய சின்னம் இரட்டை இலை'’என்று சொல்லி, லைனை ‘கட்’ செய் திருக்கிறார்.
வெற்றியை மட்டுமே இலக்காகக்கொண்டு அர சியல் தலைவர்கள் கொள்கை யில்லா கூட்டணி வைத்து விடுகிறார்கள். கொள் கையைத் தூக்கியெறிய முடியாமல், கட்சி முடிவையும் மீறமுடியாமல் பரிதவிப்பது என்னவோ தொண்டர்கள்தான்!
-சி.என்.இராமகிருஷ்ணன்