அமைச்சருக்கு எம்.எல்.ஏ. சவால்!
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை அடுக்கம்பாறையில் இயங்குகிறது. இங்கு 14.5 கோடி ரூபாய் செலவில் 5 புதிய சிகிச்சை பிரிவுகள் மற்றும் பரிசோதனை மையங்கள் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கப் பட்டன. இந்த விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி, நிலோபர்கபில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர்கள் அச்சடிக் கப்பட்ட அரசு அழைப்பிதழ்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு தரப்பட்டன.
இந்த மருத்துவக்கல்லூரி அணைக்கட்டு தொகுதியில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மத்திய மா.செ.வும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் சென்றிருந்தார். வழிநெடுகிலும் ஆடம் பரமான வரவேற்பு பதாகைகள், கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள், படங்கள் மட்டுமே இருந்தன. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் படங் களோ, பெயர்களோ கிடையாது. தொகுதி எம்.எல்.ஏ. என்கிற முறையில் நந்தகுமார் பெயரும், படமும் கிடை
அமைச்சருக்கு எம்.எல்.ஏ. சவால்!
வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை அடுக்கம்பாறையில் இயங்குகிறது. இங்கு 14.5 கோடி ரூபாய் செலவில் 5 புதிய சிகிச்சை பிரிவுகள் மற்றும் பரிசோதனை மையங்கள் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கப் பட்டன. இந்த விழாவில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வீரமணி, நிலோபர்கபில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பெயர்கள் அச்சடிக் கப்பட்ட அரசு அழைப்பிதழ்கள் எம்.எல்.ஏ., எம்.பி.க்களுக்கு தரப்பட்டன.
இந்த மருத்துவக்கல்லூரி அணைக்கட்டு தொகுதியில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மத்திய மா.செ.வும், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார் சென்றிருந்தார். வழிநெடுகிலும் ஆடம் பரமான வரவேற்பு பதாகைகள், கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்திலும் ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பெயர்கள், படங்கள் மட்டுமே இருந்தன. எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களின் படங் களோ, பெயர்களோ கிடையாது. தொகுதி எம்.எல்.ஏ. என்கிற முறையில் நந்தகுமார் பெயரும், படமும் கிடை யாது. நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் களிடம், ""என் தொகுதியில் நடக்கும் விழாவில் எம்.எல்.ஏ என்கிற முறையில் எனக்கு என்ன மரியாதை செய்தீர்கள்'' என கேள்வி எழுப்பினார். அமைச்சர் வீரமணி, எம்.எல்.ஏ. நந்தகுமாரை, கையைப் பிடித்துக்கொண்டு சமாதானம் செய்தார். ஆனாலும் விழாவை புறக்கணித்துவிட்டு கிளம்பி விட்டார் நந்தகுமார். நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீரமணி, ""நந்தகுமார் வெற்று விளம்பரத்துக்காக இங்கு வந்து பிரச்சினை செய்தார்'' என்றார்.
அதுபற்றி நந்தகுமாரிடம் நாம் கேட்டபோது, ""மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பார்வையாளர்கள் ஓய்வு அறை கட்டித் தந்துள்ளேன். இன்னும் சிலவற்றையும் பட்டியலிடுகிறேன், முடிந்தால் அது பொய் என நிரூபிக்கட்டும்; இல்லையேல் மந்திரி பதவியை துறக்கத் தயாரா?'' என கேட்டுள்ளார்.
-து. ராஜா
போலி பினாமிகள்!
கூட்டாக, ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் செய்யும் பெங்களூர்க் காரர்களான ஹரிபிரசாத்திற்கும் சந்திரசேகருக்கும் பண நெருக்கடி. இவர்களுக்கு நெருக்கமான விஜய் என்பவர் ""தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியினரின் பினாமிகளிடம் பெருந்தொகை வட்டிக்குக் கிடைக்கும் வாங்க'' என்று நெல்லைக்கு பூபதி என்பவரிடம் அழைத்து வந்தார்.
அந்த பூபதி, திருநெல்வேலி அ.ம.மு.க. ஒ.செ. முருகையன் வீட்டிற்கு கூட்டிச் சென்றார். ""அ.தி.மு.க. தலைவர்களும் அமைச்சர்களும் எங்களுக்கு வேண்டியவர்கள். நீங்கள் கேட்கும் 75 கோடியை எங்களால் சாதாரணமாக வாங்கித் தரமுடியும்'' என்றார்கள்.
அ.ம.மு.க. ஒ.செ. முருகையனும் அவர் மனைவியும் பெங்களூர்க்காரர்களை சேடப்பட்டி தாலுகா குப்பல்நத்தத்தில் உள்ள சேடப்பட்டி இராசேந்திரன் என்பவர் வீட்டிற்கு அழைத்துச் சென் றார்கள். ""இவர்கள் தான் (சேடப்பட்டி இராசேந்திரனும் அவர் மனைவி ராஜேஸ்வரியும்) தமிழகத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் பினாமிகள். நீங்கள் கேட்கும் 75 கோடியையும் தருவார்கள்'' என்றார்கள்.
அப்புறம்...?
நடந்ததை நம்மிடம் விவரித்தார்கள் ஹரிபிரசாத்தும் சந்திர சேகரும்.
""75 கோடிக்கு ரெண்டு விழுக்காடு பதிவுக் கட்டணமாக ஒன்றரைக் கோடி ரூபாயும், அமௌண்ட் போடாத 14 காசோலை களும், கையெழுத்திட்ட 6 வெற்றுப் பத்திரங் களும் பெற்றுக்கொண்டார்கள். "இன்னும் 24 மணி நேரத்தில் வெவ்வேறு மூன்று வங்கிகளில் 75 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் ஆகிவிடும்' என்று பிராமிஸ் செய்தார்கள். காத்திருந்தோம். அவர்கள் எங்களை ஏமாற்றியதை அதன்பிறகே உணர்ந்தோம். அவர்களைப் பார்க்கச் சென்றோம். தலைமறைவாகிவிட்டார்கள். செல்போன்களும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுவிட்டன. அதன்பிறகே மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம் சேடப்பட்டி ராஜேந்திரன், முருகையா, பூபதி, ராஜேஸ்வரி, தினேஷ் ஆகியோர் மீது புகார் கொடுத்திருக் கிறோம்'' என்றார்கள்.
அவர்களைப் போலீசும் தேடிக்கொண்டிருக்கிறது.
-ராம்கி
அரசிற்கு கண்டனம்!
கடந்தாண்டு ஆறாம் வகுப்பு பாடப் புத்தக்கத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை தமிழக அரசு நீக்கிய நிலையில், அரசின்மேல் கடுங்கோபம் கொண்டது முக்குலத்து சமூகம். "" தவறுதான்... வரும் வருடத்தில் நீக்கப்பட்ட அந்தப் பாடம் சேர்க்கப்படும்'' என அமைச்சர் செங்கோட்டையன் வாக்குறுதி அளித்தார். அதன்படி ஏழாம்வகுப்பு சமச்சீர் கல்வி மூன்றாம் பருவத்துக்குரிய தமிழ் பாடப்புத்தகத்தில் "பசும்பொன் முத்துராமலிங்கரின் பேச்சாற்றல்' எனும் தலைப்பில் முத்துராமலிங்க தேவரைப் பற்றிய பாடம் வந்துள்ளது. இதில் "பசும்பொன் முத்துராமலிங்க தேவர்'’என்கிற பெயருக்குப் பதிலாக “"பசும்பொன் முத்துராமலிங்கர்'’என்று அச்சிடப்பட்டுள்ளது. இதுதான் தற்போதைய சர்ச்சைக்குக் காரணம். ""பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் முழுப்பெயரே அப்படித்தானே அரசு கெஜட்டில் இருக்கிறது. இவருக்கு குடும்ப பட்டத்தை பயன்படுத்த தடையென்றால் இனி எவருக்கும் தடை விதிக்க வேண்டும். நரேந்திர மோடி எனும் பெயரை நரேந்திரன் என்றும், மன்மோகன் சிங் என்பதை மன்மோகன் என்றும், வல்லபாய் படேல் என்பதை வல்லபாய் என்றும், இனி எந்தவித அறிக்கையிலும் அரசு பயன்படுத்துமா?
இதை உடனடியாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையென்றால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் அரசிற்கு தக்க பாடம் புகட்டுவோம்'' என்றனர் முக்குலத்து மக்கள். ஒவ்வொரு மாவட்டத் திலிருந்தும் அரசிடம் புகாரும், சுவரொட்டிகள் மூலம் கண்டனமும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
-நாகேந்திரன்