நாகர்கோயில் வெட்டூர்ணி மடம் கேசவதிருப்பாபுரத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு அம்மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களும் காவல்நிலையங்களும் சொந்த வீடு போன்றவை. நம்பர்ஒன் நாளிதழின் செய்தியாளர் என்று கூறிக்கொண்டு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வார்.
அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது மக்கள் தொடர்பு அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டு ஏதாகினும் கேட்டுவிட்டால், அவரைப் பற்றித் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அவப்பெயரை உண்டாக்க முயல்வார். அதைக் காட்டி மற்ற அதிகாரிகளிடமும் சாதித்துக்கொள்வார்.
இந்த இளையராஜா கோட்டார் பகுதியில் ஒரு லாட்ஜை குத்தகைக்கு எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். கேரளாவிலிருந்தும் புதுச்சேரியில் இருந்தும் பிராந்தி, விஸ்கி வகையறாக்களை கடத்தி வந்து, குமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் கொள்ளை லாபத்திற்கு விற்றார். நம்பர்ஒன் நாளிதழின் நிருபர் என்ற போர்வை இதற்குப் பயன்பட்டது.
விஷயம் எப

விஷயம் எப்படியோ குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத்துக்கு தெரிந்தது. அடுத்த சிலமணி நேரத்தில் கோட்டார் இன்ஸ்பெக்டர் சேவியர் பெர்னாட் தலைமையிலான டீம், போலி நிருபர் இளையராஜாவின் குத்தகை லாட்ஜை சோதனையிட்டு, நூற்றுக்கணக்கான மதுப்பாட்டில்களோடு, இந்தக் கிரிமினலைக் கைது செய்தது.
இப்போதுதான் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்திருக்கிறது இளையராஜா செய்தியாளரே இல்லை என்ற விஷயம்.
-மணிகண்டன்
பல்கலையில் பண்பாட்டு கொண்டாட்டம்!
கதிர் 2050 (திருவள்ளுவர் ஆண்டு)- என்ற பெயரில் சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் ஒன்றுகூடி, சமத்துவ பொங்கலையும் தமிழர் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடினர். இதில், வெளிநாட்டு மற்றும் வெளிமாநில மாணவ மாணவியரும் தமிழர்களின் கலாச்சார உடையான பாவாடை தாவணி, வேட்டி, சேலை அணிந்து ஆர்வத்தோடு சூழ்ந்திருக்க, பல்கலைக் கழகத்தின் அனைத்துத் துறை மாணவர்களும் இணைந்து பொங்கல் கொண்டாடினர்.
இது குறித்து உற்சாகமாகப்பேசிய அவர்கள்...
“""பொங்கல் பானையில், சமத்துவத்தின் அடையாளமாக வெல்லத்தையும், சகோதரத்துவத்தின் அடையாளமாக பச்சரிசியையும், பேரன்பு நறுமணத்தின் அடையாளமாக ஏலக்காயையும் சேர்த்து, எங்கள் உணர்வுகளால் தீமூட்டிப் பொங்கல் வைத்தோம்,
இங்கு பொங்கல் அடுப்பில் எரிக்கப்பட்டது விறகல்ல, சாதிமத ஏற்றத்தாழ்வுகளும் பாலின ஏற்றத் தாழ்வுகளும்தான் எரிக்கப்பட்டன. நாங்கள் பறையை தீயில் காட்டி வாட்டியபோது.. அதன் மீதிருந்த சாதீய அடையாளமும் பொசுங்கியது.
காரணம், 2050 ஆம் (திருவள்ளுவர் ஆண்டு) ஆண்டில் மக்களின் அத்தியாவசிய தேவை, அரசியலைப் புரிந்துகொள்ளுதல்தான் என்பதை நாங்கள் புரிந்தே வைத்திருக்கிறோம். கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் எல்லாம் தொலைந்து, கலை வடிவங்களுக்குள்ளும் ஆபத்தான அரசியல் ஊடுருவி நம்மைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது.
எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வும் ஒரே வழியும் விடுதலையும் தெளிந்த அரசியல்தான், அரசியல் புரிதல்தான். இனி எல்லா இடங்களிலும் ஆயிரமாயிரம் கதிர்கள் முளைக்கும். எல்லாக் கலை இலக்கிய நிகழ்ச்சிகளிலும் நமக்குத்தேவையான அரசியல் வெளிப்படும்'' என்கிறார்கள்.
-சூர்யா
"பட்டு'ம் படாமலும் ஊழல்!
"நெசவாளருக்கு போய்ச் சேரவேண்டிய பணத்தில் 3 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது' என்கிறார் காஞ்சிபுரம் அனைத்து பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த கணேசன். என்ன விவரம் என்று கேட்டோம்.
""காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனைக்கேற்ப நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கப்படும். கடந்த ஆண்டு 46 கோடிக்கு விற்பனையானதால் நெசவாளர்களுக்கு 44% போனஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு 48 கோடிக்கு விற்பனையாகியும் 24%தான் போனஸ் வழங்கப்பட்டது. இதைப் பற்றிக் கேட்டால் சங்கத்தை விட்டு நீக்குவதாக மிரட்டுகின்றனர்'' என்கிறார் கணேசன்.
டீ, காபி செலவு 20 லட்சம், விளம்பரச் செலவு 6 கோடி என காட்டுகிறது ஆண்டறிக்கை. இதில் 3 கோடிக்கு முறையான பில்கூட கிடையாதாம். புகார்கள் அதிகரித்த நிலையில், முறைகேடுகளைக் கண்டுபிடிக்க நெசவாளர் கூட்டுறவு இயக்குநர் முனிநாதன், தனி அதிகாரி சாரதி சுப்புராஜ் என்பவரை நியமித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க... நெசவாளர்களின் வாயை அடைக்க கடந்த ஆண்டு போனஸ் தொகையான 44% தருவதற்கு ஒப்புக் கொண்டதோடு, விசாரணை தனியதிகாரியை மடக்க துறை அமைச்சர் ஓ.எஸ். மணியனை அணுகியிருக்கின்றனர் சம்பந்தப்பட்டவர்கள்.
முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் செல்வராஜிடம் பேசினோம். ""நீங்க சொல்ற மாதிரி ஊழல் எதுவும் நடக்கலை. விஷயத்தை தெளிவுபடுத்த தனி அதிகாரி ஆடிட்டிங் நடந்து வருது'' என்றார்.
காஞ்சிபுரம் சரக கைத்தறி இணை இயக்குநர் செல்வமோ, ""2 கோடி ரூபாய்க்கு மேல் முறையாக செலவீனம் செய்யப்படலைனு ஆடிட்டிங் ரிப்போர்ட் வந்திருக்கு. முழுமையான விசாரணை அறிக்கை வந்ததும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்கிறார்.
-அரவிந்த்