ops

மோதிய அமைச்சர்!

வேலூர் மேற்கு அ.தி.மு.க. மா.செ.யும் பத்திரப்பதிவு அமைச்சருமான வீரமணி, வேலூர் மாவட்டமே தனது கட்டுப்பாட்டில்தான் இயங்கவேண்டும் என்ற ஆதிக்க உணர்வு உடையவர்.

ministers

இதே மாவட்டத்தின் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வும் தொழிலாளர் மற்றும் வஃபு அமைச்சர் நிலோபர் கபிலும் அதே மாவட்ட ஆதிக்க உணர்வு உடையவர்தான்.

"" தொடக்கத்தில் அமைச்சர் வீரமணியின் சொல்லுக்குப் பணிந்து நடந்தவர்தான் நிலோபர். இடையில்தான் ரெண்டுபேருக்கும் மோதல் உருவாச்சு. இந்த மோதல் முதலமைச்சர் எடப்பாடியார் வரை போச்சு. அங்கே சமாதானப்படுத்தி அனுப்பினாங்க. ஆனாலும் முட்டல் மோதல் நிற்கவில்லை'' என்கிறார் நிர்வாகி ஒருவர்.

வாணியம்பாடி தொகுதியைத் தாண்டி வரமுடியாதபடி நிலோபருக்கு முட்டுக்கட்டைகள் போட்டார் மா.செ. வீரமணி. ""நீ மற்ற தொகுதிகளுக்குள் உன் அதிகாரத்தைக் காட்டு. என் தொகுதிக்குள் வாலாட்ட வேணாம்'' என்ற ரீதியில் மா.செ.யும் அமைச்சருமான வீரமணியைத் தவிர்த

மோதிய அமைச்சர்!

வேலூர் மேற்கு அ.தி.மு.க. மா.செ.யும் பத்திரப்பதிவு அமைச்சருமான வீரமணி, வேலூர் மாவட்டமே தனது கட்டுப்பாட்டில்தான் இயங்கவேண்டும் என்ற ஆதிக்க உணர்வு உடையவர்.

ministers

இதே மாவட்டத்தின் வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வும் தொழிலாளர் மற்றும் வஃபு அமைச்சர் நிலோபர் கபிலும் அதே மாவட்ட ஆதிக்க உணர்வு உடையவர்தான்.

"" தொடக்கத்தில் அமைச்சர் வீரமணியின் சொல்லுக்குப் பணிந்து நடந்தவர்தான் நிலோபர். இடையில்தான் ரெண்டுபேருக்கும் மோதல் உருவாச்சு. இந்த மோதல் முதலமைச்சர் எடப்பாடியார் வரை போச்சு. அங்கே சமாதானப்படுத்தி அனுப்பினாங்க. ஆனாலும் முட்டல் மோதல் நிற்கவில்லை'' என்கிறார் நிர்வாகி ஒருவர்.

வாணியம்பாடி தொகுதியைத் தாண்டி வரமுடியாதபடி நிலோபருக்கு முட்டுக்கட்டைகள் போட்டார் மா.செ. வீரமணி. ""நீ மற்ற தொகுதிகளுக்குள் உன் அதிகாரத்தைக் காட்டு. என் தொகுதிக்குள் வாலாட்ட வேணாம்'' என்ற ரீதியில் மா.செ.யும் அமைச்சருமான வீரமணியைத் தவிர்த்துவிட்டு கூட்டங்களை நடத்தினார் நிலோபர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் பத்திரிகைகளில் பொங்கல் வாழ்த்து விளம்பரங்களை வெளியிட்டன. அந்த விளம்பரங்களில் அமைச்சர் நிலோபர் பெயர் இருந்தது. ஆனால் மா.செ.யும் அமைச்சருமான வீரமணி பெயர் இல்லவே இல்லை.

"அதிகாரிகளை மிரட்டி இப்படி விளம்பரங்களை வரவைத்துள்ளார் நிலோபர்' என்ற கடுப்பில் உள்ளது மா.செ. தரப்பு.

-து.ராஜா

உதவிய அமைச்சர்!

opsதுணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பதிமூன்று வயதான அனிதா, தனது நடக்க முடியாத தந்தையையும், மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரையும் பார்த்துக்கொண்டு படிக்கக்கூட வசதியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார் என்ற விசயம் துணை முதல்வரான ஓ.பி.எஸ்.ஸுக்கு தெரியவந்தது. பாதிக்கப்பட்ட அனிதாவின் தந்தை சந்திரசேகரை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்குமாறு தனது உதவியாளருக்கு ஓ.பி.எஸ். உத்தரவிட்டார். ஓ.பி.எஸ்.ஸின் நேர்முக உதவியாளரான ராஜா, சங்கரலிங்கபுரத்திற்கு சென்று சந்திரசேகருக்கு தேவையான போர்வை, தலையணைகள் வழங்கியதோடு, முதல்கட்டமாக ரூ.25 ஆயிரம் உதவித்தொகையும் வழங்கினார்.

இவை மட்டுமன்றி அனிதாவின் வீட்டை பராமரிப்பு செய்து நவீன கழிப்பிட வசதியுடன் கூடிய புதிய வீட்டினை உடனடியாகக் கட்டிக் கொடுக்க ஓ.பி.எஸ். வலியுறுத்தினார். அதைத் தொடர்ந்து சந்திரசேகருக்கு புதிய வீடு கட்டுவதற் காக அளவீடு செய்யும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. அந்தக் குடும்பத்தினரின் செலவிற்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாயை அளிக்க உள்ளதாகவும், அதோடு அனிதாவின் படிப்புச் செலவு மட்டுமின்றி அவரின் திருமண செலவுகள்வரை அனைத்தையும், தான் ஏற்றுக்கொள்வதாகவும் ஓ.பி.எஸ். உறுதியளித்தார். ஓ.பி.எஸ்.ஸின் சொந்தச் செலவில் 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டும் பணியும் முடிந்தது. கட்டிய வீட்டை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஓ.பி.எஸ். நேரடியாக சங்கரலிங்கபுரம் சென்று சந்திரசேகர், அனிதா மற்றும் அவருடைய தாயாரைப் பார்த்து ஆறுதல் கூறி, வீட்டுச்சாவியையும் வழங்கினார். ஆளுங்கட்சியினர் மட்டுமல்ல எதிர்க் கட்சியினரும்கூட ஓ.பி.எஸ்.ஸின் உதவிக்கரத்தைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

-சக்தி

உளறிய அமைச்சர்!

ministerஎன்.எல்.சி. மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களில் உள்ள 40 கிராமங்களின் விளைநிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் போராட் டங்களில் ஈடுபட்டுள்ளனர். அன்புமணி நெய் வேலியிலும், வேல்முருகன் விருத்தாசலத்திலும், தினகரன் சேத்தியாத்தோப்பிலும், விவசாயிகள் கடலூரிலும், இளைஞர்கள் சென்னையிலும் போராட்டங்கள் நடத்தினர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு நேரம் கேட்டுள்ளார். என்.எல்.சி. நிறுவனத்தால் ஏற்கனவே பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் கடும் கொந்தளிப்பில் உள்ளது.

இந்த நிலையில் ‘வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல’ கடந்த 06-ஆம் தேதி கடலூரில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த எம்.சி.சம்பத், ""என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம் என்பதால் அதன் திட்டங்களை நிறுத்த முடியாது''’என்றார். அவரிடம் "ஜெயங்கொண்டம் அனல்மின் திட்டம் நிறுத்தப்பட்டதே?' என கேட்டதற்கு, ""அது புராசஸில் இருக்கிறது. மூன்றாவது, நான்காவது திட்டம் அங்கு அமையும்''’என்றார்.

"ஆளும் கட்சியின் அமைச்சரே மக்களின் உணர்வுகளை உணராமல், என்.எல்.சிக்கு ஆதரவாக பேசுவதா?' என கொதிப்படைந்த 40 கிராம மக்கள்... சம்பத்துக்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளனர். கடந்த 07-ஆம் தேதி ஓட்டிமேட்டிலும், 08-ஆம் தேதி கம்மாபுரத்திலும் சம்பத்தின் உருவப் படங்களை எரித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

-சுந்தரபாண்டியன்

nkn250119
இதையும் படியுங்கள்
Subscribe