signal

மா.செ. மீது திமுக கரை வேட்டியை வீசிய ந.செ.!

வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான காந்திக்கும் ராணிப்பேட்டை நகரச்செயலாளர் பிஞ்சி பிரகாஷுக்கும் இடையிலான மோதல் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

signal

""38 வருஷமா கட்சியில் இருக்கேன். மா.செ. காந்தி நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து நான் ந.செ.வாக வெற்றி பெற்றதால் அவர் என்னை மதிக்கிறதில்ல. உள்ளாட்சித்தேர்தலில் நகராட்சி சேர்மனாக்குவதாக ஒருத்தரிடம் பணம் வாங்கியிருக்கார். சமீபத்தில் கிராமசபா கூட்டம் சம்பந்தமா மீட்டிங் நடந்துச்சு. சபாபதி மோகன் வந்திருந்தார். அப்போ, மைக்கை வாங்கி, "கட்சிக்காரர்களை மதிக்காத உன்னாலதான் கட்சி அழியுது'ன்னு காந்தியை நோக்கி சொன்னேன். கோபமான அவர் "நிறுத்துடா' என்று ஆபாசமாக திட்டினார். நானும் பதிலுக்கு திட்டிட்டு கட்சிக்கரை வேட்டியை அவிழ்த்து அவர் மேலயே போட்டுட்டேன். தலைமையிடம் புகார் தரப்போறேன்''’என்றார்.

மா.செவும், எம்.எல்.ஏவுமான காந்தியை தொடர

மா.செவும், எம்.எல்.ஏவுமான காந்தியை தொடர்பு கொண்டபோது, அவரது எண் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்தது. அவரது ஆதரவாளர்களோ, பிஞ்சி பிரகாஷ் குடிகாரர் என்றும், பாலாற்றில் மணல் அள்ளுவோரிடம் மாமூல் கேட்பவர் என்றும் புகார் சொன்னார்கள். ""காண்ட்ராக்ட் ஒர்க் பெர்சண்டேஜைக் கூட கட்சிக்காரர்களுக்கு பிரிச்சு கொடுக்கச் சொல்வார் காந்தி'' என்றார்கள்.

""பிஞ்சி பிரகாஷ் இப்போதும் பொறம்போக்கில் சாதாரண வீட்டில்தான் இருக்கிறார். நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்ய முடியறதில்ல. அதனால் ஓரங்கட்டுறாங்க. எனவேதான் அவர் காந்திக்கு எதிராக பேசியிருக்கிறார்'' என்கிறார்கள்.

-து.ராஜா

சசிகலா காலில் விழாததால் புறக்கணிப்பா?

signal

தென்மாவட்ட அ.தி.மு.க.வில் புதிதாக ஒரு விவகாரம் வெடித்திருக்கிறது. அதாவது, அ.தி.மு.க.வின் மனுக்கள் குழுவில் உறுப்பினர்களாக கவுண்டர் மற்றும் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்திருக்கிறார்கள். தாழ்த்தப்பட்டோருக்கு இடமே இல்லை. முத்தரையர், யாதவர், நாடார் சமுதாயத்தினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று புலம்புகிறார்கள். இந்தக் குழுவினர் பரிந்துரையின்படி ஒரு மாவட்டச் செயலாளர் மீதே நடவடிக்கை எடுக்க முடியும் என்ற அளவுக்கு அதிகாரமிக்க குழு இது என்பதால்தான் இந்தப் புலம்பல்.

கவுண்டரில் மூவர், முக்குலத்தோரில் மூவர் இருக்கும்போது ஏன் அதைக் குறைத்து மற்ற சமுதாயத்தினருக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதே அவர்களுடைய ஆதங்கம். இதுகுறித்து, திருநெல்வேலியில் இயங்கிவரும் தெட்சணமாற நாடார் சங்கம் சார்பில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில், பி.எச்.பி.மனோஜ்பாண்டியனுக்கு மனுக்கள் குழுவில் இடம் அளிக்கும்படி கூறப்பட்டுள்ளது.

-ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, ""அ.தி.மு.க.வை அபகரிப்பதற்கு சசிகலா குடும்பம் முடிவு செய்தபோது, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். முதல் அனைவருமே சசிகலா காலில் விழுந்தவர்கள்தான். ஆனால், தொடக்கம் முதல் இறுதிவரை பி.எச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ்பாண்டியனும் சசிகலாவை சந்திக்கவே இல்லை. ஜெயலலிதாவின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்களை மீடியாக்களின் மூலம் அம்பலப்படுத்தினார் மனோஜ்பாண்டியன். ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக நாடார் சமுதாய மக்களை ஒருங்கிணைத்தார். மனோஜ்பாண்டியனையும், யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பனையும் கைகழுவிவிட்டார் ஓ.பி.எஸ்.. ஒருவேளை, மனோஜ்பாண்டியனும் சசிகலா காலில் விழுந்திருந்தால், பொறுப்பு தந்திருப்பார்கள் போலும்''’என்றனர் மனோஜ்பாண்டியன் ஆதரவாளர்கள்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

பிளாஸ்டிக் ஒழிப்பு! பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவா?

signal

கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல், இந்த ஆண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது சீரியஸாகவே நடைமுறைக்கு வந்திருக்கிறது. தற்போது இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் தடை என்பதால், திருச்சியில் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் ஜனவரி 1 முதல் காலவரையற்ற விடுமுறை அறிவித்திருக்கிறார்கள்.

திருச்சி புதுக்கோட்டை பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம்,…""இந்த அறிவிப்பால் 11 லட்சம் பேருக்கு வேலை பறிபோயிருக்கிறது. ஆறு மாதத்திற்கு முன்பு பிளாஸ்டிக் தொழிற்சாலையால், எந்தக் கேடும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துவிட்டு திடீரென்று தடை விதித்திருப்பது சிறுகுறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதாகும். தமிழக அரசின் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டத்திற்கு எங்களை அழைக்கவில்லை.

சுற்றுச்சூழலுக்கும், இயற்கைக்கும், மரங்களுக்கும் எந்த வகையிலும் கேடு செய்யாத பிளாஸ்டிக் தொழிலை தடை செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் ஜி.எஸ்.டி., மின்கட்டணம் மூலம், ஓர் ஆண்டுக்கு 2500 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கொடுக்கிறோம். எங்களிடம் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்கிறார்கள். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடைசெய்யாததுதான் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு என்கிற போர்வையில் சிறுகுறு வியாபாரிகளை அழித்துவிட்டு, பன்னாட்டுப் பொருட்கள் விற்பனையை ஆதரிக்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது''’என்று குற்றம்சாட்டுகிறார்.

-ஜெ.டி.ஆர்.

nkn110119
இதையும் படியுங்கள்
Subscribe