Advertisment
signal

விருதுபெற்ற மாவட்டம்!

award

மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு, இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர். கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகள், அடிப்படை உட்கட்டமைப்பு என அனைத்திலும் நன்கு முன்னேறிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.

Advertisment

புதுடில்லியில் 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி, அதற்கான பங்களிப்பினைச் சிறந்த முறையில் நல்கியமைக்காக, மாற்றத்தின் வெற்றியாளர் விருது பதக்கத்தையும் பாராட்டுச் சான்றிதழையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்துக்கு வழங்கியிருக்கிறார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள், தானமாகப் பெறப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அலட்சியமாக நடந்துகொண்டு,

விருதுபெற்ற மாவட்டம்!

award

மத்திய அரசு நிதி ஆயோக் திட்டத்தின் கீழ் ஆய்வு நடத்தப்பட்டு, இந்தியாவில் முன்னேற்றம் காணத்துடிக்கும் 117 மாவட்டங்களில், அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது விருதுநகர். கல்வி, தொழில், வளர்ச்சிப் பணிகள், அடிப்படை உட்கட்டமைப்பு என அனைத்திலும் நன்கு முன்னேறிய மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டத்துக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.

Advertisment

புதுடில்லியில் 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில், விருதுநகர் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தி, அதற்கான பங்களிப்பினைச் சிறந்த முறையில் நல்கியமைக்காக, மாற்றத்தின் வெற்றியாளர் விருது பதக்கத்தையும் பாராட்டுச் சான்றிதழையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்துக்கு வழங்கியிருக்கிறார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் சாத்தூர் அரசு மருத்துவமனைகள், தானமாகப் பெறப்பட்ட ரத்தப் பரிசோதனையில் அலட்சியமாக நடந்துகொண்டு, கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்றினை ஏற்படுத்தி, தமிழக மக்கள் விருதுநகர் மாவட்டத்தை ஒரு தினுசாகப் பார்க்கின்ற நிலையில், பால் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ்பாபு ஆகியோருடன் சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

திருடர்களை வளர்க்கும் மாநிலம்!

theif

சிதம்பரம்-கடலூர் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குக்கு டூவீலரில் வந்த மூன்றுபேர் டூவீலருக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டார்கள். கொலைவெறியோடு ஊழியர் சிவசங்கரனை வெட்டிப் படுகாயப்படுத்திவிட்டு, அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு பறந்தனர்.

Advertisment

மற்றொரு ஊழியரான தாமோதரன் தகவல் கொடுத்ததும் சிதம்பரம் டி.எஸ்.பி. பாண்டியன் தலைமையில் போலீஸ் வந்தது. படுகாயங்களோடு உயிருக்குப் போராடிய சிவசங்கரனை கடலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, பெட்ரோல் பங்க்கில் இருந்த சி.சி.டி.வி.யை ஆய்வு செய்தனர். பெட்ரோல் பங்க் கொள்ளையில் ஈடுபட்டதும், ஊழியரை வெட்டியதும் சுரேஷ், தேவா, லாஸ்பேட்டை மணி என்ற மணிவண்ணன் என்பதையும் கண்டறிந்தது போலீஸ்.

பரங்கிப்பேட்டை அருகேயுள்ள சின்னூர் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வீட்டு மாடியில் உறங்கிக்கொண்டிருந்த மூன்று திருடர்களையும் காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கர் செல்வம், அமுதா தலைமையிலான டீம் கைது செய்தது.

""ரொம்பநாளா "தொழில்' செய்றோம் சார். பாண்டிச்சேரி போலீசுக்கு எங்களை நல்லா தெரியும். அவங்க புடுச்சா பொருட்களையும், ரொக்கத்தையும் அவங்ககிட்ட கொடுத்திட்டு, டீலிங்கோட போயிடுவோம். அங்கே ஈஸியா நம்மளை அடையாளம் கண்டுபுடிக்கிறாங்க. அதான் தினமும் பாண்டியில இருந்து கடலூர் மாவட்டத்துக்குள்ள வர்றதை வாடிக்கையாக்கிக்கிட்டோம். நேத்துகூட சென்னை-வில்லிவாக்கத்துல இருந்து சிதம்பரத்துக்கு வீட்டுப்பொருட்களை ஏத்திக்கொண்டு வந்த லாரியை மடக்கினோம். டிரைவரை வெட்டிக் காயப்படுத்திவிட்டு செயினையும் பறித்துக்கொண்டு சென்றோம். இன்னக்கி அந்த சி.சி.டி.வி காட்டிக் கொடுத்துவிட்டது'' ரொம்பவே சலித்துக்கொண்டார்கள் அந்த பொறுக்கித் திருடர்கள் மூவரும்.

-காளிதாஸ்

நாற்காலிகள் பெற்ற பொலிவு!

opsmeeting

முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் வெற்றி தேடித்தந்து, அஸ்திவாரத்தையும் உறுதியாக்கிய தொகுதி ஆண்டிப்பட்டி.

ஆண்டிப்பட்டிக்கு வெகுவிரைவில் இடைத்தேர்தல் வரப்போகிறது. இந்தத் தொகுதியில் கடந்த மாதம் டி.டி.வி. தினகரன் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் பத்தாயிரம் பேர் பங்கேற்றனர். இதற்குப் போட்டியாக அ.தி.மு.க. செயல் வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். நடத்தினார்.

இந்தக் கூட்டத்தை ஆண்டிப்பட்டி ஒ.செ. லோகிராஜன் ஒரு மாநாடு போல ஏற்பாடு செய்திருந்தார். தொகுதியின் பல பகுதிகளுக்கும் தனது பேருந்துகளை அனுப்பி மதியம் 2 மணிக்கு கூட்டத்தை இழுத்துவந்து சேர்த்துவிட்டார்.

இரவு 7 மணிக்கு ஓ.பி.எஸ்.ஸும் திண்டுக்கல் சீனிவாசனும் விஜயபாஸ்கரும் மேடையேறினார்கள்.

இரண்டு மணியிலிருந்து எவ்வளவு நேரம்தான் கூட்டம் காத்திருக்க முடியும்? அமைச்சர்கள் பேசுமுன்பே கூட்டம் கலையத் தொடங்கியது. ஓ.பி.எஸ். ஆணைப்படி மா.செ. சையதுகானும், ஒ.செ. லோகிராஜனும் கெஞ்சிப் பார்த்தும் பலனில்லை. முக்கால்வாசி நாற்காலிகளில் ஆளில்லை.

காலி நாற்காலிகளை கனிவோடு பார்த்தபடி, ""இங்கே மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு அம்மா நிலம் கேட்டபோது 25 ஏக்கரை கொடுத்தேன். ஆனாலும் கடந்த 15 வருடமாக என்னை ஓரம்கட்டி வைத்திருந்தனர். இப்பத்தான் தலையைக் காட்ட முடியுது'' மனதிலிருந்ததை வரவேற்பில் கொட்டினார் லோகிராஜன்.

""ஒரு படத்திற்கு கோடி ரூபாய் வாங்கியவர் எங்க அம்மா. அவர் கொள்ளையடிக்க வேண்டிய அவசியமே இல்லை. சசிகலா கொள்ளையடித்தார். அந்த மனவேதனையோடு சிறைக்கு போகவைத்தார்கள்'' உருகினார் திண்டுக்கல் சீனிவாசன்.

""மீண்டும் மீண்டும் என்னைத் தொடுகிறார் டி.டி.வி. நான் தொட்டால் அவர் எங்குபோய் விழுவாரோ தெரியாது'' -இது ஓ.பி.எஸ்.

-சக்தி

nkn080119
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe