தீக்குளிப்பு!
சபரிமலையில் மண்டல மகர பூஜைக்காக நடைதிறந்த நவம்பர் 16-இல் இருந்து நிலக்கல், இலவுங்கல், பம்பை சந்நிதானப் பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. அது இன்றளவும் தொடர்கிறது.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில், ஆரம்பத்தில் காட்டிய தீவிரத்தை கேரள மாநில அரசு கொஞ்சம் குறைத்துக்கொண்டிருக்கிறது. ஆனாலும் பொதுஇடங்களில் பா.ஜ.க.வின். போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சட்டசபையை முடக்குவதில் காங்கிரஸ் கட்சி தீவிரமாகவே உள்ளது. தலைமைச் செயலகத்தில் பா.ஜ.க. மற்றும் காங்கிரசின் தொடர் உண்ணாவிரதம் தொடர்கிறது.
13-12-18 அன்று அதிகாலையில் கேரள தலைமைச் செயலகம் முன்பு பா.ஜ.க. உண்ணாவிரதத்தில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர் வேணுகோபால் (49) ""சாமியேய் சரணம் ஐயப்பா'' என்று கோஷமிட்டபடியே தன் உடம்பில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.
கேரளா முழுக்க பற்றிக்கொண்டது இத்தற்கொலைச் செய்தி. மறுநாள் மாநிலம் தழு

கேரளா முழுக்க பற்றிக்கொண்டது இத்தற்கொலைச் செய்தி. மறுநாள் மாநிலம் தழுவிய பந்த் நடந்தது.
இத்தற்கொலை பற்றிப் பேசிய சி.பி.எம். மாநிலச் செயலாளர், ""தீக்குளித்த வேணுகோபால் ஆர்.எஸ்.எஸ்.காரரோ பா.ஜ.க. தொண்டரோ கிடையாது. அவரொரு மனநோயாளி. "இந்தச் சமுதாயம் பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன்' என்று மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். வேணுகோபால் மரணம் பா.ஜ.க.வின் செட்டப்'' என்று குற்றம்சாட்டினார்.
பா.ஜ.க. வழக்கறிஞர் சுரேஷோ, ""உண்ணாவிரதத்தில் தொடர்ந்து 4 நாட்களாக இருந்தார். வேணுகோபால் தீக்குளிப்பை திசை திருப்புவதற்காக தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள்'' என்றார்.
கேரளாவில் எல்லாத் தரப்பும் சபரிமலைப் பதட்டம் தணிந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுகின்றன.
-மணிகண்டன்
களப்பணி!
தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கின்ற சட்டமன்றத்திற்கான 20 தொகுதிகளின் இடைத்தேர்தலையும் நாடாளுமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டது ம.தி.மு.க.
இதன் ஒருபகுதியாக தமிழகத்தின் 234 ச.ம. தொகுதிகளிலும் உள்ள 66 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு தலா 5 உறுப்பினர்கள் வீதம் மூன்று லட்சத்து 33 ஆயிரம் உறுப்பினர்களை நியமிக்குமாறு மா.செ.க்களுக்கு வைகோ உத்தரவிட்டார். மா.செ.க்கள் நிறைவேற்றியுள்ளார்கள்.
""மற்ற கட்சிகளைப்போல வாக்குச்சாவடிக்கு தலா 50 பேர், 100 பேர் என்று நியமிக்கவில்லை. தலா ஐந்து பேர்தான். அந்தந்த வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலில் புகைப்படத்தோடு வாக்காளர் பெயர் இடம் பெற்றிருக்கிறதா? தொலைபேசி எண், இ-மெயில் முகவரி உள்ளதா என்று சரிபார்த்து தலைமைக் கழகத்திலும் சரிபார்த்து உறுதி செய்யவேண்டும்.
இதுமாதிரி ஏராளமான கட்டுப்பாடுகளை வாக்குச்சாவடிக் குழு உறுப்பினர்களுக்கு விதித்திருக்கிறார் வைகோ. வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழாக்களில் தவறாமல் கலந்துகொள்கிறார்'' என்கிறார் ம.தி.மு.க. மாணவரணி மணவை மாணிக்கம்.
""ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமின்றி, கூட்டணிக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளிலும் நமது வாக்குச்சாவடிக் குழுவினர் ஆர்வத்தோடு வேலை செய்யவேண்டும்'' என்று சாத்தூரில் அடையாள அட்டை வழங்கியபோது கேட்டுக்கொண்டார் வைகோ.
ஜனவரி முதல் வாரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுக்கு களப்பணிக்கான "வகுப்பு' எடுப்பதோடு அடையாள அட்டைகளையும் வைகோ வழங்குகிறாராம்.
-கீரன்
மனுநீதி!
கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தில், ஆட்சியரின் மனுநீதி நாள் முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தார், வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்குமார். பொதுஇடத்தில் பந்தல் போடப்பட்டிருந்தது.
மனுநீதிநாள் முகாம் தொடங்கும் நேரத்தில் மழை கொட்டத் தொடங்கியது. பந்தல் கந்தலாகி, திடல் சேறும் சகதியுமாகிவிட்டது. முகாமை அவசர அவசரமாக அதே ஊரில் இருந்த செங்குந்தர் திருமண மண்டபத்திற்கு மாற்றினார் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனும் வந்தார். ஒருவழியாக ஒண்ணரை மணிக்கு முகாம் முடிந்தது. ஆட்சியரும் அதிகாரிகளும் அலுவலர்களும் சாப்பிடவேண்டிய நேரம்.
""சார்! எல்லாருக்கும் அரசுப் பள்ளியில்தான் சாப்பாடு ஏற்பாடு செய்திருக்கிறேன். அங்கே போகலாம் சார்'' ஆட்சியரிடம் சொன்னார் வட்டாட்சியர்.
""சரி வாங்க போகலாம்'' ஆட்சியரும் அதிகாரிகளும் அரசுப் பள்ளிக்குச் சென்றார்கள். மதிய உணவுக்காக காத்திருந்தார்கள். சாப்பாடு தயாராகவில்லை. ""பசிக்கிறதே...'' என்றார் ஆட்சியர்.
""இதோ இன்னும் 10 நிமிடத்தில் சாப்பாடு தயாராகிவிடும்'' என்றார்கள். சாப்பாடு தயாராகவில்லை.
""அட, போங்கப்பா'' கோபத்தோடு எழுந்த ஆட்சியர் அன்புச்செல்வன், தனது காரில் ஏறிப் பறந்துவிட்டார். அடுத்தநாள் வட்டாட்சியர் செந்தில்குமாருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து "ஓலை' வந்தது.
வட்டாட்சியர் செந்தில்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருந்தார்.
பதறிப்போன வட்டாட்சியர், ஆட்சியரிடம் ஓடினார்... விளக்கமளித்தார்... முறையிட்டார். சாப்பாட்டு தாமதம் மட்டுமல்ல, வட்டாட்சியர் மீது ஆயிரத்தெட்டு புகார்கள் இருந்தன. ஆனாலும் கனிவோடு "காத்திருப்போர்' ஓலையை கேன்சல் செய்துவிட்டு, நெய்வேலியில் நிலம் எடுக்கும் பணிக்கு வட்டாட்சியரை அனுப்பினார் ஆட்சியர்.
-எஸ்.பி.சேகர்