உடன்கட்டை ஏறிய கனவு!
""ஓர் வீடு வாங்கணும் சார்'' கனவு கண்ட ஓர் ஏழ்மை பத்திரிகையாளன் மரணித்துப்போனார்.
"நாராயணன் சார்...' இப்படித்தான் அவரை விளிப்பார்கள், நீலகிரியின் கோத்தகிரி மக்கள் .
கோத்தகிரியில் தினகரன் நிருபராக 18 ஆண்டு காலம் பணியாற்றிய நாராயணன்... கடந்த 13-ந் தேதி மாரடைத்து இறந்துபோனார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.
நீலகிரியில் அவரை அறிந்தவர்கள் எளிமையான மனிதர்கள்தான். அந்த எளிய மனிதர்கள் அனைவரும் நாராயணனின் சொந்த ஊரான கட்டப்பட்டு பில்லிகம்பையில் கூடி விட்டார்கள்.
அங்கே அழுகையின் உச்சத்தில் இருந்த குட்டி நம்மிடம், ""இந்த நீலகிரியில என்ன தப்பு நடந்தாலும் சரி சார். யாருக்கும் பயப்படாம, எதுக்கும் மசிஞ்சு போகாம உறுதியா செய்திகளை அனுப்புவார் சார். இங்கே உள்ள தோடாஸ் மக்களின் நிலங்களை அபகரிக்க நினைத்த படுகர் சமுதாய முதலாளிகளை, தன் எழுத்துக்களின் மூலம் விரட்டியடிச்சாரு. அதுனால தன் சொந்த சமுதாய மக்கள்கிட்டயே பகை. ஆனாலும் அதை அவர் பெருசாவே எடுத்துக்கலை. இப்படிப்பட்ட அவருக்கு, தன் மனைவி மேகலாவுக்கும்,
உடன்கட்டை ஏறிய கனவு!
""ஓர் வீடு வாங்கணும் சார்'' கனவு கண்ட ஓர் ஏழ்மை பத்திரிகையாளன் மரணித்துப்போனார்.
"நாராயணன் சார்...' இப்படித்தான் அவரை விளிப்பார்கள், நீலகிரியின் கோத்தகிரி மக்கள் .
கோத்தகிரியில் தினகரன் நிருபராக 18 ஆண்டு காலம் பணியாற்றிய நாராயணன்... கடந்த 13-ந் தேதி மாரடைத்து இறந்துபோனார் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை.
நீலகிரியில் அவரை அறிந்தவர்கள் எளிமையான மனிதர்கள்தான். அந்த எளிய மனிதர்கள் அனைவரும் நாராயணனின் சொந்த ஊரான கட்டப்பட்டு பில்லிகம்பையில் கூடி விட்டார்கள்.
அங்கே அழுகையின் உச்சத்தில் இருந்த குட்டி நம்மிடம், ""இந்த நீலகிரியில என்ன தப்பு நடந்தாலும் சரி சார். யாருக்கும் பயப்படாம, எதுக்கும் மசிஞ்சு போகாம உறுதியா செய்திகளை அனுப்புவார் சார். இங்கே உள்ள தோடாஸ் மக்களின் நிலங்களை அபகரிக்க நினைத்த படுகர் சமுதாய முதலாளிகளை, தன் எழுத்துக்களின் மூலம் விரட்டியடிச்சாரு. அதுனால தன் சொந்த சமுதாய மக்கள்கிட்டயே பகை. ஆனாலும் அதை அவர் பெருசாவே எடுத்துக்கலை. இப்படிப்பட்ட அவருக்கு, தன் மனைவி மேகலாவுக்கும், குழந்தைகளான சூர்யா நாராயணன், மஞ்சுளாவுக்கும் ஒரு வீடு வாங்கி கொடுக்கணும்ங்கறதுதான் குறிக்கோளாவே இருந்துச்சு. அந்த குறிக்கோள் இப்ப கேள்விக்குறியா நிக்குது சார். ஒரு நேர்மையான பத்திரிகையாளனின் கனவு பொய்த்துப் போய்விட்டதே'' என அழுகிறார்.
பத்துரூபா கூட கையில் வைத்துக்கொள்ள முடியாத ஒரு பத்திரிகையாளன் மண்ணுக்குள் புதையுரைப்பட்டார் நமக்கு தெரிந்து. அங்கே உண்மைகள் நிச்சயமாய் மரமாய் முளைக்கும்.
""போயிட்டு வாங்க நாராயணன்... ஒரு வீடு வாங்கிறலாம்.''
-அருள்குமார்
அரசாங்க சம்பளம்!
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதற்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளைச் சிறந்த உதாரணமாகக் காட்டலாம். அதிலும் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிறப்புப் பெருமை(?) சூட்டலாம்.
மாத்திரைகள் வாங்குவதற்காக ஐம்பது, அறுபது நோயாளிகள்... ஆண்கள், பெண்கள் வரிசை நீண்டநேரமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். மாத்திரைகள் கொடுக்கவேண்டிய மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் ஒரே இடத்தில் நின்றபடியே நீண்ட நேரமாக டீ குடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
""நிக்கக்கூட முடியலை... பதினைஞ்சு இருபது நிமிஷமாவா டீ குடிப்பீங்க... சீக்கிரம் வந்து மாத்திரை தரக்கூடாதா?'' கொஞ்சம் சத்தமாகச் சொல்லிவிட்டார் ஒரு நோயாளி. க்யூவில் நின்ற மற்றவர்களும் வேதனையோடு கோரஸ் கொடுத்தார்கள்.
அவ்வளவுதான்... சிரிக்கச் சிரிக்க டீ குடித்துக்கொண்டிருந்த ஐவருக்கும் கோபம் தலைக்கேறிவிட்டது. ""என்ன சவுண்டு விடுறீங்க. உங்களுக்குப் பயப்படணுமா? டாக்டர்களுக்காக காத்திருப்பீங்கள்ல. டாக்டர்கள் ஒருமணி நேரம் டீ குடிச்சாலும் பொத்திக்கினு இருக்கீங்கள்ல... இன்னும் 10 நிமிஷம் ஆகும் டீ குடிச்சு முடிக்க...'' அலட்சியமாகச் சொன்னார்கள்.
""உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?'' என்றார் ஒரு நோயாளி.
""யோவ்! என் பேரு ராஜாசிங். போ... எவன்ட்ட வேணும்னாலும் போய் கம்ளைண்ட் பண்ணு'' எச்சரித்தார் மருந்தாளுநர்களில் ஒருவர்.
வரிசையில் நின்றவர்களில் நான்கைந்து நோயாளிகள் மருத்துவ அதிகாரி திரு.முருகானந்திடம் சென்று புகார் செய்தார்கள். நோயாளிகளோடு மாத்திரை கொடுக்கும் இடத்திற்கு வந்தார் மருத்துவ அதிகாரி. அவரிடம், ""இவங்க எல்லாரும் ரொம்ப ஓவரா பேசுறாங்க சார்'' மிகுந்த அலட்சியத்தோடு சொன்னார் அந்த ராஜாசிங்.
""நோயாளிகளிடம் கொஞ்சம் கனிவாக நடந்துகொள்ளலாமே... டீ குடிக்க வேணாம்னு சொல்லலை. கவுன்ட்டர்ல ஒருத்தராவது இருக்கலாமே?'' கெஞ்சலோடு அறிவுரை வழங்கிவிட்டு உடனே இடத்தைக் காலி செய்தார் மருத்துவ அதிகாரி.
ரொம்பத்தான் பயந்துட்டாங்க ஐந்து மருந்தாளுநர்களும். ஊறிய மட்டைகள்!
-சி.என்.இராமகிருஷ்ணன்
சாதிய உரிமை!
தேவேந்திர குலத்தார் என்ற பெயர் உள்ளிட்ட ஏழு பட்டப்பெயர்களில் வாழ்கின்ற ஒரே சாதியினரை ஒன்றிணைத்து "தேவேந்திர குல வேளாளர்' என ஒரே பெயரால் அரசாணை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை மனுவோடு, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரையும் நேரில் சந்தித்துக்கொண்டிருக்கிறார் "புதிய தமிழகம்' கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மா.செ.க்களுடன் வந்த ஆட்சியர் ராசாமணியிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்த டாக்டர் கிருஷ்ணசாமி, ""இது மட்டுமில்லை... "ஏழு பட்டப்பெயர்கள் இருக்கின்ற எங்கள் தேவேந்திரகுலத்தினரை ஆதி திராவிடர் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும். பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். இவற்றுக்காக மத்திய-மாநில அரசுகளுக்குப் பரிந்துரை செய்யவேண்டும்' என்று மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுத்துக்கொண்டிருக்கிறேன். முதற்கட்டமாக ஐந்து நாட்களில் 20 மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் கொடுக்கப்போகிறேன்'' என்றார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இதுவரை மூன்று பேரணிகளையும் நான்கு மாநாடுகளையும் நடத்தியிருப்பதாகவும், தமிழக முதலமைச்சருக்கும் பாரதப் பிரதமருக்கும் மனுக்களை அனுப்பியிருப்பதாகவும் சொன்னார் டாக்டர் கிருஷ்ணசாமி.
டாக்டரின் தலைமையில் வந்த புதிய தமிழகம் கட்சியினர் சென்ற பிறகு தங்கள் பொதுச்செயலாளர் ஹரிஹரன் தலைமையில் அங்கு வந்த வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர், ""தமிழ் மக்களில், மூத்த சாதி வெள்ளாளர் சாதி. எங்கள் சாதியின் பெயரையும் தங்கள் சாதிய பெயரோடு சேர்த்து எழுதி பதாகைகள் வைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவதென சில அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றன. ஆகவே எங்கள் வெள்ளாளர் சாதி பெயரை சேர்த்து அரசாணை வெளியிடக்கூடாது என்று மனு கொடுப்பதற்காக வந்தோம்'' என்றார்கள்.
இரண்டு தரப்பினரிடமும் மனுக்களைப் பெற்ற ஆட்சியர் ராசாமணி, ""அரசுக்கு அனுப்புகிறேன்'' என்றார்.
-ஜெ.டி.ஆர்.