காட்டிக் கொடுக்கும் கருப்பு ஆடு!
மணல் கொள்ளையர்களின் ஒற்றனாக செயல்பட்ட போலீஸ் ஓட்டுநர் சிவா என்பவரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார் நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார்.
சாதாரணமாக, ஒரு போலீஸ்காரர் முறைகேடாக செயல்பட்டிருந்தால், லஞ்சம் வாங்கினால் டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் என்று தான் தண்டனை இருக்கும். ஆனால் திசையன் விளை இன்ஸ்பெக்டரின் ஓட்டுநராகப் பணியாற் றிய போலீஸ்காரர் சிவாவை கைது செய்திருக் கிறார்கள். ஏன்?
கடந்த வாரம் ரோந்தில் இருந்த உவரி இன்ஸ் சாந்திசெல்வி, திருட்டு மணல் லாரி ஒன்றைக் கைப்பற்றினார். மணல் கடத்திய சின்னதுரை, முத்துக்குமார், கண்ணன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்துக்கு இழுத்து வந்து விசாரித்ததோடு அவர்களின் செல்போன்களையும் சோதித்தார். அவற்றில் பதிவாகியிருந்த பெரும்பாலான வாட்ஸ்அப் செய்திகள் ""இத்தனாம்தேதி இத்தனை மணிக்கு ரெய்டு வருகிறார். அதற்கு முன்னால், இத்தனை மணிக்கு உங்களை வேவு பார்ப்பதற்காக இந்த உடையில்
காட்டிக் கொடுக்கும் கருப்பு ஆடு!
மணல் கொள்ளையர்களின் ஒற்றனாக செயல்பட்ட போலீஸ் ஓட்டுநர் சிவா என்பவரைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார் நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண் சக்திகுமார்.
சாதாரணமாக, ஒரு போலீஸ்காரர் முறைகேடாக செயல்பட்டிருந்தால், லஞ்சம் வாங்கினால் டிரான்ஸ்பர், சஸ்பெண்ட் என்று தான் தண்டனை இருக்கும். ஆனால் திசையன் விளை இன்ஸ்பெக்டரின் ஓட்டுநராகப் பணியாற் றிய போலீஸ்காரர் சிவாவை கைது செய்திருக் கிறார்கள். ஏன்?
கடந்த வாரம் ரோந்தில் இருந்த உவரி இன்ஸ் சாந்திசெல்வி, திருட்டு மணல் லாரி ஒன்றைக் கைப்பற்றினார். மணல் கடத்திய சின்னதுரை, முத்துக்குமார், கண்ணன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்துக்கு இழுத்து வந்து விசாரித்ததோடு அவர்களின் செல்போன்களையும் சோதித்தார். அவற்றில் பதிவாகியிருந்த பெரும்பாலான வாட்ஸ்அப் செய்திகள் ""இத்தனாம்தேதி இத்தனை மணிக்கு ரெய்டு வருகிறார். அதற்கு முன்னால், இத்தனை மணிக்கு உங்களை வேவு பார்ப்பதற்காக இந்த உடையில், இந்த டூவீலரில் எஸ்.பி.யின் தனிப்பிரிவு காவலர் நந்தகோபால் வருகிறார். அவர் மிக நேர்மையான ஆனால் மோசமானவர். அவரை நீங்கள்...!'' என்றெல்லாம் இருந்தன. காவல்நிலைய அதிகாரிகளுக்கு மாதா மாதம் லட்சக்கணக்கில் மணல் கொள்ளையர் களிடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் புரோக்கராகச் செயல்பட்டதோடு, நேர்மையான காவலர்களின் உயிருக்கு உலை வைக்கும் வேலையைச் செய்ததால்தான் கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளார் எஸ்.பி. என்கிறார்கள் திசையன்விளை, உவரி காக்கிகள்.
சில மாதம் முன்பு, விஜயநாராயணபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த எஸ்.பி. தனிப் பிரிவு ஏட்டு ஜெகதீஷ் மணல் கொள்ளையர் களால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட் டார். அதற்கு முன் திசையன்விளை தலை மைக் காவலர் படு காயங்களோடு பிண மாக்கப்பட்டார் என் பவை குறிப்பிடத்தக்க கொலைகளாகும்.
-பரமசிவன்
கள்ளநோட்டு அரசியல்வாதிகள்!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆலங்குப்பம் தோப்புப் பகுதி பச்சையம்மாள் பெட்டிக் கடையில் இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டை இரண்டாவது முறையாக மாற்ற முயன்றபோது அகப் பட்டுக் கொண்டார் ஜோலார்பேட்டை சதாம் உசேன்.
அந்தப் பகுதி மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து, கம்பத்தில் கட்டி வைத்து ஆம்பூர் தாலுகா காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் சில சுவையான தகவல்களைச் சொன்னார் சதாம் உசேன். ""நான் ஜோலார்பேட்டை அ.ம.மு.க. (டி.டி.வி. கட்சி) பாசறைச் செயலாளர். எங்க கட்சியோட ஜோலார்பேட்டை நகர து.செ. அலெக்சாண்டர் தான் 25 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை தந்து "இதை மாத்தித் தந்தால் உனக்குக் கமிஷன் 10 ஆயிரம்'னு சொல்லி தந்தார். மாட்டுச் சந்தையில போனவாரம் 40 ஆயிரத்தை மாத்தி விட்டேன். இந்த அம்மா என்னை புடிச்சிருச்சு'' உண்மையை சொன்னார் சதாம் உசேன்.
அ.ம.மு.க.வின் நகர து.செ.யை இழுத்து வந்து விசாரித்தபோது, ""சார், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வும் மந்திரியுமான வீரமணி கூடத்தான் சுத்திக்கிட்டு இருந்தேன். டி.டி.வி. அணி தொடங்கினதும் அந்தப் பக்கம் போனேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆம்பூர் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம்தான் எனக்கு கட்சியில போஸ்டிங் வாங்கித் தந்தார். தினகரன் இந்த பக்கம் வரும்போது பேனர்கள் வச்சு அசத்துவோம். கட்சி ஆபீஸ்ல கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிப் போட்டு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மட்டும் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில விட்டோம்'' என்று வாக்குமூலம் கொடுத்தார்.
சதாம் உசேனை, அலெக் ஸாண்டரை, இவர்கள் நண்பர்களை கைது செய்திருக்கிறது போலீஸ்.
-து.ராஜா
தட்டிக் கழிக்கும் ஆய்வாளர்!
இரண்டு கால்களும் செயலிழந்த கணவன் மகாதேவனைத் தூக்கித் தன் டூவீலரில் அமர்த்தியபடி, இரண்டு மாதங்களாக, பல்லடம் காவல்நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கிறார் சித்ராதேவி.
""யோவ் மகாதேவா. கவலைப்படாதே. போயிட்டு நாளைக்கு வா. திருட்டுப் போன 3 பவுன் நகையையும் 11 ஆயிரம் ரூபாயையும் கண்டுபிடிச்சிடலாம்'' -இரண்டு மாதமாக இதே பதிலைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார் பல்லடம் காவல்நிலைய எஸ்.ஐ. ராஜ்குமார்.
பொறுமையிழந்த மகாதேவனும் சித்ராதேவியும் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார்கள்.
""என்னய்யா மகாதேவா. புருஷனும் பொண்டாட்டியும் போய் கலெக்டர்ட்ட புகார் கொடுத்தீங்களா? அவர்ட்ட குடுத்த புகாரை வாபஸ் வாங்கிட்டு வாங்க. திருடனைக் கண்டுபிடிக்கலாம்'' -கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள் எஸ்.ஐ.யும் காவலர்களும்.
நொந்து நூலான மாற்றுத் திறனாளியும் அவர் மனைவியும் பல்லடம் எம்.எல்.ஏ. நடராஜனிடம் முறையிட்டார்கள்.
பல்லடம் காவல் நிலையத்திற்கு போன் போட்ட எம்.எல்.ஏ. நடராஜன், ""உங்களுக் கெல்லாம் மனிதாபிமானமே இல்லையா? ஒரு மாற்றுத் திறனாளியிடம் இப்படியா நடந்து கொள்வது...?'' என்று ஆரம்பித்து விளாசியிருக்கிறார்.
விளைவு?
""மறுநாள் ஸ்டேஷனுக்கு போனோம். இனிமேல் ஸ்டேஷனுக்கு வர வேணாம். கலெக்டர் ஆபீசுக்கும் எம்.எல்.ஏ. வீட்டுக்கும் போ, அவுங்க திருடனைக் கண்டுபிடிச்சு உன் நகையையும் பணத்தையும் மீட்டுத் தருவாங்கனு விரட்டி விட்டார்கள்'' -கண்ணீர் வடிக்கிறார்கள் மகாதேவனும் சித்ராதேவியும்.
-அருள்குமார்