வழக்கறிஞர் ராம்சங்கருக்கு புதிய பொறுப்பு!

மிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர். ராம்சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான உத்தரவை பல்கலைக்கழகப் பதிவாளர் டிசம்பர் 2-ஆம் தேதி வழங்கினார்.

signal

தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் சட்டப் படிப்புக்கு என பிரத்யேகமாக தொடங்கப்பட்ட அரசு சட்டப் பல்கலைக்கழகமாகும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர், சேலம் ஆகிய எட்டு இடங்களிலுள்ள அரசு சட்டக் கல்லூரிகள் இதன் கட்டுப்பாட்டில் உள்ளன. இத்தகைய தனிச்சிறப்புகள் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தின் வழக்கறிஞராக டாக்டர் ராம்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ராஜபாளையம் நகரைச் சேர்ந்த ராம்சங்கர், கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் டெல்லியில் வழக்கறிஞராகப் பணியாற்றிவருகிறார். சமீபத்தில் சட்டப் படிப்பில், இந்தியாவில் எப்படி உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். குருகிராம் ஜி.டி.கோயங்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினர்.

-கீரன்

முதலிடம் பிடித்த உ.பி.

Advertisment

ட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் எனப்படும் "உபா' சட்டத்தின்கீழ் அதிகளவிலான ஆட்களைக் கைது செய்ததில் உத்தரப்பிரதேசம் முதலிடம் பிடித்திருக்கிறது.

நவம்பர் 29 முதல் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நடை பெற்றுவருகிறது. ராஜ்ய சபாவில் நவம்பர் 1-ஆம் தேதி உள்துறைக்கான மாநில அமைச்சர் நித்யானந்த் ராய், உபா சட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி யொன்றுக்கு எழுத்து வடிவிலான பதிலளித்தார்.

2020-ஆம் ஆண்டில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 1,321 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதில் எழுபது சதவிகிதம் உத்தரப்பிர தேசம், ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர் மாநிலங்களி லேயே நடைபெற்றிருக் கிறது. 2016 முதல் தற்போதுவரை உபா சட்டத்தின் கீழ் 7,243 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட் டிருந்தது. இவ்வருடம் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் உபா சட்டத்தின்கீழ் 361 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஆனால் அதை விட வேடிக்கையான விஷயம், இந்த ஏழாயிரத்துக்கும் அதிகமான பேரில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது 212 பேர் மட்டுமே. விடு விக்கப்பட்டவர்களோ 286 பேர். மற்றவர்கள்? அரசாங்கமோ… நீதிமன்றமோ ஒரு முடிவுக்கு வரும்வரை சிறையில் இருக்க வேண்டியதுதான்.

signal

எழுத்தாளரை "குடிசை'க்கு அனுப்பிய பா.ஜ.க.!

டெல்லியில் இன்னும் சில மாதங்களில் மாநகராட்சித் தேர்தல் நடக்கவிருக்கிறது. தலைநகரான டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியைத் தாண்டி, தனது கொடியை நாட்டமுடியாத வருத்தத்திலிருக்கும் பா.ஜ.க., இத்தேர்தலில் வெற்றிக்கு ஆயத்தம் செய்துவருகிறது.

டெல்லி மாநக ராட்சியில் மிகப்பெரிய வாக்கு வங்கி குடிசை வாசிகளுடையதுதான். அதனால் அவர்களைக் கவர பா.ஜ.க. ரத யாத்திரை பாணியில் குடிசைவாசிகளை மதிக்கும் யாத்திரை ஒன்றுக்கு ஏற் பாடு செய் திருந்தது. பா.ஜ.க.வின் ஜே.பி. நட்டா கலந்துகொண்ட இந்த விழாவுக்காக டெல்லியெங்கும் சுவரொட்டி கள், பதாகைகள் வைக்கப் பட்டிருந்தன.

அதில் வைக்கப்பட்டிருந்த ஒரு படம்தான் தற்போது சர்ச்சையாகியிருக்கிறது. "மாதொருபாகன்' நாவல் மூலம் பெயர்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெருமாள்முருகனின் படம் அதில் இடம்பெற்றிருந்ததுதான் சர்ச்சைக்குக் காரணம். போஸ்டர், கட்அவுட்டை வடிவமைத்தவர்கள், வலைத்தளத்தில் கிடைத்த பெருமாள்முருகன் படத்தை அதில் சேர்த்துவிட்டனர்.

எழுத்தாளர் என்பதால் அதை அடையாளம் கண்டவர்கள், சமூக ஊடகங்களில் அதைப் பதிவிட்டு பா.ஜ.க.வின் மானத்தை வாங்கிவிட்டார்கள். இந்த விவரம் தெரியவந்த பெருமாள்முருகன் தனது முகநூல் பக்கத்தில், "குடிசைவாசிகளில் ஒருவனாக இருக்கிறேன். மகிழ்ச்சி' என பதிவிட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி, பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டத்தின்கீழ் வங்காளத்தில் பலனடைந்த 24 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவர் என பத்திரிகைகளில் லட்சுமிதேவி என்பவரின் படம் விளம்பரம் செய்யப்பட்டது. இந்தியா டுடே அவரைத் தேடிப்பிடித்து விசாரித்தபோது, "லட்சுமிதேவி நான்தான். மத்திய அரசு எனக்கு எந்த ஒரு வீடும் கொடுக்கவில்லை'' என மறுத்தார்.

ஒருமுறை நடந்தாதான் "அவமானம்';… திரும்பத் திரும்ப நடந்தா "சாதனை' என பா.ஜ.க. நம்புகிறதோ என்னவோ!

-க.சுப்பிரமணியன்