சிக்னல்! துணை சபாநாயகரும் எங்காளுதான்! பா.ஜ.க.வின் குயுக்தி!

ss

துணை சபாநாயகரும் எங்காளுதான்! பா.ஜ.க.வின் குயுக்தி!

எதிரணிகளைப் பலவீனப்படுத்த அக்கட்சியின் பலமான நபர்களை தம் கட்சிக்கு இழுப்பதை ஒரு யுக்தியாகவே பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவளிக்காத ஒருவருக்கு ஆதரவளித்து சமாஜ்வாடி ssகட்சியை இக்கட்டுக்குள் தள்ளியிருக்கிறது பா.ஜ.க.

வழக்கமாக சபாநாயகர் பதவி ஆளும்கட்சிக்குப் போகும். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்குப் போகும். துணை சபாநாயகர் தேர்தலில் நரேந்திர சிங் வர்மாவைத் தேர்தலில் நிறுத்த எண்ணியிருந்தது சமாஜ்வாடி கட்சி. அதற்கு எதிராக சமாஜ்வாடி கட்சியிலிருந்து பிரிந்து வந்த நிதின் அகர்வாலுக்கு ஆதரவளித்தது பா.ஜ.க. நிதின் அகர்வால், 2019-ல் சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி, பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வாய்ப்புக் கொடுக்கும் என்ற கனவில் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த் தது எதுவும் நடக்கவில்லை.

தருணம் பார்த்துக் காத்திருந்த பா.ஜ.க., துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாட

துணை சபாநாயகரும் எங்காளுதான்! பா.ஜ.க.வின் குயுக்தி!

எதிரணிகளைப் பலவீனப்படுத்த அக்கட்சியின் பலமான நபர்களை தம் கட்சிக்கு இழுப்பதை ஒரு யுக்தியாகவே பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாடி கட்சி ஆதரவளிக்காத ஒருவருக்கு ஆதரவளித்து சமாஜ்வாடி ssகட்சியை இக்கட்டுக்குள் தள்ளியிருக்கிறது பா.ஜ.க.

வழக்கமாக சபாநாயகர் பதவி ஆளும்கட்சிக்குப் போகும். துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிக்குப் போகும். துணை சபாநாயகர் தேர்தலில் நரேந்திர சிங் வர்மாவைத் தேர்தலில் நிறுத்த எண்ணியிருந்தது சமாஜ்வாடி கட்சி. அதற்கு எதிராக சமாஜ்வாடி கட்சியிலிருந்து பிரிந்து வந்த நிதின் அகர்வாலுக்கு ஆதரவளித்தது பா.ஜ.க. நிதின் அகர்வால், 2019-ல் சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி, பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வாய்ப்புக் கொடுக்கும் என்ற கனவில் இருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த் தது எதுவும் நடக்கவில்லை.

தருணம் பார்த்துக் காத்திருந்த பா.ஜ.க., துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி, அதேசமயம் சமாஜ்வாடி கட்சியால் சட்டமன்ற உறுப்பினர் பதவியி லிருந்து நீக்கப்படாத நிதினை நிறுத்தியது. “சமாஜ்வாடி கட்சிக்கு இளம்வயது நபரை ஆதரிக்க மனதில்லை. ஆனால் பா.ஜ.க.வுக்கு இளம் நபர்களை ஆதரிக்கும் எண்ணமிருக்கிறது” என்று கூறி துணை சபாநாயகர் தேர்தலில் நிதினுக்கு ஆதரவு தெரிவித்தார் யோகி.

இதனால் 304 வாக்குகளுடன் நிதின் வெற்றிபெற, சமாஜ்வாடியின் வர்மா 60 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

-க.சுப்பிரமணியன்

கருணை காட்டுமா அரசு! எதிர்பார்ப்பில் நாதஸ்வரக் கலைஞர்கள்!

குடும்ப நிகழ்வுகளான சீர், சடங்குகள், திருமண விழாக்கள் தொடங்கி கோயில் நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் மேளம், நாதஸ்வரம் இசைப்பது ஒரு மங்கள நிகழ்வாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இந்த தொழிலில் ஈடுபடும் கலைஞர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.

ss

"கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கொரோனா தாக்கம் காரணமாக கோவில் திருவிழா, திருமணம், மற்றும் அனைத்து வகையான விசேஷங்களும் சிக்கலுக்குள்ளாகி இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளின் விதிப்படிதான் விழாக்களும் பண்டி கைகளும் கெடுபிடி களுடன் நடக்கின் றன. “எங்கள் தொழில் சாதாரணமாகவே சிரம தசையில். கொரோனாவுக்குப் பின் இன்னும் மோசம். கொரோனாவுக்கு பிறகு எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இத்தொழிலில் ஈடுபடும் அனைத்து கலைஞர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கலைஞர்களுக்கு இசைக்கருவியும், பேருந்துகளில் இலவச பஸ் பாஸ், இலவச வீடு, வீட்டு மனை பட்டா ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக அரசும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் எங்கள் மீது கருணை காட்டுவார்கள் என நம்பிக்கையுடன் வாழ்கிறோம்''’என்றனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை அளிக்க வந்த தமிழ் இசைக்கலைஞர்கள், மக்கள் கவனத்துக்கும் கொண்டுவரச் சொல்லி நக்கீரனிடமும் ஒரு விண்ணப்பம் வைத்தனர்.

-ஜீவாதங்கவேல்

காவலரை அறைந்த அமைச்சரின் உதவியாளர்!

"என்ன இருந்தாலும் அந்தத் தலைமைக் காவலரை, அமைச்சரின் உதவியாளர் பொது இடத்தில் வைத்து அடித்திருக்கக்கூடாது. அந்தத் தலைமைக் காவலர் இன்னும் மன உளைச்சலிலேயே இருக்கிறார்' -திருச்செந்தூர் வாசகர் ஒருவர் அளித்த தகவல் இது.

ss

திருச்செந்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிகிறார், முத்துக்குமார் (ஐஈ 106). அந்த ஊரின் மணி அய்யர் ஓட்டல் சந்திப்பில், அரசு வாகனம் (பச 43ஏ 8969) ஒன்று போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றது. காரை நிறுத்தியிருந்த தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் டிரைவரிடம், முத்துக்குமார் ‘"கொஞ்சம் காரை எடுங்க...'’ என்று கெஞ்சி யிருக்கிறார். டிரைவரோ ‘"இது அமைச்சரோட கார்... அதெல்லாம் எடுக்கமுடியாது'’என்று மரியாதைக் குறைவாகப் பேசியிருக்கிறார். ஆட்டோ டிரைவர்கள், சத்தம் போட்டதால். காரைக் கிளப்பினார் அந்த டிரைவர்.

அடுத்த பத்து நிமிடங்களில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாவும் மேலும் இருவரும் அந்த இடத்துக்கு வந்தனர். வந்த வேகத்தில் கெட்டவார்த்தையால் திட்டிய கிருபா, ஹெட் கான்ஸ்டபிள் முத்துக் குமாரின் கையை இருவர் பிடித்துக்கொள்ள, கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். கிருபா தாக்கியதில், முத்துக்குமார் அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி கழன்று கீழே விழுந்திருக்கிறது. சீருடையிலிருந்த தன்னை, பொதுஇடத்தில் பலர் முன்னிலையில் அடித்ததால் கூனிக் குறுகிப்போன முத்துக்குமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தார்.

திருச்செந்தூர் போக்குவரத்து தலைமைக் காவலர் முத்துக்குமாரை நாம் தொடர்புகொண்ட போது, "ரொம்ப மோசமா நடந்துக்கிட்டாங்க. அடிச்சவங்களே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட பிறகு, நான் என்ன பண்ணமுடியும்? அதான்... புகாரை திரும்ப வாங்கிட்டேன்''’என்றார் உடைந்த குரலில்.

பணி செய்யவிடா மல் போக்குவரத்துக் காவலரை தடுத்த தோடு, சீருடை அணிந்திருந்த அவ ரைத் தாக்கியதெல் லாம் மன்னிக்கக்கூடிய குற்றம் ஆகிவிட்டதற்குக் காரணம், அடித்தவர்கள் ஆளும்கட்சியினர் என்பது தான்.

-ராம்கி

nkn271021
இதையும் படியுங்கள்
Subscribe