சலூன் கடைகளில் கால்பதிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கு எதிர்ப்பு!

காய்கறி தொடங்கி, ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், மளிகைப்பொருட்கள் என எதையும் விட்டு வைக்காத கார்ப்பரேட் நிறுவனங்கள், தற்போது முடிதிருத்தத் துக்கு குறைந்த சலுகைக் கட்டணம் எனக் கூறிக்கொண்டு சலூன் கடைகளைத் திறக்கவுள்ளனர். இது, காலங்காலமாக இத்தொழிலில் ஈடுபட்டுவரும் எளிய மக்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே இதற்கெதிராக, தமிழ்நாடு மருத்துவர் சமூக சங்கம், முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில், கடந்த 7-ம் தேதி, கார்ப்பரேட் நிறுவனங்களைக் கண்டித்து சலூன் கடைகளை அடைத்து தமிழகம் முழுக்க போராட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சலூன் கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு காளைமாடு சிலை அருகே ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சங்கச் செயலாளர் வெங்கடேசன் கூறும்போது, "பாரம்பரியமாக இந்த முடிதிருத்தும் தொழிலில் தமிழகம் முழுக்க 30 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். சில கார்ப்பரேட் நிறுவனங்கள், முடி திருத்த குறைந்த சலுகைக் கட்டணம் என்பன போன்ற புதிய யுத்திகளைக் கையாண்டு, இத்தொழிலில் இறங்கி எங்கள் தொழிலை முடக்க நினைக் கின்றனர். எங்களுக்கு இந்தத் தொழில்தான் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு தொழில்கள் உள்ளன. அவர்கள் அதைச் செய்யட்டும். முடி திருத்தும் தொழிலில் அவர்கள் இறங்குவதையும், பல ஊர்களில் அவர்கள் கடைகள் தொடங்கு வதையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் உடனே கைவிட வேண்டும்'' என்றார்.

-ஜீவாதங்கவேல்

Advertisment

s

அடக்குமுறைகளுக்கு எதிராகக் கைகோர்த்த ஆர்ப்பாட்டம்!

பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யவும், மனித உரிமைக்கு எதிரான கொடூர உபா (UAPA) சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறவும், தேசிய புலனாய்வு முகமை (NIA)க்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி, செப்டம் பர் 15 அன்று, வடசென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் மனிதச் சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தியத் தொழிற்சங்க மய்யம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்பு களின் சார்பில் ஆயிரக்கணக் கானோர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பெரம்பூர் சட்டமன்ற உறுப் பினர் ஆர்.டி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைத்தலைவருமான எஸ்.கே. மகேந்திரன், வி.சி.க. பகுதி செயலாளர் கல்தூண் ரவி, கவிஞர் இரா.தெ.முத்து, புரட்சிகர இளைஞர் முன்னணி செயலாளர் மகிழ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகிகள் ஜானகிராமன், பூபாலன், ராஜ்குமார், வெங்கட் டைய்யா, செம்மல், வழக்கறிஞர் அனந்தன் ஆகியோர் பங்கேற்ற னர்.

-ஸ்டாலின்

அகரமுதலித் திட்ட இயக்குநர் மாற்றத்தில் சர்ச்சை!

தமிழாசிரியராக சிறப்பாகப் பணியாற்றிவந்த தங்க.காமராஜ் என்பவரை, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநராகத் தமிழக அரசு நியமித்தது. அவர், துணை இயக்குநராகப் பதவிஉயர்வு பெற்று, அதன்பின்னர், அகர முதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இப்பதவியில் செயல்பட்டுவந்த அவரை, பணி ஓய்வுபெற இன்னும் பத்து மாதங்களே உள்ள நிலையில்... பதவியிறக்கம் செய்து, திருப்பூர் மாவட்டத்தின் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநராக நியமித்துள்ளது தமிழ்நாடு அரசு. தற்போது, தங்க.காமராஜுக்குப் பதிலாக, அகரமுதலி திட்டத்தின் இயக்கு நராக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய விஜயராகவனை நியமித்துள்ள னர். இந்த விஜயராகவன், ஏற்கனவே ஓலைச்சுவடி குறித்த சர்ச்சைகளில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்க. காமராஜின் பதவி இறக்கத்துக்கு வலுவான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், அவர் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில் அவரது பதவியை வேறொருவருக்கு வழங்கியிருப் பது தவறான முடிவென்றும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. தங்க. காமராஜ் இயக்குநராக இருந்தபோது, "தூய தமிழ்' என்ற பெயரில் பல்வேறு விருதுகளை உருவாக்கி, அவ்விருதுகளைப் பெறுவதற்கான விருதாளர் களையும் உருவாக்கியுள்ளார் என்றும், அவர் பதவியில் இருக்கும்போது அவ்விருது களை வழங்குவதே சரியான செயலென்றும் அவருக்கு ஆதரவாகக் குரல் எழும்புகிறது. அதேபோல, தங்க. காமராஜால் சீரமைக்கப்பட்ட, 7 தொகுதி களைக் கொண்ட பேரகராதியின் திருத்திய பதிப்பை, அவரே இயக்குநராக இருந்து வெளி யிடுவதே நன்றாக இருக்கு மென்றும் கேட்டுக்கொண் டுள்ளனர்.

-கீரன்