செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ்நாடெங்கும், கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருந் தார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தொ.மு.ச. அமைப்புசாராத் தொழிலாளர் பிரிவுப் பொதுச்செயலாளரும் தடுப்பூசி முகாம்களை நடத்தக்கூடாது என்று துறை அதிகாரிகளை மிரட்டித் தடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. முகாம் நடத்த அறிவிக்கப்பட்ட தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், செப்டம்பர் 1 அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கூடி அலைமோதினர். தடுப்பூசி முகாம் ரத்தான செய்தி தொழிலாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் செய்த மாற்று ஏற்பாட்டில், தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில் நடந்துவந்த முகாமிற்கு அதே தொழிலாளர்கள் அனுப்பப்
செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ்நாடெங்கும், கட்டுமான, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஏற்பாடு செய்திருந் தார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் ஒரு தி.மு.க. எம்.எல்.ஏ.வும், தொ.மு.ச. அமைப்புசாராத் தொழிலாளர் பிரிவுப் பொதுச்செயலாளரும் தடுப்பூசி முகாம்களை நடத்தக்கூடாது என்று துறை அதிகாரிகளை மிரட்டித் தடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. முகாம் நடத்த அறிவிக்கப்பட்ட தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், செப்டம்பர் 1 அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கில் தொழிலாளர்கள் கூடி அலைமோதினர். தடுப்பூசி முகாம் ரத்தான செய்தி தொழிலாளர்களை அதிர்ச்சியடையச் செய்தது. தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் செய்த மாற்று ஏற்பாட்டில், தாம்பரம் கிருத்துவக் கல்லூரியில் நடந்துவந்த முகாமிற்கு அதே தொழிலாளர்கள் அனுப்பப்பட்டனர்.
தடுப்பூசித் திட்டத்தை நடக்கவிடாமல் தடுத்தது தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா என முதல்வரின் அலுவலகம்வரை புகார் சென்றுள்ளதாம். எம்.எல்.ஏ. தரப்போ, தொ.மு.ச அமைப்பு சாராத் தொழிலாளர் பிரிவுப் பொதுச் செயலாளர் பொன்ராம் தரப்புதான் தடுத்தது என்கிறதாம். கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவரான பொன்குமார் இதைக் கவனிக்கவேண்டும் என்கிறார்கள். தி.மு.க. மாவட்டச் செய லாளரும், அமைச்சருமான தா.மோ. அன்பரசனும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனும் இந்த தடுப்பூசி தடுப்பு நடவடிக்கை குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்களாம்.
சாலையில் விறகு அடுப்பு போராட்டம்!
சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது 900 ரூபாயை எட்டியுள்ளதால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டரின் விலையேற்றிய மத்திய அரசைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அமைந்தகரை ஸ்கைவாக் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாலம் அருகே தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சாலையிலேயே விறகடுப்பு மூலம் சமை யல் செய்து, நூதன முறையில் போராட்டம் நடத்தினார் கள். எத்தனை போராட்டம் நடத்தினாலும் எதையும் கவனிக்க மாட்டோம் என்கிறது ஒன்றிய அரசு. சி-ண்டர் விலை, பெட்ரோல் விலை பற்றி அலட்டிக்கொள்ளாமல் அமெரிக்க பயணத்திற்கு ரெடியாகிவிட்டார் பிரதமர் மோடி.
-கீரன்
வாகனப் பதிவு மோசடி!
புதுச்சேரி சட்டப்பேரவையில் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், கடந்த ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2019 வரை போக்குவரத்து துறையின் தணிக்கையில், பெருமளவில் இதர மாநிலத்தவர்கள் வாகனங்களைப் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. அதிலும், ஒரே முகவரியில் ஏராளமான வாகனங்கள் பதிவாகியிருப் பது தெரியவந்தது. கடந்த 2016 - 19 வரை, 11,454 வாகனங்கள், பிற மாநிலங்களில் நிரந்தர முகவரி உள்ள நபர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகனப்பதிவை ஆராய்ந்ததில், ஒரே முகவரியை 8 முதல் 44 வாகன உரிமையாளர் கள் திரும்பத் திரும்பத் தெரிவித்திருப்பதைக் கண்டறிந்துள்ளனர். விலையுயர்ந்த 117 வாகனங்களின் பதிவு கள், வெறும் 5 முகவரி களைக் கொண்டி ருந்தன. பிற மாநிலத்தை விட புதுச்சேரியில் வாகனப் பதிவுக்கான கட்டணம் குறைவாக இருந்ததால் இங்கு வாகனப்பதிவு மேற் கொள்ளப்பட்டுள்ளது. சொந்த மாநிலங்களில் ரூ.2.42 கோடி வரியாகச் செலுத்த வேண்டியதை, புதுச்சேரியில் வெறும் 40 லட்ச ரூபாய் மட்டும் செலுத்தி வாகனப்பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக பல கோடி மதிப்புள்ள 117 வாகனங்களைப் பதிவுசெய்த உரிமையாளர்கள் புதுச்சேரியில் குறைவான வரிவிதிப்பை பயன்படுத்தி யும் தற்காலிக நடப்பு முகவரியைத் தெரிவிக்கலாம் என்ற விதியைப் பயன்படுத்தியும் ரூபாய் 40 லட்சம் மட்டுமே வரி செலுத்தி வாகன பதிவு செய்துள்ள னர். சொந்த மாநிலங்களில் இந்த ரூ.20.49 கோடி மதிப்புள்ள வாகனங்களை இவர்கள் பதிவு செய்திருந்தால் ரூ.2.42 கோடி வரியாக செலுத்தவேண்டியிருக்கும். வெளி மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள், பிரபல தொழிலதிபர்கள் தங்கள் கார்களைப் புதுச்சேரி யில் பதிவு செய்வதால் அந்த மாநிலங்களுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக எழுந்த புகார்கள், தற்போது மத்திய தணிக்கை அறிக்கை மூலம் உறுதியாகி யுள்ளது.
-சுந்தரபாண்டியன்