அக்னி சிறகுகள் கொண்ட கவிதைப் பறவை
ஒரு செய்தியாளராக அனைத்து அரசியல் கட்சிகள்- சமூக அவ லங்கள் பற்றிய செய்திகளை சம ரசமின்றி பதிவு செய்தவர் நக்கீரனின் கோவை நிருபரான அருள்குமார். அவருக்குள் ஒரு படைப்பாளியும் அவ்வப் போது எட்டிப் பார்த்துக்கொண்டே இருப்பார். சபரிமலை மகரஜோதி பின்னணி, பொள்ளாச்சி பாலியல் கொடூரம், ஈஷா மையத்தின் ஆக்கிரமிப்பு, கொடநாடு கொலை-கொள்ளை என பரபரப்பான செய்திகளை வெளிக்கொண்டு வந்த அருள்குமார், தனது செய்திகளிடையே படைப்பாற்றலை வெளிப்படுத்தத் தவறியதில்லை. கோவைவாசிகளிடம் இளம் வயதில் ஒரு கவிஞனாக அறிமுகமான அவர், தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான, "கிளையொன்றிலிருந்து மேலெழும் பெரும் பறவை' என்ற நூலினை ஆகஸ்ட் 1ஆம் நாள் வெளியிட்டார்.
கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, நக்கீரன் பொறுப்பாசிரியரால் அந்த கவிதை நூல் வெளியிடப்பட்டது. அரங்கம்
அக்னி சிறகுகள் கொண்ட கவிதைப் பறவை
ஒரு செய்தியாளராக அனைத்து அரசியல் கட்சிகள்- சமூக அவ லங்கள் பற்றிய செய்திகளை சம ரசமின்றி பதிவு செய்தவர் நக்கீரனின் கோவை நிருபரான அருள்குமார். அவருக்குள் ஒரு படைப்பாளியும் அவ்வப் போது எட்டிப் பார்த்துக்கொண்டே இருப்பார். சபரிமலை மகரஜோதி பின்னணி, பொள்ளாச்சி பாலியல் கொடூரம், ஈஷா மையத்தின் ஆக்கிரமிப்பு, கொடநாடு கொலை-கொள்ளை என பரபரப்பான செய்திகளை வெளிக்கொண்டு வந்த அருள்குமார், தனது செய்திகளிடையே படைப்பாற்றலை வெளிப்படுத்தத் தவறியதில்லை. கோவைவாசிகளிடம் இளம் வயதில் ஒரு கவிஞனாக அறிமுகமான அவர், தன்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான, "கிளையொன்றிலிருந்து மேலெழும் பெரும் பறவை' என்ற நூலினை ஆகஸ்ட் 1ஆம் நாள் வெளியிட்டார்.
கோவை திவ்யோதயா அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கோவை ராமகிருஷ்ணன் தலைமை வகிக்க, நக்கீரன் பொறுப்பாசிரியரால் அந்த கவிதை நூல் வெளியிடப்பட்டது. அரங்கம் நிறைந்திருந்த வருகையாளர்களே வாழ்த்தாளர்களாகி, அருள்குமாரின் படைப்பாற்றலைப் பாராட்டினர். அவருடைய கவிதைகளைப் போலவே சமூக அக்கறை கொண்ட பத்திரிகையாளர்கள், படைப்பாளர்கள், இயற்கை ஆர்வலர்கள், பெரியாரிய -மார்க்சிய -அம்பேத்கரிய சிந்தனையாளர்கள் அருள்குமாரின் பத்திரிகை பணியையும் கவிதைத் தொகுப்பையும் பாராட்டினர்.
நக்கீரன் ஆசிரியரின் துணிச்சலான சமூகப் பங்களிப்பையும் அந்தக் குடும்பத்தில் ஒருவராக அருள்குமாரின் செயல்பாட்டையும் உண்மையான சொற்களால் அரங்கத்தில் பலரும் பேசியபோது, அக்னி சிறகுகள் கொண்ட கவிதைப் பறவை சமுதாய வானத்தில் சிறகடிக்கத் தொடங்கியது.
-கீரன்
சரிந்த சாம்ராஜ்யம்
தி.மு.க.வைச் சேர்ந்த எக்ஸ் எம்.எல்.ஏ.வும், எம்.பி.யுமான 85 வயதுடைய கே.சி. பழனிச்சாமி, கட்சியின் சொத்துப் பாதுகாப்புக் குழு உறுப்பினராகவும் உள்ளார். தொழிலதிபரான இவருக்கு கரூர் மாவட்ட மாயனூரில், கே.சி.பி. பேக்கேஜிங்ஸ் என்ற சாக்குப்பை உற்பத்தி நிறுவனம் இருந்தது. புதுச்சேரி, கரூர், பொள்ளாச்சி பகுதிகளிலும் சொத்துகள் ஏகத் துக்கும் இருந்தன. கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, 5 ஆண்டுகள் கரூர் எம்.பி.யாக இருந்தார். அதன்பின் 2009ஆம் ஆண்டு அவர் மீண்டும் போட்டியிட்டபோது, இந்திய அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமாகச் சொத்து மதிப்பைக் காட்டி, வசதியான வேட்பாளர்கள் வரிசையில் 2-வது இடத்தில் இருந்தார். ஆனால், அப்போது தம்பிதுரையிடம் தோல்வியடைந்தார். பின்னர், 2011-ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டி யிட்டு எம்.எல்.ஏ.வானார். அதன்பின் 2016-ல் தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தோல்வியடைந்தார்.
இந்நிலையில், தொழில் நஷ்டம் அவரைத் தாக்கியது. இதன் காரணமாக தன் பெயரிலும், தனது மனைவி , மகன், மகள் பெயரிலும் உள்ள சொத்துகளை அடமானம் வைத்து கிட்டத்தட்ட ரூ.200 கோடிவரை கடன் பெற்றார். அதை சரிவர கட்டாத நிலையில், வங்கிகளில் வைக்கப் பட்டுள்ள அவரது ரூ. 197 கோடி மதிப்புள்ள சொத்துகள் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் நாளிதழ்களில் வெளியிடப் பட்டுள்ளன.
குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஐ.டி.பி.ஐ., என பல்வேறு வங்கிகளில் வைக்கப் பட்டிருந்த மொத்தம் ரூ.197,79,00,683 மதிப்பிலான அவரது சொத்துகள் விற் பனைக்கு வந்துள்ளன. கரூர் வைஸ்யா வங்கியில் பெற்ற கடனில், பிணையப்படுத்துதலில் உள்ள சிக்கல் காரணமாக, அது மட்டும் விற்பனையில் சேர்க்கப் படவில்லை என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலத்தில் நம் கண்ணெதிரே நிமிர்ந்திருந்த கே.பி.பி.யின் தொழில் சாம்ராஜ்யம், சடசடவென சரிந்திருப்பது வருத் தத்திற்குரியது.
-மகேஷ்
சந்தடி சாக்கில் கர்ச்சிஃப்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் உள்ள விஜயநாராயணம் அருகே நம்பியாறு-கருமேனியாறு இணைப்புத் திட்டப் பணிகள் நடந்து வருகிறது. அங்கே தூர் வாருவதற்கான ரூ.70 லட்சம் மதிப்பிலான கான்ட்ராக்ட்டைப் பெற, நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. பெரும் புள்ளி ஒருவர் வரிந்துகட்டி நிற்கிறார். இதையறிந்த கட்சியினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ’அரசு சார்பான எல்லா பலன்களையும் அவரும் அவர் குடும்பமும் மட்டும்தான் அனுபவிக்கவேண்டுமா? கீழ்நிலையில் இருக்கும் கட்சிக்காரங்க யாரும் முன்னுக்கு வரக்கூடாதா?’ என்ற முணுமுணுப்பும் கிளம்பியிருக்கிறது.
இது தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரூபி மனோகரனுக்குத் தெரியவர, அவர் இந்தக் காண்ட்ராக்ட் விவகாரத்தை நேரடியாக அறிவாலயம் வரை கொண்டு சென்றிருக்கிறார். ”இதை, தி.மு.க. மற்றும் காங்கிரஸில் உள்ள கஷ்டப்படுகிற விளிம்பு நிலைத் தொண்டர் களுக்குப் பகிர்ந்தளித்தால், அவர்களுக்கு உதவியாக இருக்கும் ”என்றும் அங்கே அழுத்தம் கொடுத்திருக்கிறாராம் ரூபி. ’சந்தடி சாக்கில் தங்கள் தரப்புக்கு கான்ட்ராக்டில் கர்ச்சிப் போட்டு இடம்பிடிக்கப் பார்க்கிறாரே ரூபி’ என்று இப்போது சலசலத்த குரல்கள் மாற்றி ஒலிக்கின்றன.
-பரமசிவன்