இளங்குமரனாருக்கு அரசு மரியாதை
தமிழறிஞரும் பல்வேறு நூல்களை எழுதித் தமிழ்ப்பணியாற்றிய மொழி ஆய்வாளருமான, முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தனது 91-ம் வயதில், வயது முதிர்வின் காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் 26-ம் தேதி இரவு, மதுரை திருநகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற் பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் என பன்முகத் திறனாளியாக விளங்கியவர் இளங்குமரனார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “"தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவு, தமிழ் மொழிக்கும் தமிழகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை, அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இ
இளங்குமரனாருக்கு அரசு மரியாதை
தமிழறிஞரும் பல்வேறு நூல்களை எழுதித் தமிழ்ப்பணியாற்றிய மொழி ஆய்வாளருமான, முதுமுனைவர் இரா. இளங்குமரனார், தனது 91-ம் வயதில், வயது முதிர்வின் காரணமாகவும், உடல் நலக்குறைவாலும் 26-ம் தேதி இரவு, மதுரை திருநகரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பள்ளி ஆசிரியராக வாழ்வைத் தொடங்கி, நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற் பொழிவாளர், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர் என பன்முகத் திறனாளியாக விளங்கியவர் இளங்குமரனார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “"தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவு, தமிழ் மொழிக்கும் தமிழகத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இலக்கணச் செழுமையும் இலக்கிய வளமும் கொண்ட தமிழ் மொழியை, அதன் பண்பாட்டைத் தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காகத் தொடர்ந்து பணியாற்றியவர்''’என்று புகழஞ்சலி செலுத்தியதோடு, குமரி முனை வள்ளுவர் சிலைத்திறப்பின் போது அவர் ஆற்றிய உரையையும் நினைவு கூர்ந்திருக்கிறார். அவரது ஆணைப்படி, இளங்குமரனாரின் உடல், மதுரை திருநகர் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. மறைந்தாலும் தனது தமிழ்த் திருத்தொண்டால், இளங்குமரனார் என்றென்றும் வாழ்வாங்கு வாழ்வார்.
டெண்டர் குழறுபடி
கடந்த 27-ந் தேதி மதுரை மாநகராட்சி சாலை மடீஷியா அரங்க முகப்பு, டிராஃபிக்ஜாமில் திணற, ஏகத்துக்கும் போலீஸ் தலைகள் தெரிந்தன. விசாரித்தபோது, மாநகராட்சியின் தினசரி வாரச்சந்தை உட்பட 67 இடங்களுக்கான பொது ஏலம் என்றார்கள். இவற்றில் 40 இடங்களுக்கு மட்டும் 163 பேர் விண்ணப்பித்திருந்தனர். அங்கிருந்த நபர் ஒருவர் நம்மிடம், "சார், இன்று ஏலம். ஆனால் நேற்றுதான் அதற்கான பாரமே கொடுத்தார்கள். இந்த கொரோனா சமயத்தில், இப்படி கூட்டத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக இ-டெண்டர் மூலம் ஏலம் நடத்தினால் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது. ஆனால், இதை ஏன் யாரும் யோசிக்கலை.
அ.தி.மு.க. முன்னாள் மேயர் ராஜன்செல்லப்பா இப்பவும் களத்தில் இருக்கார்னு சொல்லப் படுது. மற்றபடி, தி.மு.க. மாநகர் மாவட்டச் செயலாளர் தளபதியும், பொன்முத்தும் தங்களைக் கவனித்த, தங்களுக்கு வேண்டப் பட்டவர்களுக்கு டெண்டரைக் கொடுப்பதற்காக, வேற யாருக்கும் டோக்கன் கொடுக்கக்கூடாதுன்னு மாநகராட்சி ஆணையரை மிரட்டுறாங்களாம்''’என்றார் வருத்தமாய். அப்போது, அந்தக் கட்டிடத்தின் பின்வழியாக ஆணையரை அழைத்துக் கொண்டு, தளபதியின் கார் பறக்க, நாம் பின்தொடர்ந்தோம். கார், தளபதி எம்.எல்.ஏ அலுவல கத்திற்குச் சென்றது. உள்ளே யாரையும் விடவில்லை. சிறிது நேரம் கழித்து ஆணையர் மட்டும் ஏலம் நடக்கும் இடத்திற்குச் சென்றார். நிர்வாகக் காரணங்களால் தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப் படுகிறது என்று அறிவித்தார். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர்.
இதுகுறித்து ஏலம் எடுக்கக் காத்திருந்த தி.மு.க. வட்டச் செயலாளர் ஒருவர் நம்மிடம், ”"அமைச்சர் பி.டி.ஆர்.தியாகராசன், ஏலத்தை நியாயமான முறையில் நடத்தும்படி உத்தரவிட்டதால்தான் டெண்டர் எடுக்க முன்வந்தோம். நானும் கட்சிகாரன்தான். எவ்வளவோ முறை பொன்முத்துவிடமும் தளபதியிடமும் கேட்டேன். மூன்று மடங்கு பணம் கேட்கிறார்கள். எல்லா டெண்டரையும் தங்கள் பினாமிகள் மற்றும் சொந்தக்காரர்கள் என்று அவர்களிடம் கணிசமாக வசூலித்துக்கொண்டு அவர்களுக்கே கொடுக்கப் பார்க்கிறார்கள். இப்போது நல்லவேளையாக ஏலத்தை நிறுத்திவிட்டார்கள். ஆட்சி மாறியும் காட்சி மாறலைங்க''’என்றார் வருத்தமாய்.
-அண்ணல்
அகற்றப்பட்ட ஆபத்து!
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் -வம்பன் இடையே பிரதான சாலை ஓரத்தில், திருவரங்குளம் ஊராட்சியின் குடிதண்ணீர் தேவைக்காக 10-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு, தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில், மேலும் தோண்டப்பட்ட 9 ஆழ்குழாய்க் கிணறுகள் மூடப்படாமல், "ஆ'வென வாயைத் திறந்தபடி, ஆபத்தான நிலையில் இருந்ததை நக்கீரன் இணையத்தில் படங்களுடன் செய்தியாக வெளியிட்டி ருந்தோம்.
இதைத் தொடர்ந்து, ஆலங்குடி தீயணைப்பு துறையினர் மற்றும் திருவரங்குளம் ஊராட்சி நிர் வாகத்தினர் இணைந்து அவசர அவசரமாகக் களமிறங்கி, ஆழ்குழாய்க் கிணறுகளை தற்காலிகமாக மூடினர். இதன்மூலம் அங்கே நிகழவிருந்த ஆபத்து அகற்றப்பட்டது. பயன் படுத்தப்படாத இந்த ஆழ்குழாய்க் கிணறுகளை மழைநீர் சேமிப்புத் தொட்டிகளாகப் பயன்படுத்தும் வகையில், அவற்றை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மீண்டும் ஒரு நடுக்காட்டுப்பட்டி சம்பவம் நடக்க, வாய்ப்பு கொடுக்காமல், ஆழ்குழாய்க் கிணறுகள் மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டி, நக்கீரனுக்கு அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களை தெரிவித் தார்கள்.
-பகத்சிங்