விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கியது என்ன?

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போக்கு வரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய ssஉறவினர்களின் வீடு அலுவலகங்களென மொத்தம் 21 இடங்களில் ஜூலை 22-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், கரூர் மாவட்டத்தில் மட்டும் 6 இடங்களிலும், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இச்சோதனையில் 50-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். சோதனை முடிவில், சொத்து விவரங்கள், வங்கி பரிவர்த்தனை கள் மற்றும் கையிருப்பில் இருக்கக்கூடிய தங்க நகைகள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்து அறிக்கை தயாரித்த நிலையில், அவரது பெயரிலும், அவரது மனைவி விஜயலட்சுமி, தம்பி சேகர் ஆகியோரின் பெயரிலும், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இந்த சோதனையில் ரொக்கமாக ரூ.25,56,000, சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இவை குறித்து உரிய விசா ரணை நடத்தி முழுமையான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரி வித்துள்ளது.

-மகேஷ்

அதிகாரி டிரான்ஸ்பரை கொண்டாடிய மக்கள்!

Advertisment

திருச்சி டவுன்ஹால் பத்திரப்பதிவு அலுவலக சார்பதிவாளர் அஞ்சனகுமார், மாநகராட்சி, ஊராட்சி பகுதிகளில் அனுமதியில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்ய, ஒரு சதுர அடிக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் வசூலித் திருக்கிறார். காலை 9 மணிக்கு அலுவல கத்திற்கு வந்து, வருமானம் தரக்கூடிய பத்திரங்களை மட்டு மே சரிபார்த்துவிட்டு ss10 மணிக்குள் 1 லட்சம் ரூபாய் வரை வசூலித்துவிட்டு, அதை தன்னுடைய பணியாளர்களான குமரன் அல்லது ராஜ்குமார்வசம் கொடுத்து பத்திரப்படுத்துவார். மதியத்துக்கு மேல், நிலம் அல்லது வீட்டை நேரில் பார்வையிட கார் வாடகை, குறைந்தபட்ச கமிஷன் தொகை ரூ.3,000 என்று அமோகமாக சம்பாதித் திருக்கிறார். இதன்மூலம் நாளொன்றுக்கு 2 லட்சம் ரூபாய்வரை லஞ்ச மழையில் நனைந்திருக்கிறார். இப்படிச் சம்பாதித்த பணத்தில், இவரது சொந்த ஊரான திருநெல்வேலி மற்றும் திருச்சி விண்நகரிலும் பங்களாக்களுடன் கூடிய சொகுசு கார்கள், நிலம் என்று கணக்கில் அடங்காத அளவிற்கு சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. 9 வங்கிகளில் கணக்கு வைத்திருக்கிறார். திருச்சியில் உள்ள முத்து ஜெராக்ஸ் கடையின் முதலாளி இவருடைய நண்பர் என்பதால், அவருடைய வங்கிக் கணக்கிற்கு பணம் சென்றடைந்துவிடும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஓ.பி.எஸ். பெயரைச் சொல்லிக்கொண்டு இஷ்டம்போல் செயல்பட்ட இவர்மீது கொடுக்கப்பட்ட புகார்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. இந்நிலையில் சமீபத்தில் திருச்சிக்கு வருகைதந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியின் அதிரடி உத்தரவால் அரியலூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு இவர் பணியிடமாற்றம் செய்யப்பட, அதைத்தான் பொதுமக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் பட்டாசு வெடித்துக் கொண்டாடியுள்ளனர்.

-மகி

கொள்ளை போன அடமான நகை!

Advertisment

யூனியன் வங்கி அம்பத்தூர் கிளையில் லெனின் என்பவர் கடந்த 2017 பிப்ரவரி மாதத்தில் நகைக்கடன் பெறுவதற்காக 74.4 ssகிராம் எடை யுள்ள 9 தங்க நகைகளை அடமானம் வைத்து 1,26,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதனை கடந்த மே மாதத்தில் மீட்பதற்காகச் சென்ற போது அவர்கள் கொடுத்த நகையின் எடையில் 4.4 கிராம் எடையுள்ள 2 மோதிரங்கள் மிஸ்ஸிங். அதை மீட்டுத் தரும்படியும் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து லெனினிடம் கேட்டபோது, "இவ்வங்கியில் எனது நகைக்கடன் தொகையைக் கட்டி நகையை மீட்டபோது 2 மோதிரங்களைக் காணவில்லை. வங்கியின் நகை மதிப் பீட்டாளர் இந்த நகைகளைத் திருடிவிட்டு, தவறான தகவல்களைப் பதிவுசெய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, வங்கி மேலாளரிடம் புகாரளித்தபோது, அவர் ஒரு வட இந்தியர் என்பதால் நான் கூறுவதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆங்கிலத்தில் விளக்கினாலும், அந்த தவறை ஏற்கவில்லை. இந்நிலையில் நகை மதிப்பீட்டாளரே எங்களுக்கு போன் செய்து, தனது தவறை ஒப்புக்கொண்டு, நகைகளை வீட்டுக்கே வந்து கொடுத்து மன்னிப்பு கேட்பதாகக் கூறினார். நாங்கள் வங்கியில் வைத்த நகை என்பதால் வங்கியில் வைத்துதான் ஒப்படைக்க வேண்டுமென்று கூறினோம். இதுகுறித்து மேலாளரிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் காவல் நிலையத்தில் புகாரளித்தோம். விசாரணையில், நகை மதிப்பீட்டாளர் தனது குற்றத்தை முதலில் மறுத்தார். அவரது செல்பேசி உரையாடல் ஆடியோவை காவல்துறை வசம் ஒப்படைத்தபின் ஒப்புக்கொண்டார். தற் போது வரை மோதி ரங்களையோ அல்லது ஈடான தொகையையோ கொடுக்கவேயில்லை'' என்றார். பொருளாதார நெருக்கடியில் உள்ள வர்களின் கடைசி நம்பிக்கை பொதுத்துறை வங்கிகள். அங்கேயும் இப்படியா?

-தெ.சு.கவுதமன்