திருமண்டல அரசியல்!
கிறிஸ்தவ அமைப்பான தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் பவர்ஃபுல் பதவியான ’லே செகரட்டரி’ பதவிக்கு, விரைவில் தேர்தல் வரப்போகிறது. இந்த திருமண்டலத்தின் லே செகரட்டரியாக இரண்டாவது முறையாகப் பதவியில் இருப்பவர் எஸ்.டி.கே.ராஜன். ஒருவர், மூன்றாம் முறையாக அந்தப் பதவியிலில் தொடர முடியாது என்ற விதி இருப்பதால், அவர் தன் சார்பில் ஜெபச்சந்திரன் என்பவரை வேட்பாளராகக் களம் இறக்கியிருக்கிறார். எதிரணியில், டி.எஸ்.எப். துரைராஜ், பொன்சீலன், மோகன் உள்ளிட்ட மூவரணி வரிந்துகட்டி வருகிறது. ”இப்போதைக்கு நாங்கள் இணைந்தே செயல்படுகிறோம். தேர்தலுக்கு முன்பாக எங்களில் யார் லே செகரட்டரி வேட்பாளர் என்பதைத் தெரியப்படுத்திவிடுவோம்” என்கிறது இந்த மூவரணி.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனின் ஆதரவில் லே செகரட்டரியாக இருந்த ராஜன் தரப்பினர், இப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் ஆதரவைப் பெற்றவர் ராஜன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். எதிரணியைச் சேர்ந்த மோகன், மறைந்த தி.மு.க. மா.செ. பெரியசா
திருமண்டல அரசியல்!
கிறிஸ்தவ அமைப்பான தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் பவர்ஃபுல் பதவியான ’லே செகரட்டரி’ பதவிக்கு, விரைவில் தேர்தல் வரப்போகிறது. இந்த திருமண்டலத்தின் லே செகரட்டரியாக இரண்டாவது முறையாகப் பதவியில் இருப்பவர் எஸ்.டி.கே.ராஜன். ஒருவர், மூன்றாம் முறையாக அந்தப் பதவியிலில் தொடர முடியாது என்ற விதி இருப்பதால், அவர் தன் சார்பில் ஜெபச்சந்திரன் என்பவரை வேட்பாளராகக் களம் இறக்கியிருக்கிறார். எதிரணியில், டி.எஸ்.எப். துரைராஜ், பொன்சீலன், மோகன் உள்ளிட்ட மூவரணி வரிந்துகட்டி வருகிறது. ”இப்போதைக்கு நாங்கள் இணைந்தே செயல்படுகிறோம். தேர்தலுக்கு முன்பாக எங்களில் யார் லே செகரட்டரி வேட்பாளர் என்பதைத் தெரியப்படுத்திவிடுவோம்” என்கிறது இந்த மூவரணி.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனின் ஆதரவில் லே செகரட்டரியாக இருந்த ராஜன் தரப்பினர், இப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி. கனிமொழி உள்ளிட்ட முக்கிய புள்ளிகளின் ஆதரவைப் பெற்றவர் ராஜன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். எதிரணியைச் சேர்ந்த மோகன், மறைந்த தி.மு.க. மா.செ. பெரியசாமியின் நெருங்கிய உறவினர். இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவரும் கூட. இந்த நிலையில் சிட்டிங் ராஜன் தரப்பால், நாசரேத் மற்றும் தங்கம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த சிலர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாகச் சொல்லி, பாதிக்கப்பட்டவர்கள் பேராயர் இல்லத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக எதிரணிப் பிரமுகர் மோகனிடம் நாம் கேட்டபோது "நாங்கள் தைரியமாகக் களத்தில் இருக்கிறோம். அவர்களோ, எங்களுக்கு அவர் சப்போர்ட் இருக்கிறது.. இவர் சப்போர்ட் இருக்கிறது... என்று கேம் ஆடுகிறார்கள். அவர்களுக்குத் தோல்வி பயம் இப்போதே வந்துவிட்டது''’என்றார் புன்னகையோடு. எஸ்.டி.கே.ராஜனோ, "இது சபைத் தேர்தல். இதில் அரசியலுக்கு இடமில்லை. நாங்கள் எந்தக் கட்சியின் சார்பிலும் நிற்கவில்லை. நாங்கள் இண்டி பென்டண்ட்டாகவே நிற்கிறோம்''’என்றார் அழுத்தமாக. எனினும், திருமண்டல அரசிய லில் சூடு பறக்கிறது.
-பரமசிவன்
ஈ.சி.ஆருக்கு "ராஜராஜன்' பெயர்?
முதல்வர் ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்த சாலைகளில் பிரதானமானது ஈ.சி.ஆர். எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையாகும். அவர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்த போதே, அடிக்கடி இந்த சாலையில் சைக்கிளில் பயணித்து மாமல்லபுரம் வரை சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது வழியில் தேநீர்க் கடைகளில் தேநீர் அருந்தி, ஆச்சரியமூட்டுவார். அதேபோல், முதல்வரான நிலையிலும் ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி ஈ.சி. ஆரில் சைக்கிளிங் சென்றார். அதற்கு முதல் நாள்தான், ராமச் சந்திராவில் மருத்துவப் பரிசோதனையை செய்துகொண்டார் ஸ்டாலின். அந்த நிலையி லும், மறுநாள் அதிகாலையி லேயே மருமகன் சபரீசன் சகிதமாக சைக்கிளிலேயே ஈ.சி.ஆரில் அவர் பயணிக்கத் தொடங்கினார். வழக்கம் போல் தேநீர் கடையில் அமர்ந்தும், வழியில் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டவர் களோடு செல்ஃபிக்கள் எடுத்தும், முதியவர்களிடம் நல விசாரிப்பு களை நிகழ்த்தியும் எல்லோரையும் திகைப்பில் ஆழ்த்தினார். இந்த நிலையில் அவருக்குப் பிடித்தமான கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு மாமன்னன் ’ராஜராஜ சோழன்’ பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார் தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸிலின் தலைவரான சோழ நாச்சியார் ராஜசேகர். அவர் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், இந்திய வரலாற்றில் முதன் முதலாக, கப்பல் படையை நிறுவி, கடல் வாணிகத்தை பெருமளவு அதிகரிக்கச்செய்து, தமிழர்களின் பண்பாட்டை அயல் நாடுகளிலும் நிலை நிறுத்தியவர் பேரரசன் ராஜராஜ சோழன். அவரின் கடல் வணிகப் பங்களிப்பையும் வெற்றியையும் அங்கீகரிக்கும் வகையில், கிழக்கு கடற்கரைச் சாலைக்கு பேரரசன் ராஜராஜ சோழன் பெயரைச் சூட்ட வேண்டும்''’என்று குறிப்பிட்டிருக்கிறார்.
-இளையசெல்வன்
நீக்கப்பட்டவரால் சச்சரவு
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தி.மு.க ஒன்றிய செயலாளராக இருந்த நவல்பட்டு விஜி, திரு வெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பற்றி தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சர்ச்சையான கருத்துகளால் கடந்த ஜனவரி மாதம், தி.மு.க. தலைமை, அவரைக் கட்சியில் இருந்து நீக்கி நட வடிக்கை எடுத்தது.
இதற்கிடையில் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய விஜி, உழைத்த எங்களுக்கு எந்த முன்னுரிமையும் கொடுக்கப்படவில்லை. பெரும் பொறுப்புக்குப் போய்விட்ட மகேஷ், மாநகர செயலாளரையே புறக்கணிக்கிறார். 8 கிளைச் செயலாளர் களை பதவி நீக்கம் செய்துள்ளார். என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து லோக்கல் தி.மு.க.வினரோ, "அன்பில் மகேஷுக்கு எதிராகவும், அ.தி.மு,.க.வுக்காகவும் கடுமையாக விஜி தேர்தலில் வேலை பார்த்தார்''. என்று போட்டு உடைத்தனர். இந்த நிலையில், சமீபத்தில் திருச்சி தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி யின் பிறந்தநாள் கொண்டாடபட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 4-ஆம் தேதி நவல்பட்டு விஜி மத்திய மாவட்ட செயலா ளர் வைரமணியை நேரில் சந்தித்து அவருடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அவர் வைரமணிக்கு கேக் ஊட்டும் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் காட்டுத் தீ போலப் பரவி, தொண்டர்களிடையே கொழுந்துவிட்டு எரிய ஆரம் பித்திருக்கிறது. அதோடு, நவல்பட்டு விஜி தரப்பினரும், வைரமணியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் காரசார மான விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துமீறிய கருத்து மோதல்கள் இரு தரப்பினருக்கும் இடையே நடக்கிறது’என்கிறார்கள் கவலையாய். இது தொடர்பாக, வைரமணியைத் தொடர்பு கொண்ட போது, லைனை எடுக்காத அவர், வேறொரு நண்பர் மூலம் "நான் நவல்பட்டு விஜியை அழைக்கவில்லை, அவராக வந்தார். அரசியல் நாகரீகம் கருதி, அவருக்கு மறுப்பு தெரிவிக்க வில்லை''’என்று தெரிவித்தார். ஆனாலும் சர்ச்சை ஓயவில்லை.
-மகேஷ்