சிக்னல் அகிலாவின் ஜலக்கிரீடை

s

அகிலாவின் ஜலக்கிரீடை

s

யானைக்குட்டியை மகிழ்விக்க கோயில் நிர்வாகம் எடுத்த நடவடிக்கை, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி திருவானைக்கோவிலில் இருக்கும் ஜம்புகேஸ் வரர் கோவில் பகுதியில், நாச்சியார் தோட்டம் என்ற இடம் இருக்கிறது. அங்கு 20 அடி அகலமும், 20 அடி நீளமும், பத்தடி ஆழமும் கொண்ட தொட்டி ஒன்று புதிதாக கட்டப் பட்டது. இது திருவானைக்கோவில் பக்தர்களின் அன்பைப்பெற்ற செல்ல யானைக் குட்டியான, அகிலாவுக்காகவே கோயில் நிர்வாகத்தால் கட்டப்பட்டிருக்கிறது. இந்த நீர் தொட்டியில் யானை முழுமையாக இறங்கி படுத்துக்கொண்டும் அமர்ந்துகொண்டும் விளையாடிவருகிறது. வறுத்தெடுக்கும் கோடை வெய்யிலுக்கு இதமாக, இந்தத் தொட்டியில் இறங்கி, நீண்டநேரம் குதித்துக் கும்மாளம் போடுகிறது அகிலா. யானையின் இந்த ஜலக்கிரீடையை அக்கம்பக்கத்தினர் கோடை வியர்வையோடும், ஏக்கத்தோடும், ஆசை யோடும் பார்த்து ரசித்துவருகிறார்கள்.

-மகேஷ்

ரேஷன் கடைப் போராட்ட

ரேஷன் கடைப் போராட்டம்!

signal

சிதம்பரம் அருகே உள்ள கொத்தங்குடி ஊராட்சி அலுவலகத்தின் பக்கத்தில் பிச்சாவரம் கூட்டுறவு விற்பனை சங்கங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடை உள்ளது. இங்கு 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு, பொருட்கள் வழங்கப் படுகின்றன. வாரத்தில் இரு நாட்கள் மட்டுமே இந்தக் கடையைத் திறந்து, அப்போது இருப்பவர்களுக்கு மட்டும் பொருட்களை வழங்கிவிட்டு, கடை ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு, கிளம்பிவிடுவதால், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான நேரம் மூடப்பட்டுவிடுவதால், கடையைத் திறக்கும் நாட்களில் கூட்டமான கூட்டம் முண்டியடிக்கும். இதனால் முதியவர்கள் படாதபாடு பட்டுவருகின்றனர். இந்த நிலையில் தற்போது பொருட்கள் வழங்கு வதிலும் ஊழியர்கள் தங்கள் ’தில்லாலங்கடி’ வேலைகளைக் காட்டத் தொடங்குவதாக பொதுமக்கள் மத்தியில் குமுறலும் குற்றச் சாட்டும் எழுந்தது.

இதனால், கடந்த 24-ந் தேதி 150-க்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களுமாகத் திரண்டுவந்து ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். "எங்கே அரசின் கொரோனா நிவாரணப் பொருட்கள்?' என்று அவர்கள் கேட்க... அங்கிருந்த ஊழியர், "நிவாரணப் பொருட்கள் இன்னும் இந்தப் பகுதிக்கு வரவில்லை'’என்றனர். இதனால் பொதுமக்கள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏரியாவே களேபரமானது. இதைப் பார்த்து மிரண்டுபோன ஊழியர்கள், ரேஷன்கடையை மூடிவிட்டனர். தகவல் அண்ணாமலை நகர் காவல்நிலையத்துக்குப் போக, காவலர்கள் ஓடிவந்தனர். அவர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தி வரிசைப் படுத்தினர். இதன்பிறகே, கொரோனா நிதி மற்றும் நிலுவையில் இருக்கும் ரேஷன்பொருட்கள் வழங்கப்பட்டது.

போராட்டக் குரல் கொடுத்தவர்கள் நம்மிடம், "700 குடும்ப அட்டைகள் இருந்தாலே அந்த கடையை முழுநேரக் கடையாக செயல்படுத்த வேண்டும். இங்கு 900-த்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளபோதும், இது பகுதி நேர ரேஷன் கடையாக மட்டுமே உள்ளது. எனவே இதனை அனைத்து வேலை நாட்களிலும் திறந்து, பொதுமக்களுக்கு பிரச்சனை இல்லாமல் பொருட்களை வழங்கவேண்டும்'' என்றனர். பிச்சாவரம் கூட்டுறவு சங்க தலைவர் வேணுகோபாலிடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, “"இந்த கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட பகுதிநேர ரேஷன் கடைகளில் 6 விற்பனையாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் மற்ற கடைகளில் உள்ளவர்களைக் கொண்டு கூடுதல் பணிசெய்ய வலியுறுத்தி, ரேஷன் கடைகள் செயல்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் இதனை முழுநேரக் கடையாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுத்துவரப்படுகிறது''’என்கிறார். செய்தால் சரிதான்.

-காளிதாஸ்

முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவர்!

signalதிருச்சி மாவட்டம் துறையூர், கொப்பம் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும், மா.வெ. மகாபதஞ்சலி என்ற 5-ஆம் வகுப்பு மாணவர், முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், தான் படித்து வரும் பள்ளி மாண வர்களுக்கு நடனம், இசை, யோகா, தற்காப்பு பயிற்சி, ஸ்மார்ட் வகுப்பறையுடன் கணினி எழுத்துப் பயிற்சியும் கொடுத்து, அதைத் தனியார் பள்ளிக்கு இணையாகத் தரம் உயர்த்த 2018-2019ல் கிராமசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அது இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது என்று தெரி வித்திருப்பதோடு, அதன் தீர்மான எண்களையும் கோடிட்டிருந்தார். இதன் நகலைக் கல்வி அமைச்சருக்கும் அனுப்பியிருந்தார்.

இந்த வயதில் கிராமசபைக் கூட்டத்திற்குச் சென்ற மாணவன் மகாபதஞ்சலி, அங்கு நிறைவேற்றிய தீர்மானத்தைச் சொல்லி, தற்போது அதைச் செயல்படுத்தக் கோரி கடிதம் எழுதியது பலரையும் வியப்பில் ஆழ்த் தியது.

அதோடு இந்த மாணவர், "அரசுப் பள்ளி நம் பள்ளி! அரசுப் பள்ளியில் பயின்ற ஜனாதிபதியான டாக்டர் அப்துல் கலாம், விஞ்ஞானி சிவம் உள்ளிட்டவர்களும், பல ஆட்சியர், ஆசிரியர், மருத்துவர் என பலரும் பல உயர்ந்த பதவியை அடைந்துள்ளனர்''” என்று தன்னுடைய அரசுப் பள்ளியின் பெருமையையும் பறை சாற்றிப் பதாகை வைத் துள்ளார். அவரது முயற்சியில் இப்போதே அவரது நாளைய உயரம் தெரிகிறது.

-மகேஷ்

nkn300621
இதையும் படியுங்கள்
Subscribe