கலெக்டருக்குக் கிடைத்த கலைஞரின் புதையல்!

signal

கரூர் மாவட் டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த, கலெக்டர் பிரபு சங்கர், குளித் தலைத் தொகுதிக்கு உட்பட்ட வேங் காப்பட்டி பள்ளிக் கும் சென்றார். அங்கு பள்ளியின் பதிவேட்டைப் புரட்டிய அவர், அந்தப் பதிவைப் பார்த்துத் திகைத் துப்போனார். காரணம், 1959 - ஜூன் 20-ல் அந்தப் பள்ளிக்கு அப்போதைய தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கலைஞர், அங்கு ஆய்வு செய்து எழுதியிருந்த குறிப்புதான் அது. அதில் கலைஞர், ’இன்று வேங்காப்பட்டி பள்ளியை பார்வையிட்டேன். இரண்டு ஆசிரியர்களும் இருந்தார்கள். மொத்த மாணவர்கள் 107-ல் இன்று பள்ளிக்கு வருகை தந்திருந்தவர்கள் 71 பேர். இந்தப் பள்ளியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடத்தின் மேல் மரங்கள் விழுந்திருக்கின்றன. அவை உடனடியாக கவனிக்கப்பட்டால் நலம். ஆசிரியர்கள் நன்கு பணியாற்றுவதாக பொதுமக்கள் நன்கு பாராட்டினார்கள். மாணவர்களின் சுகாதாரம் நன்கு கவனிக்கப்படுதல் நன்று”என்று தன் கைப்பட அவர் எழுதியிருந்தார். இதை அப்படியே படம் பிடித்துத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்த கலெக்டர், புதையலைக் கண்டேன் என்று நெகிழ்வாய்க் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கலெக்டர் பிரபு சங்கரிடம் நாம் கேட்டபோது "கலைஞரின் பொறுப்புணர்வான பதிவைக் கண்டு நெகிழ்ந்து போனேன். இது என் வாழ்நாள் முழுக்க எனக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக அமைந்துவிட்டது'' என்றார் பெருமிதம் பொங்க.

-ஜீவா தங்கவேல்

Advertisment

சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்த அமைச்சர்

signal

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த 8-ஆம் தேதி வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட குரும்பப்பட்டிக்கு திடீரென விசிட் அடித்தார். அங்கே தோட்டப் பகுதியில் மின்சார வசதிகூட இல்லாத கூலித்தொழிலாளி செல்வராஜ் என்பவரின் குடிசை வீட்டின்முன், எதிர் பாராதவாறு போய் நின்றார். பதட்டத்தோடு வரவேற்ற செல்வராஜுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து நம்மிடம் நெகிழ்ந்துபோய் பேசிய செல்வராஜ்,“"மூன்று வருடங்களுக்கு முன் எனது மகள் கங்கோதரியின் பூப்பு நீராட்டு நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய எம்.எல்.ஏ. சக்கரபாணி, இரண்டு பெண் பிள்ளை களை வைத்துக் கொண்டு இந்த ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த வீட்டில் நாங்கள் வாழ்வதைக் கண்டு கண்கலங்கினார். அப்போது வீட்டுமனைப் பட்டா கிடைக்க உதவ வேண்டும் என்று அவரிடம் மனுகொடுத்தேன். அதை வாங்கிக்கொண்ட அவர், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உங்களுக்கு உதவுவேன் என்று அப்போது சொல்லிவிட்டுச் சென்றார். சொன்ன மாதிரி பட்டாவைக் கொடுத்ததோடு, வீடுகட்டவும் பேருதவி செய்திருக்கிறார். நாங்கள், நடப்பது கனவா? நனவா? என்று தெரியாமல் மகிழ்ந்து கைக்கூப்பி நின்றோம்''’என்றார் உணர்ச்சிப் பெருக்கோடு. இதுபற்றி அமைச்சர் சக்கரபாணியிடம் நாம் கேட்டபோது...’"செல்வராஜ் பட்டா கேட்டு ஏற்கனவே அரசுக்கு அனுப்பியிருந்த மனுவை, கலெக்டர் விசாகனுக்கு அனுப்பி வைத்தேன். அதனடிப்படையில், கலெக்டரும் அதிகாரிகளும் அசுர வேகத்தில் செயல்பட்டு, குரும்பப்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தைக் கண்டுபிடித்து, அதற்கான பட்டாவையும் வீடு கட்டுவதற்கான ஆணையையும் ஐந்து மணி நேரத்தில் தயார் செய்து கொடுத்தனர். அதை செல்வராஜிடம் கொடுத்தேன்''’என்றார் உற்சாகமாக.

Advertisment

- சக்தி

மாஜிகளுக்கு மரியாதை

signal

அண்மையில் புதுக்கோட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் புதுக்கோட்டை முத்துராஜா, கந்தர்வகோட்டை சின்னத்துரை, அறந்தாங்கி ராமச்சந்திரன், விராலிமலை விஜயபாஸ்கர் என கட்சிப் பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. மாஜி மந்திரியான விஜயபாஸ்கர் ஆய்வுக் கூட்டம் தொடங்கிய பிறகு, தன் ஆதரவாளர்களுடன் உள்ளே நுழைந்தார். அவரைக் கண்டதும் துறை இயக்குநர் எழுந்து, தன் இருக்கையைக் கொடுத்தார். ஒரு வழியாகக் கூட்டம் முடிந்ததும், அவரை மொய்த்துக்கொண்ட அதிகாரிகள், அவரிடம் நலம் விசாரித்து, நட்பைப் புதுப்பித்துக் கொண்டனர். ஆய்வுக் கூட்டத்தில் கட்சிக்காரங்களுக்கு அனுமதி இல்லை என்பதால், வந்த தி.மு.க.வினரை வெளியேற்றினர். ஆனால், விஜயபாஸ்கருடன் வந்த அ.தி.மு.க.வினர் மட்டும் வெளியேற்றப்படாமல் இறுதிவரை கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். கூட்டம் முடிந்து வெளியே வந்த விஜயபாஸ்கர், "எதிர்கட்சிகளின் ஆலோசனைகளையும் தி.மு.க. தரப்பு ஏற்றுக் கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது''’என்றார் புன்னகையோடு.. வெளியில் காத்திருந்த தி.மு.க. தொண்டர்களோ, நடக்குறது நம்ம ஆட்சி தானாங்கிற சந்தேகம் வருது. ஊழல் சக்திகளுக்கு மகுடம் சூட்டலாமா?” என்று புலம்பினர்.

-இரா.பகத்சிங்