அமைச்சர் விசிட் களேபரம்!
வடசென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை, மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 10-ந் தேதி காலை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சகிதம் பார்வையிட வந்தார். அப்போது ஏரியா மீனவர்கள் திரளாக வந்து தங்கள் குறைகளை அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கே திருவொற்றியூர் தி.மு.க. எம்.எம்.ஏ.வான கே.பி.பி.சங்கர், தன் ஆதரவாளர்கள் புடைசூழ பரபரப்பாக வந்தார். அவர்களில் ஒருவர் அமைச்சர்கள் மீது விழாத குறையாக நெருக்கியடித்து நகர, அவரை அமைச்சர் சேகர்பாபுவின் பாதுகாவலர், ’கொஞ்சம் தள்ளி நில்லுப்பா’ என நகர்த்தினார். இதைப் பார்த்து டென்ஷனான எம்.எல்.ஏ. சங்கர், கோபத்துடன் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்த இடமே களேபரமானது. மீன் வளத்துறை அமைச்சரை அழைத்து வந்த சேகர்பாபு இதனை எதிர்பார்க்கவில்லை. அனிதா ராதாகிருஷ்ணனோ, ’ சங்கரை சமாதானப்படுத்தினார். ஏன் சங்கருக்கு இவ்வளவு கோபம் என்று அங்கிருந்த ஏரியாவாசிகளிடம் க
அமைச்சர் விசிட் களேபரம்!
வடசென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தை, மீன்வளத்துறை அமைச்சரான அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த 10-ந் தேதி காலை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சகிதம் பார்வையிட வந்தார். அப்போது ஏரியா மீனவர்கள் திரளாக வந்து தங்கள் குறைகளை அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கே திருவொற்றியூர் தி.மு.க. எம்.எம்.ஏ.வான கே.பி.பி.சங்கர், தன் ஆதரவாளர்கள் புடைசூழ பரபரப்பாக வந்தார். அவர்களில் ஒருவர் அமைச்சர்கள் மீது விழாத குறையாக நெருக்கியடித்து நகர, அவரை அமைச்சர் சேகர்பாபுவின் பாதுகாவலர், ’கொஞ்சம் தள்ளி நில்லுப்பா’ என நகர்த்தினார். இதைப் பார்த்து டென்ஷனான எம்.எல்.ஏ. சங்கர், கோபத்துடன் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அந்த இடமே களேபரமானது. மீன் வளத்துறை அமைச்சரை அழைத்து வந்த சேகர்பாபு இதனை எதிர்பார்க்கவில்லை. அனிதா ராதாகிருஷ்ணனோ, ’ சங்கரை சமாதானப்படுத்தினார். ஏன் சங்கருக்கு இவ்வளவு கோபம் என்று அங்கிருந்த ஏரியாவாசிகளிடம் கேட்டபோது, "சேகர்பாபு அ.தி.மு.க. மா.செ.வா இருந்தப்ப இந்த ரெண்டுபேருக்கும் இடையில் ஏற்பட்ட உரசல், அது இன்னும் குறையாம இருக்கு''’என்றார்கள் புன்னகைத்தபடியே.
-பிரகாஷ்
ஜூனியர் -சீனியர் மோதல்!
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தி.மு.கவின் ஜூனியர்களை சீனியர்கள் ஓரங்கட்ட முயல்வதாகக் குமுறல் எழுந்துள்ளது. ”கட்சி எந்தப் போராட்டத்தை எப்போது நடத்தினாலும், அப்போதெல்லாம் உடன் பிறப்புகளுக்காக நீதிமன்றப் படிகளில் நாங்களும் ஏறி இறங்குகிறோம். அப்படிப்பட்ட நாங்கள், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் 13 நீதிமன்றங்களில், அரசு வழக்கறிஞர் பதவியைக் கேட்டால், ஏற்கனவே அரசு ப்ளீடராய் இருந்த சீனியர் வழக்கறிஞர்களோ, அவர்கள் கைகாட்டுபவர்களுக்கேதான் பதவி தருகிறார்கள். கடந்த 2006- 2011 தி.மு.க. ஆட்சியில் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞராக அருண் மொழியும், மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞராக கே.எம். தண்டபாணியும் இருந்தனர். அதன் பிறகு இப்போதுதான் லைம்லைட்டுக்கு வருகிறார்கள். இருவரும் அரசு ப்ளீடராகணும்னு மா.செ.க்களின் வீட்டை முற்றுகையிட்டிருக்கின்றனர். அதேபோல், பொள்ளாச்சியில் மட்டும் 41 தி.மு.க. வழக்கறிஞர்கள் இருக்கின்றனர். மா.செ.வோ, வக்கீல் மருதராஜூக்கு அரசு ப்ளீடர் போஸ்டிங்கை சிபாரிசு செய்கிறார். "ஒரு தரப்பினரே ஆதிக்கம் செலுத்துவது சரியா?'’ என்கிறார்கள் ஆதங்கமாய்.
-அ.அருள்குமார்
தொற்றுக்கு மத்தியில் கண் பரிசோதனையா?
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அண்மையில் ‘கண்ணொளி காப்போம்’ திட்டம் தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில், ’ஒவ்வொரு ஆண்டும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருக்கும் மாணவ, மாணவியர்களுக்கு கண் பரிசோதனை செய்து, தேவையானவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்படும். இந்த கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், "ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள அங்கன்வாடிக்கு, அக்கிராமத்திலுள்ள மாணவ-மாணவிகளை வரவழைத்து, அவர்களுக்கு கண் பரிசோதனைகள் நடத்தப்படும்'’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கொரோனா 3 ஆவது அலையில், 18 வயதுக்குக் குறைவாக உள்ள சிறுவர்கள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கும் சூழலில், எப்படி மாணவ-மாணவியரை அங்கன்வாடியில் கூடச்செய்து, கண் பரிசோதனைகளை நடத்துவது? இதனால் தொற்று பரவினால் என்ன செய்வது? என்று அச்சம் பரவலாக இருக்கிறது. இதனால் "இதுகுறித்து அரசு ஆலோசிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்து வருகிறது.
-தெ.சு.கவுதமன்
பின்னணியில் உள்ள அரசியல் புள்ளிகள்
கடந்த மார்ச் 23-ஆம் தேதி, வாக்காளர்களுக்காகக் கொண்டுசெல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் கரன்ஸியை, தேர்தல் அதிகாரிகள் பேட்டைவாய்த்தலை அருகே மடக்கிப் பிடித்தனர். முசிறி உள்ளிட்ட தொகுதிகளில் வாரி இறைப்பதற்காக மூன்று மூட்டைகளில் கொண்டு செல்லப்பட்ட அப்போதைய ஆளும் கட்சிப் புள்ளிகளின் 10 கோடி ரூபாயில், ஒரு கோடி ரூபாய் இருந்த ஒரே ஒரு கரன்ஸி மூட்டை மட்டுமே தேர்தல் அதிகாரிகள் மூலம் பறிமுதல் செய்யப்பட்டது என்பதை அப்போதே நக்கீரன் மூலம் நாம் பகிரங்கப்படுத்தி இருந்தோம்.
இது தொடர்பாக திருச்சி கீழ சிந்தாமணி நாகராஜன், ஜீவா நகர் ராஜா (எ) ராஜேந்திரன், தெப்பக்குளத் தெரு திலீப்குமார் (எ) லட்சுமி நாராயணன், ராஜ்குமார் , சிவா (எ) குணசேகரன், பிரகாஷ், ராயர்தோப்பு சுரேஷ், கொள்ளிடக்கரை மணிகண்டன் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட சாமி ரவி, மட்டும் பிடிபடாமல் இருந்த நிலையில்... ராம்ஜி நகர் காவல்நிலைய ஆய் வாளர் மாதையன், தற் போது அருப்புக்கோட்டை யில் பதுங்கியிருந்த சாமி ரவியை மடக்கிப் பிடித்திருக்கிறார். அப்போது பிடிபட்ட 1 கோடி ரூபாய் போக, மீதத்தொகை எங்கே என்ற தகவல் ரவியிடம் நடத்தப்படும் விசாரணையில் தெரியவரலாம். கரன்ஸி கடத்தலின் பாஸை பிடித்துவிட்ட உற்சாகத்தில் இருக்கிறது காவல் துறை. இனி, கரன்ஸி கடத்தலின் பின்னணியில் உள்ள அரசியல் புள்ளிகளும் பிடிபடுவார்கள் என்கிறது காவல்துறை.
-மகேஷ்