சிக்னல் அதிகாரிகளின் அடாவடி!

s

அதிகாரிகளின் அடாவடி!

signal

ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வழியில், நடுவட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட டெரஸ் எஸ்டேட் செல்லும் பாதையில் தலித் மக்களுக்கான 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கியிருக்கிறது அரசு. அதிலேயே மக்கள் போய்வர பொதுப்பாதையும் விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிலர், தங்கள் நிலத்தின் பட்டாவை அடகு வைத்து விவசாயம் செய்யப் போக, வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் நிலத்தை அவர்களிடமே பறிகொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த இடத்தைக் கூட்டுப் பட்டா என்ற பெயரில், தாசில்தார் உதவியோடு ஒரு கும்பல் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது. இதே பாணியில், மீதமுள்ள மக்களையும் அங்கிருந்து விரட்டி அடித்துவிட்டு மிச்ச நிலத்தையும் அபகரிக்கும் திட்டத்தில் இறங்கியது. வனத்துறை-போக்குவரத்து என பல தரப்பினரையும் தங்களுக்கு சாதகமாக்கி, தலித் மக்களை மிரட்டத் தொடங்கினர். அவர்கள் நிலத்தில் இருந்த பம்புசெட்டுகளையும் உடைத்துத் துவம்சம் செய்தனர். இது தொ

அதிகாரிகளின் அடாவடி!

signal

ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் வழியில், நடுவட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட டெரஸ் எஸ்டேட் செல்லும் பாதையில் தலித் மக்களுக்கான 350-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கியிருக்கிறது அரசு. அதிலேயே மக்கள் போய்வர பொதுப்பாதையும் விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிலர், தங்கள் நிலத்தின் பட்டாவை அடகு வைத்து விவசாயம் செய்யப் போக, வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் நிலத்தை அவர்களிடமே பறிகொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். அந்த இடத்தைக் கூட்டுப் பட்டா என்ற பெயரில், தாசில்தார் உதவியோடு ஒரு கும்பல் தங்கள் பெயருக்கு மாற்றிக்கொண்டது. இதே பாணியில், மீதமுள்ள மக்களையும் அங்கிருந்து விரட்டி அடித்துவிட்டு மிச்ச நிலத்தையும் அபகரிக்கும் திட்டத்தில் இறங்கியது. வனத்துறை-போக்குவரத்து என பல தரப்பினரையும் தங்களுக்கு சாதகமாக்கி, தலித் மக்களை மிரட்டத் தொடங்கினர். அவர்கள் நிலத்தில் இருந்த பம்புசெட்டுகளையும் உடைத்துத் துவம்சம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும், போராட்டங்கள் செய்தும், எந்த பயனும் இல்லையாம்.

இதுபற்றி உதகை விவசாய சங்க செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், "தாசில்தார் உள்ளிட்ட வருவாய்த் துறையினரும், வனத்துறையினரும் கூட்டுக் களவாணி களாக செயல்படுகிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில்தான் இப்படி ஒரு நிலை என்றால், இப்போதும் அதே அராஜகத்தைச் செய்கிறார்கள். இதுகுறித்து தாசில்தார் குப்புராஜிடம் நாங்கள் நியாயம் கேட்டபோது, "நான் கொரோனா பணியில் இருக்கிறேன். என்னால் பேச முடியாது' என தொடர்பைத் துண்டித்துவிட்டார். மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் இந்த விவகாரத்தை நாங்கள் கொண்டு போனபோது, "இது தொடர்பாக எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. இனி விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்' என்று சொன்னார். இதுவரை எதுவும் நடக்கவில்லை''’என்றார் கலக்கமாய்.

-அருள்குமார்

மோடியிடம் எகிறிய கெஜ்ரிவால்

வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகிக் கும் டெல்லி அரசின் திட்டத்துக்கு ஒன்றிய அரசு, அங்குள்ள துணைநிலை ஆளுநர் அனில்பைசல் மூலம் முட்டுக்கட்டை போட்டது. ஐந்துமுறை அனுமதி கேட்டும், ’ம்ஹூம்... முடியாது’ என்று சொல்லி விட்டார் டெல்லியின் குறிப்பறிந்த துணைநிலை ஆளுநர். இதனால் பொங்கியெழுந்த கெஜ்ரிவால், ஒன்றிய அரசுக்கு எதிராக வரிந்துகட்டியபடி....

ss

"பிரதமர் மோடி அவர்களே, கொரோனா நேரத்தில் பீட்சாவை வீடுகளுக்கு டெலிவரி செய்துவருகிறபோது, ரேஷனை ஏன் வீடுதேடிச் சென்று கொடுக்கக்கூடாது? இன்று நான் மிகவும் மனமுடைந்து இருக்கிறேன். மக்களின் வீடுதேடிச் சென்று ரேசன் விநியோகம் செய்ய, எல்லா ஏற்பாடுகளும் நடந்தநிலையில்... ஐந்துமுறை உங்க ளிடம் அனுமதி கேட்டும், அதைத் தடுத்துவிட்டீர்கள். 72 லட்சம் பேர் பயனடையும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டீர்கள். தொடர்ந்து உங்கள் ஒன்றிய அரசு, மேற்குவங்க முதல்வர் மம்தாவோடு மோதுவதோடு, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஜார்கண்ட் மாநில அரசுகளிடமும், விவசாயிகளிட மும், லட்சத்தீவு மக்களிடமும் மோதிக்கொண்டே இருக்கிறது. ரேஷன் மாஃபியாக்களுக்கு ஆதரவாக நீங்களே இருந்தால், மக்களுக்கு ஆதரவாக யார் இருப்பார்கள்?''’என்றெல்லாம் அவரைக் கடுமையாகத் தெறிக்கவிட்டிருக்கிறார்.

-க.சுப்பிரமணியன்

உதவும் கரங்கள்!

ss

ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகை யாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடந்த 9 -ந் தேதி நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி எளிமையாக நடந்தது. சங்கத் தலைவர் ரமேஷ் முன்னிலை வகிக்க, சங்கத்தின் செயலாளரும் நக்கீரன் இதழின் முதன்மை செய்தியாளருமான ஜீவாதங்கவேல் தலைமை வகித்தார். சக்தி மசாலா நிறுவனம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ கொண்ட அரிசி மூட்டையையும் மசாலா பொருட்களையும் இந்த நிகழ்ச்சியில் வழங்கினர். மேலும் சிலரின் முயற்சியால் பருப்பு, புளி, கோதுமை உள்ளிட்ட 19 வகையான உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளரான எஸ்.பி. டாக்டர் சசிமோகன், "தவறுகளை சுட்டிக் காட்டுவ தோடு, நடக்கும் நல்ல செயல்களையும் வெளியிட்டு பத்திரிகைகள் ஊக்குவிக்க வேண்டும்''’என்று கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஈரோடு, சத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், அந்தியூர், பவானி, பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர், சிவகிரி, கொடுமுடி, மொடக்குறிச்சி என மாவட்டம் முழுக்க இருந்து 200-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் நேரில் வந்து நிவாரண பொருட்களை பெற்றுச் சென்றனர். இப்படி முன்னுதாரணமாகச் செயல் படும் மாவட்ட பத்திரிகை யாளர்கள் நலச் சங்கத்தின் சிறப்பான செயல்களைப் பாராட்டுவதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தனது வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார். சங்கத்தின் பொருளாளர் ரவிச்சந்திரன், உதவிப் பொருட்கள் வழங்கிய அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல் பத்திரிகையாளர் நலச் சங்கம் வைத்த கோரிக்கை யின் அடிப்படையில் கடந்த 7-ந் தேதி, மாவட்ட அமைச் சர் சு.முத்துச்சாமியும், பத்திரிகையாளர்களுக்கும் தலா 25 கிலோ அரிசியை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

-ஜீவாதங்கவேல்

nkn160621
இதையும் படியுங்கள்
Subscribe