சிக்னல் அமைச்சர்களை வட்டமிடும் காக்கைகள்!

signal

அமைச்சர்களை வட்டமிடும் காக்கைகள்!

கடந்த ஆட்சியில் இருந்து இன்றுவரை பணியில் இருக்கும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளும், ஏதேனும் லாபம் கிடைக் காதா என்ற ஆசையில், இப்போதைய ஆட்சி யாளர்களையும் கொரோனா துரத்துவது போல், துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கே.என். நேரு, எங்கு சென்றாலும், அவரை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், காக்கைகளைப் போல் வட்டமடிக்கின்றனர். சரியான சந்தர்ப்பத்தில் அமைச்சரைப் பார்த்து விரைப்பாக ஒரு சல்யூட் டையும் வைத்துவிட்டு, குழைவாகச் சிரிக்கிறார் கள். அதற்குக் காரணம், திருச்சியில் பணியாற்றிய பெரும்பாலான காவல்துறை உயரதிகாரிகள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அங்கேயே வீடு, வசதி, தொழில் முதலீடுகள் என்று பெரிய அளவில் செட்டில் ஆகிவிட்டனர். அதனால் தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் திருச்சி பகுதிக்கு வந்தால், எல்லாவற்றுக்கும் ஒத்தாசையாக இருக்கும் என்று கணக்குப் போட்டு அவர்களை

அமைச்சர்களை வட்டமிடும் காக்கைகள்!

கடந்த ஆட்சியில் இருந்து இன்றுவரை பணியில் இருக்கும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளும், ஏதேனும் லாபம் கிடைக் காதா என்ற ஆசையில், இப்போதைய ஆட்சி யாளர்களையும் கொரோனா துரத்துவது போல், துரத்திக்கொண்டே இருக்கிறார்கள். உதாரணத்துக்குச் சொல்வதென்றால், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான கே.என். நேரு, எங்கு சென்றாலும், அவரை காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், காக்கைகளைப் போல் வட்டமடிக்கின்றனர். சரியான சந்தர்ப்பத்தில் அமைச்சரைப் பார்த்து விரைப்பாக ஒரு சல்யூட் டையும் வைத்துவிட்டு, குழைவாகச் சிரிக்கிறார் கள். அதற்குக் காரணம், திருச்சியில் பணியாற்றிய பெரும்பாலான காவல்துறை உயரதிகாரிகள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அங்கேயே வீடு, வசதி, தொழில் முதலீடுகள் என்று பெரிய அளவில் செட்டில் ஆகிவிட்டனர். அதனால் தங்களுக்கு சாதகமான அதிகாரிகள் திருச்சி பகுதிக்கு வந்தால், எல்லாவற்றுக்கும் ஒத்தாசையாக இருக்கும் என்று கணக்குப் போட்டு அவர்களை, அதிகாரப் புள்ளிகள் மூலம் திருச்சியில் இறக்குமதி செய்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த வகையில் ஓய்வுபெற்ற நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் அதிகாரி ஒருவர், திருச்சியில் செட்டிலான நிலையில், தற்போது அமைச்சரை சந்தித்து புதிய நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக தனக்குத் தோதான அதி காரியை நியமிக்கும்படி கேட்டுக்கொண்டிருக் கிறார். அதேபோல் இன்னொரு காவல்துறை ஆய்வாளர் ஒருவர், ஸ்ரீரங்கத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி வளர்மதியை பிடித்து, வருமானம் தரும் ஸ்ரீரங்கம் பகுதியைக் கேட்டு வாங்கிக்கொண்டு போயிருக்கிறார். அதேபோல் அவரே, தற்போது முன்னாள் துணை மேயர் மூலம் அமைச்சர் கே.என். நேருவை அணுகி, கோட்டை சரகத்தைப் பிடிக்க முயற்சிப்பதாகவும், ஒரு தகவல் பெட்ரோல் வாகனத்தில் ஏறாமலேயே வலம்வருகிறது.

-மகேஷ்

குட்டையைக் குழப்பும் மாஜி

s

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இங்கு நகராட்சி மூலம் 9 பேரும், மகளிர் சுய உதவிக்குழுவினர் 9 பேரும் என மொத்தம் 18 பேர் பணி யாற்றிவந்தனர். அவர்களில் வெற்றிச் செல்வி, தமிழ்செல்வி, கமலா ஆகிய 3 பேரும் எந்தவித புகாரும் இல்லாமல் கடந்த 26 ஆம் தேதி திடீரென பணி நீக்கம் செய்யப் பட்டிருக்கிறார்கள். அதிர்ச்சியான அவர்கள், "நாங்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்பதால் பணி நீக்கம் செய் துள்ளனர். நாங்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் தான் பணியாற்றி னோம். எங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும்... இல்லையெனில் இங்கேயே தீக்குளிப்போம்'' என்றனர். திரண்டுவந்த அ.தி.மு.க.வினர், தாசில்தார் ரமாதேவியை முற்றுகையிட்டு, "மூன்று பேருக்கும் உடனடியாக வேலை கொடுக்க வேண்டும்' என மனு கொடுத்தனர். இந்த நிலையில் மாஜி மந்திரி ஓ.எஸ். மணியன், ஒருபடி மேலே சென்று, அம்மா உணவகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மூன்று பெண்களுக்கும் மீண்டும் பணி வழங்காவிட்டால் வரும் 31-ஆம் தேதி நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து, வேதாரண்யம் நகராட்சி ஆணையர் மகேஸ்வரியிடம் நாம் விசாரித்த போது, "அம்மா உணவகம், மகளிர் சுயஉதவிக் குழு மூலம் நடத்தப்படுகிறது. அவர் களை நகராட்சி நிர்வாகம் பணிநீக்கம் செய்யவில்லை. பணி நீக்கம் குறித்து எங்களுக்கு எவ்விதப் புகாரும் வரவில்லை. இது தொடர் பாக இனி மேல்தான் விசாரிக்க வேண்டும்'' என்றார். ஏரியாவை சேர்ந்த தி.மு.க.வினரோ, "’இது மகளிர் குழுவுக்குள் நடக்கும் பிரச்சினை. அவர்களுக்குள் பேசி முடித்துக்கொள்வார்கள். இதில் அரசியல் ஆதாயத்துக்காக குட்டையைக் குழப்பப் பார்க்கிறார் ஓ.எஸ்.மணியன்''’ என்கிறார்கள் அழுத்தமாய்.

-செல்வகுமார்

உயிர் காக்கும் சேவையில் ஒரு ஜூவல்லரி!

s

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர்ப் பலிகள் அதிகமாகின்றன. அண்மையில் தொற் றுக்கு ஆளான திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது ஆக்சிஜன் மாஸ்க்கை எடுத்து வேறொரு நோயாளிக்கு அங்குள்ள வர்கள் பொருத்திவிட்டனர். இதனால் திடீர் மூச்சுத்திணறலுக்கு ஆளாகி ராஜா இறந்துவிட்டதாக அவர் குடும்பத்தினர் கதறியது வைரலானது. இந்த நிலையில், நிலைமையை உணர்ந்த தன்னார்வலர்கள் தங்கள் சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி மருத்துவ மனைக்கு அர்ப்பணித்து வருகின்றனர். விருத்தாசலம் ஜெயின் ஜுவல்லரி சார்பில் 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 5 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் கடந்த 16-ஆம் தேதி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இவற்றை, ஜுவல்லரியின் உரிமையாளர்களான அகர்சந்த், சுரேஷ்சந்த், ரமேஷ்சந்த், தீபக்சந்த், அரிஹந்த் ஆகியோர், தொழிலாளர் நலத்துறை அமைச்சரான சி.வெ.கணேசன் தலைமையில், விருத்தாசலம் எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் மருத்துவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள். மே 27-ஆம் தேதியும் மேற்கொண்டு 1.50 லட்சம் மதிப்பிலான நவீன ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் அவர்கள் வழங்கினர். ஜுவல்லரி உரிமையாளர்களில் ஒருவரான அகர்சந்த் “"உயிருக்கு ஆபத்தான காலகட்டத்தில் இயன்ற உதவி செய்வதை கடமையாக கருதுகிறோம். அதேசமயம் நம்மையும் கொரோனா அண்டாமல், பிறருக்கும் பரப்பாமல் அனைவரும் பார்த்து கொள்வது மிகவும் முக்கியம்''’ என்றார் ஆக்சிஜன் சொற்களால்.

-சுந்தரபாண்டியன்

nkn010621
இதையும் படியுங்கள்
Subscribe