சிக்னல் அசைவ அவஸ்தை!

s

அசைவ அவஸ்தை!

signal

பசிக்குச் சாப்பிடுவதற்குப் பதில் ருசிக்குச் சாப்பிடுகிற பழக்கத்தால்தான் நோய்களை நாம் தேடிப் பிடிக்கிறோம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதையெல்லாம் நாம் கேட்டாலும் நம் நாக்கு கேட்கவா செய்கிறது? நாக்குக்கு ஆப்பு வைக்கும் வகையில், ஊரடங்குக் கட்டுப்பாடுகள் என்று, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கும் தடா போட்டிருக்கிறது அரசு. இருந்தும் இதைப் பற்றி அருப்புக்கோட்டைவாசிகள் கவலைப்படுவதாக இல்லை. சிக்கன், மட்டன், மீன் வியாபாரிகளும் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை. அங்கே சின்னச் சின்ன சந்து பொந்துகளிலும்கூட, இறைச்சி விற்பனை கன ஜோராக நடந்துவருகிறது. கடையைத் திறக்க யோசிப்பவர்கள் கூட, டோர் டெலிவரியாக மட்டன், சிக்கனை சப்ளை செய்து உணவுப் பிரியர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி நாம் அருப்புக்கோட்டை நகராட்சியின் பொறுப்பு ஆணையாளரான சாகுல் ஹமீதுவிடம் கேட்டபோது, "ஞாயிற்றுக் கிழமைன்னா... இந்த ஊருல திருவிழாவுக்

அசைவ அவஸ்தை!

signal

பசிக்குச் சாப்பிடுவதற்குப் பதில் ருசிக்குச் சாப்பிடுகிற பழக்கத்தால்தான் நோய்களை நாம் தேடிப் பிடிக்கிறோம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதையெல்லாம் நாம் கேட்டாலும் நம் நாக்கு கேட்கவா செய்கிறது? நாக்குக்கு ஆப்பு வைக்கும் வகையில், ஊரடங்குக் கட்டுப்பாடுகள் என்று, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கும் தடா போட்டிருக்கிறது அரசு. இருந்தும் இதைப் பற்றி அருப்புக்கோட்டைவாசிகள் கவலைப்படுவதாக இல்லை. சிக்கன், மட்டன், மீன் வியாபாரிகளும் இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை. அங்கே சின்னச் சின்ன சந்து பொந்துகளிலும்கூட, இறைச்சி விற்பனை கன ஜோராக நடந்துவருகிறது. கடையைத் திறக்க யோசிப்பவர்கள் கூட, டோர் டெலிவரியாக மட்டன், சிக்கனை சப்ளை செய்து உணவுப் பிரியர்களை உற்சாகப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இதுபற்றி நாம் அருப்புக்கோட்டை நகராட்சியின் பொறுப்பு ஆணையாளரான சாகுல் ஹமீதுவிடம் கேட்டபோது, "ஞாயிற்றுக் கிழமைன்னா... இந்த ஊருல திருவிழாவுக்கு போற மாதிரி மக்கள், கூட்டம் கூட்டமா கறி, மீன் வாங்க வர்றாங்க. ஃபுல் லாக்டவுன்னு தெரிஞ்சும் இப்படி நடந்துக்கிறாங்க. சட்டம் போட்டு மட்டும் பிரயோஜனம் இல்லை. மக்கள்தான் மாறணும். அவங்க தங்கள் நாக்கு ருசியைக் கட்டுப்படுத்தணும்''’ என்றார் கவலையாக. தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே கதைதான்.

-ராம்கி

விறுவிறு அமைச்சர்கள்!

s

கொரோனாவைத் தடுக்கும் பணியில், முதல்வர் ஸ்டாலினும், அவரது அமைச்சரவை சகாக்களும், பதவியேற்றதில் இருந்து களத்தில் இறங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், பத்திரிகையாளர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த வேகத்திலேயே, மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முத்துசாமி. கூட்டம் முடிந்த தும் அவரைச் சந்தித்தோம். அப்போது அவர்...’"ஈரோடு அரசு மருத்துவ மனையிலும், பெருந்துறையிலும் இருக்கும் ஆக்சிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்திவருகிறோம். பெருந்துறையில் மேலும் 600 ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. இதன் எண்ணிக்கை மேலும் உயரும். இதுதவிர பள்ளி, கல்லூரிகளில் கொரோனா சிகிச்சைக்கான 3,500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அந்தியூர், சத்தியமங்கலம், கோபி, பவானி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் இந்த வசதிகளைச் செய்துவருகிறோம்''’என்றெல்லாம் புள்ளிவிபரங்களை அடுக்கினார். அமைச்சர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்கத் திணறுகிறார்கள் அதிகாரிகள்.

-ஜீவாதங்கவேல்

பிரியாணிக் கடையை விழுங்கும் அடாவடிப் பேர்வழி!

signal

சென்னையின் பல இடங்களிலும் அப்துல் ரஹீம் என்பவர் ’ஏ.ஆர். ரஹ்மான் பிரியாணி’ என்ற பெயரில் பிரியாணிக் கடைகளை நடத்தி வருகிறார் . இவர் சென்னையில் உள்ள பிரியாணி கடை உரிமையாளர்களுக்கு, கடன் கொடுத்துவிட்டு, கடனைத் திரும்பச் செலுத்த முடியாதபோது அவர்களின் கடைகளை அடியாட்களை வைத்துப் பறித்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். இதே டெக்னிக்கில் வெஸ்ட் மாம்பலம், ரெட்ஹில்ஸ், தேனாம்பேட்டை, ராயபுரம், மயிலாப்பூர் என சென்னையின் பல பகுதிகளிலும் கடைகளை இவர் அபகரித்ததாகச் சொல்லப் படுகிறது. அதே பாணியைப் பின்பற்றி, சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ் சாலையில் உள்ள சுலைமான் என்பவருக்குச் சொந்தமான பிஸ்மி என்ற பெயரிலான இரண்டு கடைகளையும், 2 லட்ச ரூபாய் கடன் கொடுத்ததன் மூலம் பறித்துக்கொண்டா ராம். அந்தக் கடையின் பெயர்களை மாற்றி விடவேண்டும் என்று, சுலைமான் நீதிமன்றத் தில் தீர்ப்பு வாங்கிவந்த நிலையிலும், அப்துல் ரஹீம், பிஸ்மி என்ற பெயரிலேயே நடத்தி வர, அதை சுலைமான் தட்டிக் கேட்டிருக்கிறார். இதில் இரு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட, அப்துல் ரஹீம், தன் நண்பரான அமீருடன் சேர்ந்து சுலைமானையும் அவர் நண்பர் அப்ரோஸையும் இரும்பு ராடால் தாக்கியதோடு, அவர்கள் வைத்திருந்த காரையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இந்த அடிதடிக் காட்சிகள் சுலைமான் கடையருகே இருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருக் கிறது. இந்த நிலையில், தாக்கப்பட்ட சுலைமான் நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேசனுக்கு செல்ல, அவர் கூடவே ஸ்டேஷனுக்கு தெனாவெட்டாகச் சென்ற அப்துல் ரஹீம்,’ ஏ.சி.முத்துவேல்பாண்டி என் ஆள். அவரை வைத்து உன்மேல் வழக்குப் போடவைக்கிறேன்’என்றபடி, ஏ.சி.யின் அறைக்கு கெத்தாகப் போக, அவர் தேடிப்போன ஏ.சி. மாற்றலாகிச் சென்று விட்டாராம். சீன் காட்டிய அப்துல் ரஹீமை, அங்கிருந்த காக்கிகள் விசாரித்து சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். அவர் கூட்டாளி அமீரையும் தேடி வருகின்றனர். அப்துல் ரஹீமை ஜாமீனில் உடனே வெளியில் எடுக்க முடியாத அவரது தம்பியான ’எஸ்.எஸ். பிரியாணிக் கடை’ சம்மந்த், சுலைமான் தரப் பிடம், புகாரை வாபஸ் வாங்கும்படி சூட்கேஸைக் காட்டிக் கேட்க, அவர் மறுத்துவிட்டாராம். இதனால். முன்னாள் காங்கிரஸ் எம்.பி.ஆருண் தரப்பை யும் அப்துல் ரஹீம் தரப்பு அணுக... அவரோ, "மோசடிக்காரருக்காக என்னிடம் வராதீர்கள்' என்று, கைவிரித்துவிட்டாராம். பிரியாணியை அள்ளி விழுங்கலாம்... பிரியாணிக் கடையை யுமா?

-அ.அருண்பாண்டியன்

nkn2905021
இதையும் படியுங்கள்
Subscribe