அ.தி.மு.க. எம்.பி. ஏற்படுத்திய நெருக்கடி!

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதில் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று செய்தித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

s

இதற்காக சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் நாற்காலிகள் போடப்பட்டு, அந்த பெரிய அரங்கு தயார் செய்யப்பட்டது. மேலும், முன்னாள் முதல்வர் கலைஞர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பேனரும் அங்கே வைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த அ.தி.மு.க எம்.பி.யும் ஓ.பி.எஸ். மகனுமான ரவீந்திரநாத், அந்த படங்கள் அங்கே இருந்தால், நான் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்” என்று அதிகாரிகளிடம் கறாராகச் சொல்ல, கடைசி நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாத கலெக்டர் கிருஷ்ணஉன்னி, அந்தக் கூட்டத்தை தன் அறைக்கு அருகே உள்ள சிறிய அரங்கிற்கு மாற்றினார். அங்கு கலைஞர், ஸ்டாலின் படங்கள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகே, ரவீந்திரநாத், அந்தக் கூட்டத்திற்கு வந்தார். இந்த விசயம் தெரிந்தும், விசயத்தை விவகாரமாக்காமல் தி.மு.க எம்.எல்.ஏ.க்களான கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அரங்கம் சிறியதாக இருந்ததால், கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் சமூக இடைவெளி இல்லாமலே நடந்தது. இதை ஏற்பாடு செய்த அதிகாரிகள் பலரும் ‘"டெல்லி காலில் விழும் இவருக்கு, இங்கதான் வீராப் பெல்லாம்'’ என்று ரவீந்திரநாத்தைக் கரித்துக்கொட்டினர்.

Advertisment

-சக்தி

தள்ளாடும் காவல்துறை!

ஊரடங்கு நேரத்திலும் பொதுமக்கள் அநாவசியமாக நகர்வலம் வந்து, சூழலை பயமுறுத்தி வந்ததால், அதை டைட் செய்த தமிழக அரசு, டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூடிவிட்டது. இதனால் மதுப்பிரியர்களின் நிலை திண்டாட்ட மாக, இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கள்ள வியாபாரிகள், தமிழகத்தின் பல பகுதிகளிலும் களமிறங்கி, போலீஸுக்கும் அதிகாரிகளுக்கும் கொடுக்கவேண்டி யதைக் கொடுத்துவிட்டு, மது பாட்டில்களை சரமாரியாக விற்றுவருகின்றனர். இதற்காக மது பாட்டில்களை முன்னதாகவே வாங்கி, வீடுகளிலும் ஓட்டல்கள் போன்ற இடங்களிலும் ஏகத்துக்கும் பதுக்கி வைத்திருக்கிறார்கள். 125 ரூபாய் விலையுள்ள குவாட்டர் பாட்டில்களை, கள்ளத்தனமாக 350 ரூபாய்வரை விற்றுக் கல்லா கட்டுகின்றனர். குறிப் பாக மலைக்கோட்டை மாநகரான திருச்சியை எடுத்துக்கொண்டால், அதன் நகரப் பகுதியில் ராமகிருஷ்ணா பாலம், கரூர் பைபாஸ் பாலம், உறையூர், கருமண்டபம் உள்ளிட்ட ஏரியாக்களில் கள்ளச்சரக்கின் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. அதேபோல் புறநகர் பகுதிகளான சமயபுரம், மேலவாளாடி, மண்ணச்சநல்லூர், பஞ்சப்பூர் உள்ளிட்ட ஏரியாக்களில் ஒரு குவாட்டர் விலை 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறதாம். கள்ளச் சரக்கில் குடிமகன்களும், கள்ள மது வியாபாரிகளின் மாமூலில் காவல்துறையினரும் ஏகபோகமாகத் தள்ளாடிவருகின்றனர்.

-மகேஷ்

Advertisment

கடன் கொடுத்ததால் தாயுடன் கொலையானவர்!

திண்டிவனம் அருகிலுள்ள கீழ்சேவூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பிரேம்குமார். இவர், தனது குடும்பத்தின ருடன் சென்னை பிராட்வே பகுதியில் வசித்துவந்த நிலையில்... கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, அதே கீழ்சேவூர் கிராமத்தில் விவசாயக்கிணறு ஒன்றில் பிணமாக மீட்கப் பட்டார். இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார், அவர் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கைப் பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். தற்போது இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரேம்குமாருடன் அவரது தாய் லட்சுமியும் கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவர, இதை விசாரித்த காவல்துறையினரே விக்கித் துப் போயிருக்கிறார்கள். சென்னையில் காய்கறிக் கடை நடத்திய பிரேம், அதை விற்றுத் தரும்படி கீழ்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரிடம் கேட்டிருக்கிறார். அந்தக் கடையை ராமதாஸ் 27 லட்ச ரூபாய்க்கு விற்றுத் தந்ததோடு, அந்தப் பணத்தில் 7 லட்ச ரூபாய் பணத்தைத், தான் கடனாக வைத்துக் கொள்வதாகவும், சில மாதங்களுக்குப் பிறகு அதைத் திருப்பித் தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், பல மாதங்கள் கடந்தும் ராமதாஸ், பணத்தைத் தராமல் ஏமாற்றிவந்துள்ளார். இதனால் கொடுத்த பணத்தை அடிக்கடி ராமதாசிடம் கேட்டுள்ளார் பிரேம்.

அதனால், பணம் கேட்டுத் தொல்லை தரும் பிரேம்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார் ராமதாஸ். அதன்படி கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, அந்த ஏழு லட்சத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி, சென்னையிலிருந்த பிரேம்குமாரைத் தனது நண்பர் களுடன் ஆட்டோவில் கிராமத்திற்கு அழைத்துவந்த ராமதாஸ், அவருக்கு அதிக அளவில் மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். போதையின் உச்சத்தில் இருந்த பிரேம்குமாரை, ராமதாசும் அவரது நண்பர்களும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளனர். பிரேம்குமா ரின் அம்மா அவரைத் தேடினால் தங்களுக்குப் பிரச் சினை வரும் என்று கருதி, அவரையும் குறிவைத்தனர். சம்பவத்திற்கு மறுநாள் பிரேம்குமாரின் தாயார் லட்சுமியை செல்ஃபோனில் தொடர்புகொண்ட ராமதாஸ், உங்கள் மகன் பிரேம்குமார் திருவண்ணா மலையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று தகவல் கொடுத்துவிட்டு, சென்னை யில் இருந்த லட்சுமியையும் தனது நண்பர்களுடன் காரில் கிராமத்திற்குக் கூட்டிவந்திருக்கிறார். வரும் வழியிலேயே ஆரணி பகுதியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து லட்சுமியின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்து, சாலையோரம் வீசிவிட்டுப் போய்விட்டார். கொலையாளிகளில் சிலர் சிக்கியுள்ளனர். பிடிபட்ட அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பிரம்மதேசம் போலீசார், ராமதாஸ் உட்பட மேலும் பலரைத் தேடி வருகிறார்கள்.

-எஸ்.பி.எஸ்.