நிதி வேண்டாம் என்னும் கோரிக்கை!
நெடுஞ்சாலைத்துறையின் இன்றைய நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்’-என நெடுஞ்சாலைத் துறை பட்டயப் பொறியாளர் சங்கத்தினர், தமிழக முதல்வர் .ஸ்டாலினுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளர். அதில், ’கடந்த 10 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 95 சதவீத சாலைகள் அமைக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ளன. அதனால் அவற்றுக்கு பராமரிப்புச் செலவுகளும் 95 சதவீதம் தேவைப்படாது. சில கிராமப்புற சாலைகள் மட்டுமே மோசமாக உள்ளன. அந்த சாலைகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கினால் போதுமானது. அப்படி இருந்தும் நல்லநிலையில் இருக்கும் சாலைகளை புதுப்பிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பல்லாயிரம் கோடிகள் கூடுதல் செலவினம் ஏற்படும்.
எனவே, தேவையற்ற பரிந் துரைகளை அரசு தவிர்க்கவேண்டும். அதற்கு ஒதுக்க இருக்கும் நிதியையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி, மக்களின் து
நிதி வேண்டாம் என்னும் கோரிக்கை!
நெடுஞ்சாலைத்துறையின் இன்றைய நிலையைத் தெரிந்து கொள்ளுங்கள்’-என நெடுஞ்சாலைத் துறை பட்டயப் பொறியாளர் சங்கத்தினர், தமிழக முதல்வர் .ஸ்டாலினுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளர். அதில், ’கடந்த 10 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 95 சதவீத சாலைகள் அமைக்கப்பட்டு, நல்ல நிலையில் உள்ளன. அதனால் அவற்றுக்கு பராமரிப்புச் செலவுகளும் 95 சதவீதம் தேவைப்படாது. சில கிராமப்புற சாலைகள் மட்டுமே மோசமாக உள்ளன. அந்த சாலைகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கினால் போதுமானது. அப்படி இருந்தும் நல்லநிலையில் இருக்கும் சாலைகளை புதுப்பிக்கவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பல்லாயிரம் கோடிகள் கூடுதல் செலவினம் ஏற்படும்.
எனவே, தேவையற்ற பரிந் துரைகளை அரசு தவிர்க்கவேண்டும். அதற்கு ஒதுக்க இருக்கும் நிதியையும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒதுக்கி, மக்களின் துயரைக் களையலாம்’ என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது. துறைக்கு நிதி ஒதுக்கவேண்டாம் என்கிற பொறியாளர் சங்கத்தின் இந்த அறிக்கை, அரசுத் தரப்பை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக் கிறது.
கடந்த ஆட்சியில், ஏற்கனவே போடப்பட்ட ரோடுகளின் மீது தார் ஊற்றி, புது ரோடு போட்டதாக முறைகேடுகள் நடந்ததை ஆதாரத்துடன் நக்கீரன் வெளியிட்டிருக்கிறது. இந்நிலை யில், தேவையான இடங்களில் சாலை களை சீரமமைக்க வேண்டுமென்றால் பழைய தார் ரோட்டை சுரண்டி எடுத்துவிட்டுத்தான் புது ரோடு போட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டி ருக்கிறார்.
-ராம்கி
கூடுதல் எரிமேடை
கொரோனா பெருந்தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மயானங்கள் திணறிக்கொண்டிருக்கின்றன. அனைத்து மாநிலங் களிலும் எரியூட்டக் காத்திருக் கும் உடல்கள், மணிக்கணக்கில் காத்திருக்கும் கொடுமையைப் பார்க்க முடிகிறது. சுடுகாடே இப்படியெனில் புதைக்க இடமின்றி இடுகாடுகளும் தவிக்கின்றன. வடநாட்டில் காணப்பட்ட இதுபோன்ற காட்சிகள் இப்போது தமிழகத்திலும் அரங்கேறி, எல்லோரின் இதயத்தையும் நிலைகுலைய வைக்கின்றன. அதனால் மருத்துவமனைகளைப் போலவே மயானங்களையும் விரிவுபடுத்திச் சீரமைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் மின் மயானத்தை, ஆயிரம்விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன், மேற்கு பகுதி தி.மு.க. செயலாளர் ஜெ.எஸ்.அகஸ்டின் பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது மயானத்தில் உள்ள இடநெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து, கூடுதலாக ஒரு மின் எரிமேடையை உடனடியாக அமைத்து தரவும், ஒரு கண்காணிப்பு கேமரா பொறுத்தவும் மாநகராட்சி அதிகாரிகளை வலியுறுத்தினார். எழிலனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், மிகவிரைவில் கூடுதல் மின் எரி மேடையை அமைத்துத் தருவதாக உறுதியளித்தனர்.
-கீரன்
செவிலியரை உயர்த்திய டீன்!
இங்கிலாந்தைச் சேர்ந்த செவிலியரான பிளாரன்ஸ் நைட்டிங் கேல் அம்மையாரின், தியாக வாழ்வை நினைவுபடுத்தும் வகையில் அவரது பிறந்தநாளான மே 12-ஆம் தேதி, உலக செவிலியர் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. போர்க்களத்தில் இரவு நேரத்திலும் விளக்கை ஏந்தியபடியே அவர் சிகிச்சையளித்ததால், அவரை கை விளக்கேந்திய காரிகை என்று அழைக்கின்றனர்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில், செவிலியர் தினம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் டீன் ரவீந்திரனும் கலந்துகொண்டார். அங்கே அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த நைட்டிங்கேல் அம்மையார் உருவப் படத்திற்கு, செவிலியர்களுடன் சேர்ந்து அவரும் மலர் தூவி மரியாதை செய்தார்.
அப்போது பேசிய அவர், "இந்த உச்சபட்சமான கொரோனோ காலத்திலும், செவிலியர்களான நீங்கள்தான், எல்லோருக்கும் ஊக்கம் அளிப்பவர்களாக இருக்கிறீர்கள். நாங்கள் வெறும் டாக்டர்கள்தான். மருந்து எழுதி கொடுத்ததும் எங்கள் வேலை முடிந்து விடுகிறது. ஆனால் நோயாளிகளின் அருகிலேயே இருந்து, வீடு வாசல் குடும்பத்தை மறந்து, அவர்கள் குணமடைந்து வீடு செல்லும்வரை அவர் களைப் பார்த்துக் கொள்வது நீங்கள்தான். இப்படிப்பட்ட பணிகளை, உங்களைத் தவிர வேறு யாராலும் செய்யமுடி யாது. இந்த கொரோனோ காலத்தில் நோயாளிகளுக்கு நீங்கள் செய்யும் சேவை மகத்தானது. நீங்கள்தான் தற்போதைய சூழலில் யாவருக்கும் கடவுள்...''’என்றபடி கண்ணீர் பெருக்கியபடியே, திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு கொரோனோ சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் செவிலியர்கள் முன், தரையில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்ச்சியில் மெழுகுவர்த்தி ஏந்தியும், கேக் வெட்டியும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.
-அ.அருள்குமார்