திருவாரூரை நெகிழ வைத்த விழா!

தமிழகத்தையே புரட்டிப்போடப் போகிறது கொடூர மழையென "ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்ட 7.10.18 மாலையில், திருவாரூர் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், வர்த்தகச் சங்கக் கட்டடத்தில் கலைஞருக்கும், தமிழ்ச்சங்க முன்னாள் செயலாளர் செல்வத்துரைக்கும் புகழஞ்சலி நிகழ்ச்சி.

Advertisment

signalதமிழாசிரியர் வடுகநாதன்: நிகரற்ற கலைஞரின் வழியில் திருவாரூர் தமிழ்ச் சங்கத்தை திறம்பட நடத்தியவர் ஆசிரியர் செல்வத்துரை. இருவரது மரணமும் திருவாரூருக்கும் தமிழுக்கும் பேரிழப்பு.

பட்டிமன்ற புகழ் புலவர் சண்முகவடிவேல்: போராட்டமே கலைஞரின் வாழ்க்கை. போராட்டத்தோடு பள்ளியில் சேர்ந்தார். ஒருமுறை, நெல்லை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ரயிலுக்கு செல்கிறார். ""உங்கள் ரிசர்வேஷன் கேன்சல் ஆகிவிட்டது. அமைச்சருக்கு அந்த கோச்சை ஒதுக்கியிருக்கிறோம்'' என்றார் ஸ்டேஷன் மாஸ்டர். தண்டவாளத்தில் தலைவைத்துப் படுப்பது என் வழக்கம். என் கோச் எனக்கு வேண்டும்'' போராடத் தயாரானார் கலைஞர். அன்றைய அமைச்சர் நாஞ்சில் மனோகரன் ஓடி வந்து கெஞ்சியும் பயனில்லை. ஸ்டேஷன் அதிகாரிகள் வேறு கோச்சை ரெடிபண்ணிக் கொடுத்தார்கள். இறந்தபிறகும் தனக்கான இடத்தை போராடிப் பெற்றவர். கலைஞர் இல்லாத திருவாரூர் அம்மணமாய் இருப்பதுபோலத் தோன்றுகிறது எனக்கு.

ஆசிரியர் நக்கீரன் கோபால்: நக்கீரன் நிறைய புகழையும் பெயரையும் சம்பாதித்திருக்கிறது. அதில் மிக முக்கியமானவை கலைஞரின் நட்பும் அவரது ஊரான திருவாரூரின் நட்பும்தான். ஜெயலலிதா என்னைப் பொடாவில் கைது செய்து, கொடுமைகள் இழைத்தபோது, கலைஞர் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்தினார். 137 எம்.பி.க்கள் மூலம் பாராளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்தார். அதன் பயனாகத்தான் பொடாவை உடைத்துக் கொண்டு வெளியே வந்தோம். தமிழகத்திற்காக, தமிழுக்காக 94 வயதுவரை உழைத்தவர் கலைஞர். அவர் இறந்தபிறகும் அவர் தொகுதி மீது உள்ள பயம் ஆட்சியாளர்களை விட்டுப் போகவில்லை. மழையைக் காரணம் காட்டி, தேர்தலைத் தள்ளிப் போடுகிறார்கள்.

-க.செல்வகுமார்

தண்ணீர் மனிதன்!

Advertisment

மதுரை மாநகர் மக்களை நின்று கவனிக்க வைக்கிறது ""தண்ணீர் மனிதனுக்கு நன்றி!'' எனும் போஸ்டர்.

signalஎதற்காக இந்த வித்தியாசமான போஸ்டர்?

""மதுரை மாவட்டத்தில், கடந்த 25 வருடமாக காய்ந்து விரிவோடிக் கிடந்த சிறுதூர், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, ஊமச்சிக்குளம், திருப்பாலை, நாராயணபுரம், அய்யர் பங்களா, நாகணகுளம், தபால் தந்தி நகர், கோமதிபுரம், காஞ்சாராம்கோட்டை, சத்திரப்பட்டி உள்பட, நூற்றுக்கணக்கான கண்மாய்கள் மறுகால் போடுமளவுக்கு நிரம்பி வழியுது. இதற்குக் காரணமான ஒருத்தருக்கு நன்றி தெரிவிக்கிறது இந்தச் சுவரொட்டிகள்'' உற்சாகமாகச் சொன்னார் ஊமச்சிக்குளம் பாலகிருஷ்ணன்.

யாரந்தத் தண்ணீர் மனிதன்?

Advertisment

""மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. தி.மு.க. மூர்த்திதான் அந்தத் தண்ணீர் மனிதன். இந்த மகராசன் எங்க ஊர். இளவட்டங்களைத் திரட்டினார். "ஏம்பா நானும் விவசாயிதான். வெளிச்சநத்தம் தான் என் ஊரு. கண்மாய்த் தண்ணியில குளிச்சு வளர்ந்தவன். நம்ம கண்மாய் எல்லாம் சீமை விஷக் கருவை மண்டி, மேடு தட்டிப் போச்சு. என்கிட்ட பொக்லைன் இருக்கு. உங்க ஊர்ல யார் யார்கிட்ட இருக்கோ கொண்டுகிட்டு ஒரு பத்து இளைஞர்கள் வாங்க கண்மாயை சீர்படுத்தி, தூர்வாரி, தண்ணி தேங்க வச்சிடுவம்'னு சொன்னாரு. சொன்னபடியே, ஒன்றல்ல, ரெண்டல்ல, நூத்துக்கணக்கான கண்மாய்களுக்கு மறு ஜென்மம் அளித்து, விவசாயிகள் வயித்தில பால வார்த்துவிட்டார்'' என்கிறார் அப்பன் திருப்பதி கண்ணன்.

மதுரை கிழக்கு எம்.எல்.ஏ. தி.மு.க. மூர்த்தியை பாராட்டிய நாம் ""எப்படிச் சாத்தியமானது?'' என்றோம்.

""போன வருடம் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுக்க தொடங்கி வைத்த வேலைதான்... பொதுமக்களைச் சேர்த்துக் கொண்டு நானும் ஆர்வத்தோடு ஈடுபட்டேன். அத்தனை கண்மாய்களும் நிரம்பின. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்தது. மக்களும் என்னைப் பாராட்டி வாழ்த்துகிறார்கள். மட்டற்ற மகிழ்ச்சியோடு சொன்னார் எம்.எல்.ஏ.

-அண்ணல்

பதவி படுத்தும் பாடு!

signal

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உடல்நலமின்றிப் போயிருந்தால், நல்ல டாக்டரிடம் போகச் சொல்லியிருப்பார்கள். அமைச்சருக்கோ "நேரம்' சரியில்லை. கிரகம் பிடித்து ஆட்டுகிறதாம். அதனால் சோதிடர்கள் "இதுக்கு சிரமபரிகாரம் செய்தாகணும். நம்ம கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஐயாவாடி, திருநாகேசுவரம், கஞ்சனூர் கோயில்களுக்குப் போய் வாங்க' என்று அமைச்சரை ஆற்றுப்படுத்தினார்கள்.

அந்தந்தப் பரிகாரத் திருத்தலங்களுக்குப் பக்கத்திலுள்ள மருத்துவமனைகளில் "ஆய்வு' என்ற பெயரில் நேரத்தை சரிசெய்யப் புறப்பட்டார் சுகாதார அமைச்சர்.

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அமைச்சரின் ஆய்வு தொடங்கியது. அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவிற்குள் அமைச்சர் நுழைந்தார். அவருக்குப் பின்னால் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நடந்தார். அப்போது துரைக்கண்ணுவை இடித்துக்கொண்டு ஓவர்டேக் செய்தார் மருத்துவமனை டாக்டர் பிரபாகரன். இடிபட்ட அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு வந்ததே கோபம். ""யோவ் புரோட்டகால்னா என்னனு தெரியுமா? என்னை இடித்துக்கொண்டு போகிறாயே? என்னால் இனி உள்ளே வரமுடியாது'' சத்தம் போட்டுவிட்டு வெளியிலேயே நின்றுகொண்டார் வேளாண்துறை.

டாக்டர் பிரபாகரன் மூன்று முறை மன்னிப்புக் கேட்டார். மன்னிக்கத் தயாராயில்லை வேளாண்துறை. விஜயபாஸ்கர் திரும்பி வந்து சமாதானப்படுத்தி அழைத்த பிறகே உடன்சென்றார் வேளாண்துறை துரைக்கண்ணு.

""சாதாரணமா சைக்கிள்ல போயி, டீக்கடை பெஞ்ச்ல உட்கார்ந்து டீ குடிச்ச ஒரு மனிதரை இந்தப் பதவி எப்படி மாற்றிவிட்டது பாருங்கள்'' என்று தலையிலடித்துக்கொண்டார்கள் தொண்டர்கள்.

-குமார்