சிக்னல் : சின்னத்திரை நடிகையின் கண்ணீர்!

signal

சின்னத்திரை நடிகையின் கண்ணீர்!

சின்னத்திரை நடிகையான ஜெனிபர், 'செம்பருத்தி' தொடர் மூலம் பிரபலமானவர். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப் போல' தொடரில் நடித்து வருகிறார். கணவரைப் பிரிந்து, விவாக ரத்து வழக்கு நடந்துவரும் நிலையில், துணை இயக்கு னரான நவீன்குமாருடன் இவர் நட்புகொண்டார். அது காதலாக மாறிய நிலை யில், இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித் துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் நவீனுக்கும் ஜெனிபருக்கும் இடையில் உரசல் ஏற்பட, நவீனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்திருக்கிறார் ஜெனி.

s

இதனால் ஆத்திர மடைந்த நவீன்குமார், வளசர வாக்கத்தில் படப்பிடிப்பில் இருந்த ஜெனிபரை வலுக் கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அவரை சிங்கப்பெருமாள் கோவில் வரை அழைத்துச் சென்று, தாக்கி, நிர்வாணப் படுத்தி, ஆபாசப் புகைப்படங் களையும் வீடியோவையும் எடுத்துவிட்டு, இதை வெளியே சொன்னால், சின்னத்திரை நடிகை சித்ராவின் கதிதான் உனக்கும் ஏற்படும் என்று மிரட்டினாராம்

சின்னத்திரை நடிகையின் கண்ணீர்!

சின்னத்திரை நடிகையான ஜெனிபர், 'செம்பருத்தி' தொடர் மூலம் பிரபலமானவர். தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'வானத்தைப் போல' தொடரில் நடித்து வருகிறார். கணவரைப் பிரிந்து, விவாக ரத்து வழக்கு நடந்துவரும் நிலையில், துணை இயக்கு னரான நவீன்குமாருடன் இவர் நட்புகொண்டார். அது காதலாக மாறிய நிலை யில், இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித் துள்ளனர். இந்த சூழலில் கடந்த மாதம் நவீனுக்கும் ஜெனிபருக்கும் இடையில் உரசல் ஏற்பட, நவீனுடன் பேசுவதைத் தவிர்த்து வந்திருக்கிறார் ஜெனி.

s

இதனால் ஆத்திர மடைந்த நவீன்குமார், வளசர வாக்கத்தில் படப்பிடிப்பில் இருந்த ஜெனிபரை வலுக் கட்டாயமாக இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அவரை சிங்கப்பெருமாள் கோவில் வரை அழைத்துச் சென்று, தாக்கி, நிர்வாணப் படுத்தி, ஆபாசப் புகைப்படங் களையும் வீடியோவையும் எடுத்துவிட்டு, இதை வெளியே சொன்னால், சின்னத்திரை நடிகை சித்ராவின் கதிதான் உனக்கும் ஏற்படும் என்று மிரட்டினாராம். அதோடு ஜெனியை பணம் கேட்டு மிரட்டிய நவீன், ரவுடிகளு டன் ஜெனிபர் குடும்பத்தா ரையும் தாக்கியுள்ளார்.

இதில், ஜெனிபர் மற் றும் அவரது தாயார், தந்தை, தங்கை, சகோதரர் ஆகியோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர் பாக மணலி காவல் நிலையத்தில் ஜெனிபர் புகார் அளித்தும், போலீஸ் நடவடிக்கை எடுக்க மறுத்ததாம். காரணம், நவீனின் அப்பா உதயகுமார், காவல்துறையில் உயர் அதிகாரியாக இருக்கிறாராம். இதைத் தொடர்ந்து, நடிகை ஜெனிபர் சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் நேரில் புகார் கொடுத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “"சித்ரா நிலைமை எனக்கும் வரக்கூடாது என்பதற்காகத்தான் கமிஷனரிடமே புகார் கொடுத்தேன். எனக்கு நீதி வேண்டும்' என்றார் கலக்கத்தோடு.

தவறான நபரைக் காதலித்ததால் நீதியைத் தேடி, கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார் ஜெனிபர்.

-அரவிந்த்

கஞ்சித்தொட்டிப் போராட்டம்!

கொரோனாவின் இரண் டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து, மலைகளின் இளவரசியான கொடைக்கானலும் சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிப் போயிருக் கிறது. எனவே, இங்கு சுற்றுலாத் தொழிலை நம்பி யுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொடைக் கானலுக்கு சுற்றுலாப் பயணிகளை அனு மதிக்கக்கோரியும் வியாபாரிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடு பட்டனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

s

இந்த நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு சங்கங்களின் கூட் டமைப்பின் சார்பில் கொடைக் கானல், மூஞ்சிக்கல் பஸ் நிறுத்தம் பகுதியில் மீண்டும் அவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் சுற்றுலா வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், குதிரை சவாரி தொழிலாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்பட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் பங்கேற்க, போராட்டம் சூடு பிடித்தது. போராட்டக் குழுவினர் அங்கே கஞ்சித் தொட்டியைத் திறந்து வைத்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, போராட்டக் குழுவினரிடம் தாசில்தார் சந்திரன், போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வியாபாரி களின் கோரிக்கைகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகப் போராட்டக் குழுவினர் அறிவித்துள்ளனர். கொதிநிலையிலேயே இருக்கிறது கொடைக்கானல்.

-சக்தி

வினோத தங்கக் கடத்தல்

வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் பயணிகளில் பலர், தங்கத்தை முறையான வரி செலுத்தாமல் இந்தியாவிற்குள் கடத்தி வருவதில், விதவிதமான டெக்னிக்குகளைக் கையாண்டு வருகின்றனர். பலர் தங்களுடைய உடைமைகளுக்குள் மறைத்து வைத்தும், கணிப்பொறி சாதனங்களில் ஒளித்து வைத்தும், சிலர் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களில் பதுக்கி வைத்தும் கண்ணாமூச்சு ஆடுகின்றனர். இப்படி வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் பலரும், தங்கம் கடத்தி வருவதை, வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கண்டுபிடிக்கும் நிகழ்வு தினமும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

signal

கடந்த 27 ஆம் தேதி இரவு, கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானப் பயணிகளை தீவிரமாக அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர், தன்னுடைய கைப்பையில் வைத் திருந்த கட்டிங் பிளேயருக்குள் தங்கத்தை ஒளித்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த கட்டிங் பிளேயர் சற்று வித்தியாசமாக இருந்ததால், அதைப் பரிசோதித்த அதிகாரிகள், அதற்குள் வைக்கப் பட்டிருந்த சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான 217 கிராம் தங்கத்தை அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். என்னதான் அண்டா குண்டாவில் கருவாட்டைப் பதுக்கி வைத்தாலும், புலனாய்வுப் பூனைகள் சும்மாவிடுமா என்ன?

-மகேஷ்

nkn050521
இதையும் படியுங்கள்
Subscribe