Advertisment

சிக்னல் நெல்லை நனையவிட்ட அவலம்!

signal

நெல்லை நனையவிட்ட அவலம்!

s

வெப்பச் சலனம் காரணமாக கடும் வெயிலுக்கு நடுவிலும் சில இடங்களில் ஆங்காங்கே கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக 12-ந் தேதி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை கனமழை மிரட்டியது. இதில் அறுவடை செய்த நெல் மூட்டைகளும், அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் நனைந்துபோய், விவசாயிகளைப் பதட்டத்துக்கு ஆளாக்கி வருகின்றன. அறந்தாங்கி பக்கமுள்ள கேவல்லாவரி கிராமத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அழியா நிலை போன்ற பகுதிகளில் இருக்கும் குடோன் களுக்கு அனுப்பிவைக்க வேண்டிய அதிகாரிகள், அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் திறந்தவெளியில் போட்டு வைத்திருந்ததால், அங்கு மட்டும் 2 ஆயிரத்திற்கும

நெல்லை நனையவிட்ட அவலம்!

s

வெப்பச் சலனம் காரணமாக கடும் வெயிலுக்கு நடுவிலும் சில இடங்களில் ஆங்காங்கே கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக 12-ந் தேதி புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா பகுதிகளை கனமழை மிரட்டியது. இதில் அறுவடை செய்த நெல் மூட்டைகளும், அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த பல ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளும் நனைந்துபோய், விவசாயிகளைப் பதட்டத்துக்கு ஆளாக்கி வருகின்றன. அறந்தாங்கி பக்கமுள்ள கேவல்லாவரி கிராமத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அழியா நிலை போன்ற பகுதிகளில் இருக்கும் குடோன் களுக்கு அனுப்பிவைக்க வேண்டிய அதிகாரிகள், அதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் திறந்தவெளியில் போட்டு வைத்திருந்ததால், அங்கு மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூட்டைகள், நனைந்து சொதசொதத்துப்போய்க் காட்சி யளித்தன. இந்த லட்சணத்தில் வல்லவாரி கொள்முதல் நிலையத்துக்கு 2 மாதங்களுக்கு முன் விவசாயிகள் கொண்டுவந்த சுமார் 500 நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப் படாமலே இருக்க, நொந்து புலம்பிவரு கிறார்கள் சம்பந்தப் பட்ட விவசாயிகள். தேர்தலுக்கு முன்பும் இதுபோல திடீர் மழையால் பல இடங் களில் நெல் மூட்டை கள் வீணாகின. அப்போது "விவசாயி' முதலமைச்சர் கண்டு கொள்ளவில்லை. இப் போது, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அசட்டை அதிகாரிகளை யார் தட்டிக் கேட்பது?

Advertisment

-பகத்

மாணவியைக் கடத்திய ஆசிரியர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மனைவி காவியா, திருவண்ணா மலை மாவட்டம், மேல்செங்கத்தில் தங்கி கூலி வேலை செய்துவருகிறார். காவியாவுடன், மூர்த்தியின் முதல் மனைவிக்குப் பிறந்த 16 வயதான மகளும் தங்கியிருந்து, அப்பகுதியில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர் சென்று, மீண்டும் செங்கம் திரும்புவதற்காக மத்தூர் பேருந்து நிலையத்திற்கு காவியா வந்தார். அப்போது அவருடன் வந்த மகள், திடீரென்று காணாமல் போய்விட்டார். அதனால் பதறிய அவர், அங் குள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "நாகனூர் அரசுப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும் சரண்ராஜ் என்பவர், திருமண ஆசை காட்டித் தன் மகளைக் கடத்திச் சென்றுவிட்டதாக'க் குறிப்பிட்டிருந்தார். ஆசிரியர் சரண்ராஜுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி, அவர் களைப் பிரிந்து வாழ்கிறார் என்கிறார்கள் ஏரியாவாசிகள். இதைத்தொடர்ந்து அதிரடியாகக் களமிறங்கிய போலீஸ் டீம், சரண்ராஜை மடக்கி, அவர் வசம் இருந்த மாணவியை மீட்டனர். மன்மத ஆசிரியர் சரண்ராஜை, போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து, போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர், மன்மதப் பாடம் நடத்தி வகையாக சிக்கிக்கொண்டிருக்கிறார்.

Advertisment

-இளையராஜா

துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை?

ss

தி.மு.க. பொதுச்செயலாளர் துரை முருகனும், அவரது மகனான கதிர் ஆனந்த் எம்.பி.யும் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்கும் நேரத்தில், அவர்களது ஏலகிரி பண்ணை வீட்டிற்குள் புகுந்திருக்கிறது ஒரு கொள்ளைக் கும்பல். இந்த பண்ணை வீட்டில்தான் கடந்த ஆண்டு கொரோனா காலத்தின் பெரும்பகுதியைக் கழித்தார் துரைமுருகன். தேர்தல் முடிந்திருக்கும் இந்த நேரத்தில், அந்தப் பண்ணை வீட்டில் பணம் இருக்கலாம் என்று எதிர்பார்த்த கும்பலொன்று புகுந்திருக்கிறது. கடந்த 12-ஆம் தேதி காலை, அந்த வீட்டுக்கு வந்த பணி யாளர்கள், வீட்டின் வாசல் கதவு உடைக்கப் பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார்கள். வீட்டின் உள்ளே இருந்த அறைகளில் பொருட்கள் எல்லாம் கலைந்து கிடந்தன. இந்தத் தகவல் துரைமுருகன் குடும்பத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. காவல்நிலையத்துக்கும் புகார் சென்றது. அந்தப் பண்ணை வீட்டில் என்ன களவு போனது என்பது பற்றிய விபரங்கள் தெரிவிக்கப்படவில்லை.. இப்போது போலீஸ் டீம், குற்றவாளிகளைத் தேடிவருகிறது. இந்த சம்பவம், தி.மு.க. தரப்பில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜா

nkn170421
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe