சிக்னல் : அரியர்ஸ் மாணவர்களை பாஸ் செய்வதா?

ss

அரியர்ஸ் மாணவர்களை பாஸ் செய்வதா?

s

தேர்வுகள் எழுதாமலேயே அரியர்ஸ் மாணவர்களை தமிழக அரசு பாஸ் செய்வதா? என்று கேள்வி எழுப்பி, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். கொரோனா பரவல் அதிகரித்ததால் 2020 ஆகஸ்டில் ஆசிரியர் தேர்வை ரத்து செய்தது தமிழக அரசு. அதே அரசாணையில், அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத் தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அது தெரிவித்தது. உடனே, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக் கறிஞர்கள் குமார், ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது. அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின் அடிப் படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரி

அரியர்ஸ் மாணவர்களை பாஸ் செய்வதா?

s

தேர்வுகள் எழுதாமலேயே அரியர்ஸ் மாணவர்களை தமிழக அரசு பாஸ் செய்வதா? என்று கேள்வி எழுப்பி, மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பைத் திகைக்க வைத்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். கொரோனா பரவல் அதிகரித்ததால் 2020 ஆகஸ்டில் ஆசிரியர் தேர்வை ரத்து செய்தது தமிழக அரசு. அதே அரசாணையில், அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத் தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அது தெரிவித்தது. உடனே, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக் கறிஞர்கள் குமார், ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது. அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், பல்கலைக் கழக மானியக் குழு விதிகளின் அடிப் படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த பல் கலைக் கழக மானியக்குழுத் தரப்பு, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் பிறப்பிக்கப்பட்ட விதிகளில், எளிய முறையில் தேர்வுகளை நடத்தலாம் என்றுதான் சொல்லப்பட்டது என்று வாதிட்டது. இதைத் தொடர்ந்து, அரியர் தேர்வு எழுதக் கட்டணம் செலுத்தி னாலே தேர்ச்சி என்ற அரசு உத்தரவை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஏதேனும் தேர்வு நடைமுறையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத் தினார்கள். விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குத் தள்ளிவைத்த அவர்கள், கல்வியின் புனிதத்தில் எந்த சமரசமும் இல்லாமல் ஏதே னும் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து தமிழக அரசும், பல்கலைக் கழக மானியக் குழுவும் கலந்து பேசி ஆலோ சனைகளை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கி றார்கள்.

-ராம்கி

அவசரம் அழகல்ல!

தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக செல்வகுமாரை நியமித்திருக்கிறார் கவர்னர் பன்வாரிலால். தேர்தல் முடிந்திருந்தாலும், வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகே, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும். அது அமலில் இருக்கும் காலகட்டத்தில் அரசு சார்ந்த புதிய நிய மனங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது விதி யாகும். ஆனால், ராஜ்பவனே, இந்த விதிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் ""சட்டமன்ற பொதுத் தேர்தல் 6-ந் தேதிதான் முடிந்திருக்கிறது. ஆட்சி மாற்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல் உருவாக்கி இருக்கின்ற தருணம் இது. வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சுமார் ஒரு மாத கால இடைவெளி இருக்கும் போதே, இப்படிப்பட்ட நியமன விவகாரங்களில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதுதான் மரபு. புதிய துணைவேந்தரின் பெயரை ஆளுநர் அவர்கள் அவசர அவசரமாக வெளியிட்டு இருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல. இந்தப் பதவியை புதிய அரசு வந்தபின்பு நிரப்பி னால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும்? இது போதாது என்று தென் மண்டலத் தேசியப் பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசும் தன் பங்கிற்கு அவசரமாக நியமித்து இருக்கிறது. இவை எல்லாம் அதிகார வரம்பு மீறலாகும் என்று காட்டம் காட்டியிருக்கிறார். இந்நிலையில் கிரிஜாவின் நியமனத்திலும் நீதிமன்றம் அதிரடி காட்டியது.

-இளையர்

ss

தொகுதி மாறி நின்றவர்கள்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 136 பேர் களமிறங்கினர். தேர்தல் நாளன்று வாக்களிக்க அவர்கள் தொகுதியை விட்டுச் சென்றபோதுதான், பெரும்பாலான வேட்பாளர்கள், தொகுதி மாறி நின்றவர்கள் என்ற விசயமே வாக்காளர்களுக்கு உறைத்தது. குறிப்பாக, ஆளும்கட்சி வேட்பாளர் களில், கடலூரில் போட்டியிடும் அமைச்சர் சம்பத், பண்ருட்டி தொகுதியில் உள்ள மேல்குமார மங்கலத்தில் வாக்களித்தார். புவனகிரியில் போட்டியிட்ட அருண்மொழித்தேவன், திட்டக்குடி தொகுதியிலும், குறிஞ்சிப் பாடி வேட்பாளரான செல்வி ராமஜெயம், தனது புவனகிரியிலும் வாக்களித்தனர். பண்ருட்டியில் போட்டியிடும் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி தொகுதி சொரத்தூரிலும், சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் பாண்டியன், காட்டுமன்னார்கோயில் தொகுதி குமராட்சி யிலும் வாக்களித்தனர். அதேபோல் தி.மு.க. சார்பில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டி யிட்ட எம். ஆர். கே பன்னீர்செல்வம், காட்டு மன்னார்கோயில் தொகுதியில் உள்ள முட்டத் திலும், பண்ருட்டியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் த.வா.க. வேல்முருகன், நெய்வேலி தொகுதியிலும், விருத்தாசலம் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன், நெய்வேலி தொகுதியிலும், புவனகிரி தி.மு.க. வேட்பாளரான சரவணன், சிதம்பரம் தொகுதியிலும் வாக்களித்தனர். இதேபோல் திட்டக்குடி பி.ஜே.பி. வேட்பாளரான தடா பெரியசாமி, குன்னம் தொகுதியிலும், காட்டுமன்னார் கோயில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளரான சிந்தனைச்செல்வன், விழுப்புரம் தொகுதியிலும் வாக்களிக்க, நாங்களும் இவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று, விருத்தாசலத்தில் போட்டியிட்ட தே.மு.தி.க. பிரேமலதா, சென்னையில் வாக்களித்தார். சொந்தத் தொகுதி வேட்பாளர்களே இல்லாமல் கடலூர் மாவட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர்.

-எஸ்.பி.எஸ்.

nkn140421
இதையும் படியுங்கள்
Subscribe