சிக்னல் தபால் வாக்குரிமைப் போராளி!

ss

தபால் வாக்குரிமைப் போராளி!

s

ரயில்வேயில் பணியாற்றும் லோக்கோ பைலட்டுகள், கார்டுகள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் உட்பட யாரும் எந்தத் தேர்தலிலும் இதுவரை ஓட்டுப் போட்ட தில்லையாம். காரணம், வாக்களிப்பதற்கு தோதாக, அந்தநாளில் அவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் விடுமுறை தருவதில்லை. இந்தநிலை நீண்டகால மாகவே இருந்துவருகிறது. இந்தச் சூழலில் "தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை இருப்பதுபோல், எங்களுக்கும் தபால் வாக்குரிமை வேண்டும்' என்று பிரதமர் அலுவலகம், மத்திய சட்ட அமைச்சகம் உள்ளிட்டவைகளுக்கு, சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் மதுரை கோட்ட உதவிச்செயலாளரான ராம்குமார் கடிதம் எழுதியிருந்தார். இது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது. இதைத்தொடர்ந்த

தபால் வாக்குரிமைப் போராளி!

s

ரயில்வேயில் பணியாற்றும் லோக்கோ பைலட்டுகள், கார்டுகள், பயணச்சீட்டுப் பரிசோதகர்கள் மற்றும் இதரப் பணியாளர்கள் உட்பட யாரும் எந்தத் தேர்தலிலும் இதுவரை ஓட்டுப் போட்ட தில்லையாம். காரணம், வாக்களிப்பதற்கு தோதாக, அந்தநாளில் அவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் விடுமுறை தருவதில்லை. இந்தநிலை நீண்டகால மாகவே இருந்துவருகிறது. இந்தச் சூழலில் "தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்குரிமை இருப்பதுபோல், எங்களுக்கும் தபால் வாக்குரிமை வேண்டும்' என்று பிரதமர் அலுவலகம், மத்திய சட்ட அமைச்சகம் உள்ளிட்டவைகளுக்கு, சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியனின் மதுரை கோட்ட உதவிச்செயலாளரான ராம்குமார் கடிதம் எழுதியிருந்தார். இது தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கும் கொண்டுசெல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அபிசேக் திவாரி "மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு எண் 60 (சி)'-யில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நாளன்று அத்தியாவசியப் பணிகளில் உள்ளவர்களுக் கும் தபால் வாக்குரிமை வழங்குவது என்று தீர் மானிக்கப்பட்டது. அதன்படி, "ரயில்வே ஊழியர்களுக்கும் இம்முறை தபால் வாக்குரிமை வழங் கப்படும்'’என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பைக் கேட்டு ராம்குமார், தன் நன்றியை தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவித்திருக்கிறார்.

-இளையர்

கணவரின் படத்துடன் பிரச்சாரம்!

துணி துவைத்தும் தோசை சுட்டும், டீ போட்டும் வாக் காளர்களிடம் காமெடி பண் ணிக்கொண்டிருக்கும் வேட் பாளர்களுக்கு மத்தியில், நாகை அ.ம.மு.க. வேட்பாளரான மஞ்சுளா, வேறொரு டெக்னிக்கை பிரச்சாரத்தில் கையில் எடுத்தார். அவரது கணவர் சந்திரமோகன், நாகை ஒன்றிய மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றவர்.

signal

அவர் கடந்த ஆண்டு கொரோனாத் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துவிட்டார். கணவரின் செல்வாக்கைத் தன் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய மஞ்சுளா, தன் கணவர் சந்திர மோகனின் புகைப்படத்தைப் பிரச்சார வாகனத்தில் கட்டிக்கொண்டு போய், வாக்கு சேகரித்தார். இஸ்லாமியர்கள் அதிகமுள்ள நாகைப் பகுதியில் கோட்டைவாசல், அக்கரைகுளம், பெருமாள் கோவில் தெரு, நாலுகால் மண்டபம், வெளிப்பாளையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் தன் கணவர் படத்துடன் ஓட்டுக்கேட்டு வந்ததைப் பார்த்து ’"உச்'’ கொட்டினர். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினர். மஞ்சுளா, கூடுதல் இரக்கத் துக்காக தன் மகனோடும் வலம்வந்ததைப் பார்க்க முடிந்தது.

-க.செல்வகுமார்

தோழரிடம் சிக்கியது 377 ரூபாய்தான்!

வாக்குப்பதிவு நெருக்கத்திலும் பா.ஜ.க.வுக்கான ‘கரசேவையில் ஈடுபட்டுவரும் வருமானவரித்துறையினர், கிருஷ்ணகிரி மாவட்ட தளி தொகுதியில் பரபரப்பாக வலம்வந்தனர். அங்கு தாமரை வேட் பாளர் நாகேஷ்குமாரை எதிர்த்துப் போட்டியிடும் சி.பி.ஐ. வேட்பாளர் ssராமச்சந்திரனுக்காக தேர்தல் வேலை பார்த்துவருகிற, அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.மகேந்திரனைப் பற்றி விசாரித்தனர். பின்னர் அவர் தங்கி யிருந்த ’சிட்டி’ விடுதியை நள்ளிரவு 1 மணியளவில் முற்றுகையிட்டனர். அவர்களுக்குத் துணையாகத் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரும் வந்திருந் தனர். தூங்கிக்கொண்டிருந்த மகேந்திரனைக் கதவைத் தட்டி எழுப்பி, அந்த அறைக்குள் நுழைந்த அதிகாரிகள், அங்கே மாற்றுடைகளும் ஓரிரண்டு புத்தகங்களும் மட்டுமே இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். இருந்தும், "உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? எடுத்து வையுங்கள்' என்றனர் விறைப்பாக. மகேந்திரனோ, தன் சட்டைப்பை உட்பட அங்கே, இங்கே என்று தேடி, சில்லரைக் காசுகள் உட்பட முன்னூற்று எழுபத்தேழு ரூபாயை எடுத்து, அவர்களிடம் கொடுக்க, அதைக்கண்டு திகைத்த அதிகாரிகள்... சங்கடத்தோடு ஸாரி சொல்லிவிட்டு வெளியேறினர். இது குறித்து நம்மிடம் விவரித்த மகேந்திரன், ""அன்று மாலைதான், கர்நாடக மந்திரிகள் இங்கே தங்கி வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டி யிருந்தேன். ஆனால், தமிழ் தெரியாத அந்த வருமானவரித்துறை அதிகாரிகளை என் பக்கம் திருப்பி, அவர்களையும் சங்கடப்படுத்தி விட்டார்கள். பெரிய வேட்டையாக இருக்கும் என்று நினைத்து வந்தவர்கள், என்னிடம் இருந்த சில்லறைப் பணத்தைப் பார்த்து... பாவம் அவர்கள் திகைத்துப் போய்விட்டார்கள்''’என்றார் புன்னகையோடு.

-இரா.பகத்சிங்

nkn100421
இதையும் படியுங்கள்
Subscribe