முத்தரையர் ஓட்டு யாருக்கு?
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், தங்கள் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கட்சிக்காரர் ஒருவருக்கே சீட் கொடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடி பிடித்து வருகின்றனர். ஆனால், அமைச்சர் விஜய பாஸ்கரோ, இங்கே 2 முறை வெற்றி பெற்றதோடு, தற்போது 3-வது முறையாகவும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார். மேலும் இந்தத் தொகுதியை தன் வசமே வைத்துக்கொள்ளும் எண்ணத்தில், அங்கே 6 முறை தனது சி.வி.பி. பேரவை சார்பில், நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறார். எனினும், கடந்த 3-ந் தேதி, ஆலங்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞரும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவருமான நெவளிநாதன் சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுத்து, அமைச்சர் தரப்பின் பிரஷரை எகிற வைத்திருக்கிறார். போதாக்குறைக்கு, பா.ஜ.க.வைச்
முத்தரையர் ஓட்டு யாருக்கு?
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில், தங்கள் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்த கட்சிக்காரர் ஒருவருக்கே சீட் கொடுக்கவேண்டும் என்று அ.தி.மு.க.வைச் சேர்ந்த அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடி பிடித்து வருகின்றனர். ஆனால், அமைச்சர் விஜய பாஸ்கரோ, இங்கே 2 முறை வெற்றி பெற்றதோடு, தற்போது 3-வது முறையாகவும் தேர்தல் களத்தில் குதித்திருக்கிறார். மேலும் இந்தத் தொகுதியை தன் வசமே வைத்துக்கொள்ளும் எண்ணத்தில், அங்கே 6 முறை தனது சி.வி.பி. பேரவை சார்பில், நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறார். எனினும், கடந்த 3-ந் தேதி, ஆலங்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. வழக்கறிஞரும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவருமான நெவளிநாதன் சீட்டு கேட்டு விருப்ப மனு கொடுத்து, அமைச்சர் தரப்பின் பிரஷரை எகிற வைத்திருக்கிறார். போதாக்குறைக்கு, பா.ஜ.க.வைச் சேர்ந்த சில முத்தரையர் சமூகப் பிரமுகர்களும், தங்களுக்குத் தொகுதியை ஒதுக்கவேண்டும் என்று தேர்தல் அலுவலகத்தையே திறந்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் அமைச்சர் தரப்பை டென்ஷனாக்கி வருகிறது.
இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு, "முத்தரையர் ஓட்டு முத்தரையருக்கே' என்றும், ’’"விராலிமலை தொகுதியில் முத்தரையருக்கே வாய்ப்புக் கொடுக்க வேண்டும்'’’என்றும் பரபர போஸ்டர்கள் அங்கங்கே முளைக்க... இதைக் கண்ட தேர்தல் அதிகாரி புகார் கொடுத்ததின் பேரில், விராலி மலை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்களோ, ""கடந்த காலத்தில் ஒரு முத்தரையர் பிரச்சினையில் அமைச்சர் சிக்கினார். உடனே அதனை சரிசெய்து புகார் கொடுத்த சொக்கலிங்கத்தை, தன்னுடன் வைத்துக்கொண்ட தோடு தொடர்ந்து கட்சிப் பதவி, வாரியப் பதவின்னு கொடுத்து, அவரை தன்னுடனேயே வைத்திருக்கிறார். அதனால் முத்தரையர் மக்கள் அவருக்கு அனுசரணையாகத்தான் இருப்பார்கள்''’என்கிறார்கள் நம்பிக்கையோடு.
-இரா.பகத்சிங்
மோடிக்கு எலும்புக்கூடு பார்சல்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தின் நோக்கமே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை மீண்டும் இந்தியா விற்குள் கொண்டுவந்து, நம்மை மலடாக்குவதுதான்!- என்றபடி, திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் விவசாயிகள் மேலாடையின்றி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
மரபணு விதைகளால் ஆண், பெண் உடல்களில் மரபணு மாற்றத்தை ஏற்படுத்தி, மலடாக்கும் என்று பொங்கும் விவசாயிகள், வேளாண் சட்டத்தைக் கொண்டுவந்த பிரதமர் மோடிக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், அவருக்கு மண்டை ஓடு, எலும்புக் கூடுகள் உள்ளிட்டவற்றை பார்சல்மூலம் அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆவேசத்துடன் தெரிவித்தனர். அப்படி அனுப்பப்படுவதன் நோக்கம், இனி சந்ததிகளே இல்லாமல் இந்தியாவையும் தமிழகத்தையும் அழிக்க நினைக்கும் மோடி கும்பலுக்கு, தமிழக விவசாயிகளின் கடும் வெறுப்பை உணர்த்துவதன் அடையாளம்தான் இது என்றும் தெரிவித்தனர் .
-மகேஷ்
தேர்தலைப் புறக்கணிக்கும் கிராமம்!
நாகை பவர் பிளாண்ட் நிறுவனத்தை கண்டித்து நாகை ஒக்கூர் கிராம மக்கள், தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியைக் கட்டியபடி... "தேர்தலைப் புறக்கணிப்போம்'’என்கிற முழக்கத்தோடு பெரும் போராட்டத்தைத் துவங்கியுள்ளனர்.
காரணம், கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த பவர் பிளாண்ட் நிறுவனம் தொடங்கப்பட்டபோது, வாழ ஒக்கூர், நரிமணம், முட்டம் உள்ளிட்ட கிராமங்களில் 80 சதவிகித விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அப்போது அங்குள்ள பிள்ளைகளுக்கு கல்வியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளும், இன்னும் பல சலுகைகளையும் வழங்கப்படும் என்றும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டது. ஆனால் நிறுவனம் தொடங்கப்பட்டு பதிமூன்று ஆண்டுகள் ஆகியும் அம்மக்களை ஏமாற்றிவருகிறது அந்த நிறுவனம்.
போராட்டக் களத்தில் நிற்கும் அப்பகுதி மக்கள் “ அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி எங்கள் பகுதி இளைஞர்களுக்கு நிரந்தர வேலைகளை வழங்க வேண்டும். கிராமத்தை மேம்படுத்த வேண்டும். நிலக்கரி துகள்கள் காற்றில் பரவி, சுவாச பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளைத் திரும்ப பெறவேண்டும். அதற்காகத்தான் இந்தப் போராட்டம். நாங்கள் தேர்தலைப் புறக்கணிக்கவும் முடிவு செய்திருக்கிறோம்’’ என்று கொதிப்பை வெளியிட்டதோடு, இப்போது "எங்களுக்கு வாழ வழி இல்லை'’என்று விளம்பரமாகவும் எழுதி வைத்து, அரசு அதிகாரிகளுக்கு தலைவலியை உண்டாக்கியுள்ளனர்.
-க.செல்வகுமார்