சிக்னல் நெடுவாசல் கோவிலில் பரப்புரை!

signal

நெடுவாசல் கோவிலில் பரப்புரை!

இன்னும் கூட்டணிக் கட்சிகளுக்குள் இழுபறிக் காட்சிகள் தொடர்ந்து வரும் நிலையில், எந்த சைடில் இருந்து எந்தக் கட்சி பிச்சிக்கப் போகுதோ? என்கிற விவாதங்கள், இப்போது அரசியல் களத்தில் புழுதி கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ’நாம் தமிழர் கட்சி’ ஒரே மேடையில் தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஏற்பாடுகளில் விறுவிறுப்பாகிறது.

signal

சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள்ஓட்டுக்கேட்டு, களத்தில் ஓடியாடத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பட்டியலில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி வேட்பாளரான திருச்செல்வம், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஹைட்ரோ கார்பன் போராட்டத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நெடுவாசலில் இருந்து பி

நெடுவாசல் கோவிலில் பரப்புரை!

இன்னும் கூட்டணிக் கட்சிகளுக்குள் இழுபறிக் காட்சிகள் தொடர்ந்து வரும் நிலையில், எந்த சைடில் இருந்து எந்தக் கட்சி பிச்சிக்கப் போகுதோ? என்கிற விவாதங்கள், இப்போது அரசியல் களத்தில் புழுதி கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ’நாம் தமிழர் கட்சி’ ஒரே மேடையில் தங்கள் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் ஏற்பாடுகளில் விறுவிறுப்பாகிறது.

signal

சம்மந்தப்பட்ட வேட்பாளர்கள்ஓட்டுக்கேட்டு, களத்தில் ஓடியாடத் தொடங்கிவிட்டார்கள். இந்தப் பட்டியலில் இருக்கும் புதுக்கோட்டை மாவட்ட ஆலங்குடி வேட்பாளரான திருச்செல்வம், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை ஹைட்ரோ கார்பன் போராட்டத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நெடுவாசலில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

முன்னதாக, அங்குள்ள சிவன் மற்றும் நாடியம்மன் கோயில்களில் துண்டுப் பிரசுரத்தை வைத்து வழிபட்டார். பின்னர் அங்கே போராட்டம் நடத்த ஆலமரத் தடியில் திரண்டிருந்த பெண்களிடம் துண்டறிக்கை கொடுத்து,

""எங்களுக்கு நீங்கள் வாக்களித்தால் 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாள் வேலைத் திட்ட மாக்குவோம். ஆடு மாடு மேய்ப்பதை அரசு வேலையாக்குவோம். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம். உங்கள் வாக்குகளால் விவசாயியான நானும் எங்கள் கட்சிக்காரர்களும் வெற்றிபெறுவோம். அதனால் எங்களை ஆதரியுங்கள்'' என்றபடி, அசராமல் வாக்குறுதிகளை அள்ளிவிட்டார். "அடியே, ஆடு மாடு மேய்க்கறதும் அரசாங்க வேலையா ஆகப் போவுதாமுள்ள...?' என, இதைக்கேட்ட அந்தப் பெண்கள், ஆச்சரியத்தை வெளிப் படுத்தி, ஆதரவு தெரிவித்தனர்.

-இரா.பகத்சிங்

ஓட்டுக்கு கொலுசு?

சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தம்பட்டியில், கடந்த 3-ந் தேதி, தேர்தல் பறக்கும் படையினர், அலுவலர் பிரபாகரன் தலைமையில் கடந்த 3-ந் தேதி இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கிச் சோதனை போட்டனர். அதில், மூன்று பெரிய பைகளில் புத்தம் புதிய வெள்ளிக் கொலுசுகள், 13 பொட்டலங்களில் இருந்தது. டூவீலரை ஓட்டி வந்த, செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சந்திரகாந்த்தோ, “ நான் வியாபாரி. பனங்காடு பகுதிக்குக் கொலுசுகளை மொத்த விற்பனைக்காக கொண்டு செல்கிறேன்'' என்றார்.

ss

மேலும் விசாரித்தபோது, மொத்த விற்பனையாளர் யார் என்ற விவரங்கள் தனக்குத் தெரியாது என்று அவர் மழுப்ப, அவரிடம் இருந்த 74.73 கிலோ கொலுசுகளைப் பறிமுதல் செய்தனர்.

அவற்றின் மதிப்பு 35 லட்சம் ரூபாயாகும். பறிமுதல் செய்யப் பட்ட கொலுசுகள் சேலம் கருவூலத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்க, சந்திரகாந்த் விசாரணை வளையத்தில் சிக்கிகொண்டிருக்கிறார்.

-இளையராஜா

வி.ஏ.ஓ.வை பூட்டி வைத்த தே.மு.தி.க.!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அனைத்து அரசுத் துறைகளும் அதிகாரிகள் வசம் வந்திருக்கிறது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கீழ் கூத்தப்பாக்கத்தில், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனும் வருவாய் துறை ஊழியர்களும் சென்றனர். அவர்கள் அங்கிருந்த தே.மு.தி.க. கொடிக் கம்பத்தை அகற்ற முயன்ற போது, அந்தக் கட்சியின் பிரமுகரான மூர்த்தி, தங்கள் கட்சியின் கொடிக் கம்பத்தில் யாரும் கை வைக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்குப் போன மூர்த்தி, கிராம நிர்வாக அலுவலரை ஒரு அறையில் வைத்துப் பூட்டி விட்டார். இதையறிந்த பொதுமக்கள், திரண்டு வந்து அவரை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட தீனதயாளன், இதுகுறித்து கிளியனூர் காவல் நிலையத்திற்குப் போய் புகார் செய்ய, போலீஸ் டீம் உடனே பாய்ந்து சென்று, தே.மு.தி.க. மூர்த்தியைக் கைது செய்து அள்ளிக்கொண்டு போய்விட்டது. இது கிளியனூர் ஏரியாவையே பரபரப்பில் மூழ்கடித்திருக்கிறது.

-எஸ்.பி.எஸ்.

nkn100321
இதையும் படியுங்கள்
Subscribe