பத்திரிகையாளர்களுக்கு படம் காட்டிய ஓ.பி.எஸ்.
தமிழக பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் கலைஞர். அத்துடன் சென்னை திருவான்மியூரில் பத்திரிகை யாளர்களுக்கான குடியிருப்பும் கலைஞர் ஆட்சியில்தான் கட்டப்பட்டது. மதுரை யிலும் அவர் ஆட்சியில் பத்திரிகையாளர் களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட பல நகரங்களில் கலைஞர் ஆட்சியில்தான் பத்திரிகையாளர்களுக்கு 3 செண்ட் வீதம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சியில் சேலம், திருவண்ணாமலை, கோவை என ஒன்றிரண்டு மாவட்டங்களில்தான் அதுவும் நீண்ட வலியுறுத்த லுக்குப் பின்தான் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த வரிசையில் வீட்டுமனைப் பட்டா வழங்க
பத்திரிகையாளர்களுக்கு படம் காட்டிய ஓ.பி.எஸ்.
தமிழக பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தவர் முதல்வர் கலைஞர். அத்துடன் சென்னை திருவான்மியூரில் பத்திரிகை யாளர்களுக்கான குடியிருப்பும் கலைஞர் ஆட்சியில்தான் கட்டப்பட்டது. மதுரை யிலும் அவர் ஆட்சியில் பத்திரிகையாளர் களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை, திருச்சி, திண்டுக்கல், திருநெல்வேலி உட்பட பல நகரங்களில் கலைஞர் ஆட்சியில்தான் பத்திரிகையாளர்களுக்கு 3 செண்ட் வீதம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சியில் சேலம், திருவண்ணாமலை, கோவை என ஒன்றிரண்டு மாவட்டங்களில்தான் அதுவும் நீண்ட வலியுறுத்த லுக்குப் பின்தான் பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. அந்த வரிசையில் வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பலவிதத்திலும் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர், போராட்டத்தில் இறங்கவும் ஆயத்தமானார் கள். இந்த நிலையில்தான் தேனி அருகே உள்ள வீர பாண்டியில் 0.83 ஹெக்டேர் பஞ்சமி நிலத்தை நத்தமாக மாற்றி 53 பத்திரிகையாளர் களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க 2020 நவ.12-ஆம் தேதி அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.
கடந்த பிப்.18-ஆம் தேதி அந்த 53 பத்திரிகையாளர்களையும் அழைத்து வீட்டுமனைப் பட்டாவுக் கான அரசாணையை வழங்கினார் துணைமுதல்வர் ஓ.பி.எஸ். அரசாணையைப் பெற்றுக் கொண்டு நிலத்தைப் போய்ப் பார்த்தபோது அதிர்ச்சியாகி விட்டனர் பத்திரிகையாளர்கள். காரணம் அந்த இடம் ஆக்கிரமிப்பு சம்பந்தமாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இருவர் வழக்குப் போட் டுள்ளனர். மேலும் இருநூறுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அந்த நிலத்தில் இருக்கின்றன. இது தங்கள் நிலம்தான் என்பதில் உறுதியாக உள்ளனர் மேற்படி இருவரும்.
""கோர்ட்ல கேஸ் இருக்கும் நிலத்தைக் கொடுத்து பத்திரிகையாளர் களுக்கே படம் காட்டிவிட்டார்'' என் கிறார் தி.மு.க. மா.செ. தங்க தமிழ்ச்செல்வன்.
-சக்தி
காந்திக்கே காந்தி கணக்கு!
ஆட்சி முடியப்போற நேரத்துல 200 கோடி, 400 கோடி, 1000 கோடி டெண்டரை யெல்லாம் சர்வசாதாரணமாக விட்டு கல்லாக் கட்டுகிறார்கள். கவர்மெண்ட் போஸ்டிங்கிலும் புகுந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டசபையில் 23-ஆம் தேதி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கூட 12 ஆயிரம் புதிய பஸ்களை வாங்கப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு துணிச்சலாக காரியத்தில் இறங்குபவர்களுக்கு மகாத்மா காந்தியையும் விட்டு வைக்க மனசில்லை போல. கரூர் லைட்ஹவுஸ் ரவுண் டானா அருகே காங்கிரஸ் சார்பில் நிறுவப்பட்ட காந்தி சிலை ஒன்று எழுபது ஆண்டுகளாக உள்ளது.
ரவுண்டானாவின் அகலத்தைக் குறைத்து சாலையை விரிவுபடுத்தப் போவதாகச் சொல்லி இரவோடு இரவாக திடீரென அந்த காந்தி சிலையைத் தூக்கினார்கள். பனியன் கம்பெனி உரிமையாளர்கள் சார்பில் புதிய காந்தி சிலையை நிறுவி அதை முதல்வர் எடப்பாடி திறந்து வைக்கப் போவதாக சொல்லி சிலைக்கான பீடத்தையும் கட்டி முடித்தார்கள். புதிய சிலை வடிவமைக்கவோ, பீடம் கட்டவோ தகுந்த ஆட்கள்மூலம் செய்யவில்லை. இதையெல்லாம் கேள்விப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, சிலை அமையவுள்ள பீடத்தைத் தொட்டுப் பார்த்தவுட னேயே காய்ந்த கடலைப் பொரிபோல சிமெண்ட் பூச்சு உதிர்ந்துவிட்டது.
கடன் வாங்கியவர்கள் பலர், "காந்தி கணக்குல எழுதிக்க' என வேடிக்கையாகச் சொல்வார்கள். ஆனால் இவர்களோ காந்திக்கே கணக்கு எழுதிவிட்டார்கள். கேள்வி கேட்ட எம்.பி. ஜோதிமணியையும் கரூர் காங்கிரசாரையும் கைதுசெய்து வேனில் ஏற்றியது அ.தி.மு.க போலீஸ்.
-மகேஷ்
தமிழை வளர்க்க பஞ்சாபி?
மத்திய அரசின் திட்டமான நாட்டு நலப்பணித் திட்டம், ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளிலும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தன்னலமற்ற சேவையின் தேவையை உணர்த்தும் நோக்கத்தோடு, மாணவர்களுக்கு, சமூக சேவைக்கான பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன. இதற்காக நடத்தப்படும் குறுகிய கால முகாம்களின் போது, அந்தந்த மாநில மொழிகளின் இலக்கிய நிகழ்ச்சிகளும், பரிசளிப்பும் நடத்தப்படுவது வழக்கம். அதன் மூலமும் இங்கே தமிழ்மொழியில் படைப் பாக்கம் வளர்ந்து வந்த நிலையில், தற்போது சென்னைப் பல்கலைக் கழகத்தின் நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப் பாளராக தமிழ் தெரியாத பஞ்சாபிப் பேராசிரியரான அனிதா அகர்வாலை நியமித்திருக்கிறார்கள்.
அந்தப் பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள 128 கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்டத்தையும் இவர்தான் கவனிக்கிறவராம். இப்படி இருந்தால் எப்படித் தமிழ் வளரும் என்று பேராசிரியர்கள் பலரும் கேட் கிறார்கள். அந்தப் பெண் பேராசிரியரின் கணவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் என்பது கூடுதல் தகவல்.
-நமது நிருபர்